ஞாயிறு, 30 ஜூன், 2013

குமுதம் பக்தி இந்த வார ராசிபலன் 30-06-20130t to 6-07-2013

வணக்கம்
இந்த வார ராசிபலன்கள்




 30-06-20130t to 6-07-2013

கீழே உள்ள லிங்க் அழுத்தி பாருங்கள் 

உங்கள் லேப்டாப் பேட்டரி மின்சக்தி பராமரிக்க டிப்ஸ்

உங்கள் லேப்டாப் பேட்டரி
மின்சக்தி பராமரிக்க டிப்ஸ்
தினமலர் கம்ப்யூட்டர் மலர்



லேப்டாப் கம்ப்யூட்டர் இன்று நம்பிக்கைக்குரிய தோழனாக உருவெடுத்துள்ளது. நாம் எங்கிருந்தாலும், அது சந்தையாக இருந்தாலும், விமான நிலையத்தின் ஓய்வு அறையாக இருந்தாலும், நம் வர்த்தக நடவடிக்கைகளை, அலுவலகப் பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும். இன்றைய போட்டி மிகுந்த உலகில் நம்முடைய நல்ல ஆயுதமாக, நம் லேப்டாப் கம்ப்யூட்டர் உருவெடுத்துள்ளது.
ஆனால், இந்தப் புகழ் மாலை எல்லாம், லேப்டாப்பின் பேட்டரி உயிர்த்துடிப்போடு, மின் சக்தியை வழங்கும் வரை தான். அனைத்து தகவல்களையும் வரிகளில் அமைத்து, பிரசன் டேஷன் ஸ்லைடுகளை அமைக்க இருக்கையில், "லோ பவர்' என்று ஓர் எச்சரிக்கை கொடுத்து, லேப்டாப் முடங்கிவிடும். சுற்றிலும் எந்த இடத்திலும், மின் சக்தியை வழங்கும் ப்ளக் பாய்ண்ட் இருக்காது. அப்போதுதான், அடடா! ஏன் தான் இதனை வாங்கிப் பயன்படுத்தினோமோ என்று லேப்டாப் கம்ப்யூட்டரை வசை பாடத் தொடங்குவோம். ஆனால், பவர் மீண்டும் கிடைத்தவுடன், மீண்டும் அன்பும், பாராட்டும் நம் மனதில் அருவியாய்க் கொட்டும். சற்று முன் வந்த தலைவலி, காணாமல் போயிருக்கும்.
இந்த தலைவலி வராமல் இருப்பதற்கான மருந்து எங்கே உள்ளது? லேப்டாப் கம்ப்யூட்டரின் பேட்டரியை நன்கு பராமரித்து வந்தால், நிச்சயம் தலைவலி வராது. பேட்டரியை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் எனச் சில அடிப்படை வழிகளை இங்கு காணலாம்.
1. மின் இணைப்பு தரவும்: எப்போதெல்லாம் இயலுமோ, அப்போதெல்லாம், லேப்டாப் கம்ப்யூட்டரை மின் சக்தி வழங்கும் ப்ளக் பாய்ண்ட்களில் செருகவும். எப்போதும் முழுமையான சார்ஜ் இருக்கும் வகையில், லேப்டாப்பின் பேட்டரிக்குத் தீனி போட்டுவிட்டால், நம் கம்ப்யூட்டர் நம்மைக் கைவிடாது. உங்கள் பவர் சார்ஜர் போல இன்னொன்றினைக் கேட்டு வாங்கி வைத்துக் கொண்டால், ஒன்றை அலுவலகத்திலும், மற்றொன்றை செல்லும் இடங்களிலும் பயன்படுத்தலாம். அடிக்கடி வீட்டில் நீங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதாக இருந்தால், அங்கு வைத்துப் பயன்படுத்தவும் ஒன்றினை உபரியாக வைத்திருக் கவும்.
தொடர்ந்து மின்சக்தி வழங்கும் இணைப்புகளில் தொடர்பினை ஏற்படுத்தி வைத்தால், பேட்டரியின் வாழ்நாள் குறைந்துவிடும்; பேட்டரியின் வெப்ப நிலை அதிகமாகி வீணாகத் தொடங்கும் என்ற உண்மைக்கு மாறான எண்ணத்தினை நீங்கள் கொண்டிருந்தால், அதனை நீக்கிவிடுங்கள். இப்போது கிடைக்கும் பேட்டரிகள், குறிப்பாக லித்தியம் அயன் பேட்டரிகள். தாங்கள் முழுமையாக சார்ஜ் ஆனவுடன், மின்சக்தியைப் பெறுவதனைத் தாங்களாகவே நிறுத்திக் கொள்ளும் திறன் கொண்டவை. எப்போதும் முழுமையாக சார்ஜ் செய்திருப்பது, பேட்டரியின் திறனை அதிகப்படுத்தவே செய்திடும்.
2. திரையில் ஒளி அமைப்பை குறைத்திட: லேப்டாப் கம்ப்யூட்டரின் திரையின் ஒளித்திறன் வெளிப்பாட்டை எப்போதும் குறைவாகவே வைத்திருக்க வேண்டும். இப்போது எல்.இ.டி. பேக் லைட்ஸ் கொண்ட திரைகளே லேப்டாப் கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படுகின்றன. முன்பு சி.ஜி.எப்.எல். (CCFL cold cathode fluorescent tube) இருந்த இடத்தில் இவை இடம் பெற்றுள்ளன. இருப்பினும், லேப்டாப் திரையின் ஒளி வெளிப்பாடு, அதன் பேட்டரியின் வாழ்நாள் நீட்டிப்பில் முக்கிய இடம் கொண்டுள்ளது. கம்ப்யூட்டர் பயன்படுத்தும் மின் சக்தியில் பெரும் அளவு திரையின் ஒளி வெளிப்பாட்டிற்குச் செலவாகக் கூடாது. எனவே ஒளி வெளிப்பாட்டினைக் குறைவாகவே வைத்து இயக்க வேண்டும்.
மேலும், லேப்டாப் கம்ப்யூட்டரை வைத்து பணி புரியும் இடத்தினையும் சரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அறையில் அதிக அளவில் வெளிச்சம் கொடுக்கும் விளக்குகள் உள்ள இடத்தைக் காட்டிலும், குறைவான வெளிச்சம் உள்ள இடத்தில், லேப்டாப் கம்ப்யூட்டரை வைத்து இயக்குவதே நல்லது.
திரை ஒளி வெளிப்பாடு எடுத்துக் கொள்ளும் மின்சக்தியைக் குறைத்திட, விண்டோஸ் சிஸ்டம் வழங்கும், தானாக இயங்கும் பேக் லைட் கண்ட்ரோல் டூலைப் பயன்படுத்தலாம். இதற்குக் கண்ட்ரோல் பேனல் சென்று, Hardware and Sound > Power Options எனத் தேர்ந்தெடுக்கவும். இதில் ஆக்டிவ் பவர் பிளான் தேர்ந்தெடுக்க, Change plan settings என்பதைத் தேர்ந்தெடுக்கவும். ‘Dim the display’ மற்றும் ‘Turn off the display’ என்பதன் கீழ், 1 முதல் 3 நிமிடங்கள் என்ற கால வரையறையை அமைக்கவும். லேப்டாப் கம்ப்யூட்டர் பேட்டரி சக்தியில் இயங்குகையில், திரை ஒளியை மட்டுப்படுத்தி அல்லது முழுவதுமாக நிறுத்தி பேட்டரியின் சக்தியைப் பாதுகாக்கும். Change advanced power settings என்பதில் கிளிக் செய்து, ஒளி வெளிப்பாட்டின் ஒளி எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதனை செட் செய்திடலாம்.
3. தவறான அப்ளிகேஷனை கண்டறிய: பேட்டரியின் சக்தியினை அதன் வாழ் நாளுக்கு முன்னரே, முடக்கிப் போடுவதில், தவறான இயக்கத்தைக் கொண்டிருக்கும் புரோகிராம்களாகும். இவை ப்ராசசரின் உழைப்புச் சுற்றினைத் தேவையற்ற அளவில் மிகுதியாக மேற்கொள்ளும். இதனால், அதற்கேற்ற வகையில் மின்சக்தி வீணாகச் செலவழியும். அதே போல, கம்ப்யூட்டர் இயக்கத்தின் பின்னணியில், தேவையில்லாமல் இயங்கும் புரோகிராம்களும், கிராஷ் ஆகி நிற்கும் அப்ளிகேஷன்களும் மின் சக்தியினை வீணாக்கும். இணைய பிரவுசர் அப்ளிகேஷன்கள் இந்த வகையில் அடிக்கடி முடங்கிப் போய், மின் சக்தியினை வீணாக்கும். ஏனென்றால், பிரவுசர்களில் உள்ள அதிகமான ப்ளக் இன் புரோகிராம்கள் மற்றும் பிரவுசரில் பதியப்பட்டிருக்கும் ஸ்கிரிப்டிங் இஞ்சின்கள் இந்த வகையில் தொல்லை கொடுப்பதாக அமைகின்றன.
நவீன சி.பி.யு.க்கள், தானாகவே, தங்களின் செயல்பாட்டிற்கான க்ளாக் ஸ்பீடை, மிகக் குறைந்த அளவிற்கு மாற்றிக் கொள்ளும் திறன் படைத்தவையாக உள்ளன. ஆனால், அப்ளிகேஷன் புரோகிராம் எதுவும் செயல்படாமல் இருக்கும் நிலையிலேயே, இந்த செயல்பாட்டினை சி.பி.யு.க்கள் மேற்கொள்ளும். வெட்டித்தனமான புரோகிராம்களை முடக்கி வைக்கவில்லை என்றால், அவை பேட்டரியின் திறனைத் தேவையற்ற வகையில் குறைப்பதனைத் தடுக்க இயலாது. லேப்டாப்பில் உள்ள வெப்பம் வெளியேற்றப் பயன்படும் சிறிய மின்விசிறிகள் திடீர் திடீர் எனத் தங்களின் வேகத்தினை அதிகப்படுத்தினால், அவை வீணாக இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்களால் தான் எனக் கொள்ளலாம்.
இந்தப் பிரச்னையைத் தீர்ப்பது மிக எளிது. Ctrl Alt Delete கீகளை ஒரு சேர அழுத்தவும். விண்டோஸ் டாஸ்க் மேனேஜரை இயக்கவும். இதில், தேவையின்றி, அதிக மின்சக்தியையும், ப்ராசசரின் செயல்பாட்டு வேகத்தினையும் பயன்படுத்தும். இவற்றை அடையாளம் கண்டு நிறுத்த வேண்டும். பின்னர் நீக்க வேண்டும்.
ஒரு புரோகிராம் வழக்கமான முறையில் நிறுத்தப்பட இயலவில்லை எனில், அதன் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் பட்டியலில், Kill Process என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். என்ன செய்தும், புரோகிராம்கள் மட்டுப்படவில்லை எனில், கம்ப்யூட்டர் சிஸ்டத்தினை ரீ ஸ்டார்ட் செய்வதே ஒரே வழி.
4. பின்னணியில் இயங்கும் புரோகிராம்கள்: பேட்டரி சக்தியில் இயங்குகையில், லேப்டாப் இயக்கத்தின் பின்னணியில் செயல்படும் தேவையற்ற புரோகிராம்களை நிறுத்திவிடலாம். குறிப்பாக கம்ப்யூட்டர் இணைய இணைப்பில் இருக்கையில், பல புரோகிராம்கள் ப்ராசசரின் சக்தியைப் பயன்படுத்தி, இணைய தளங்களைத் தொடர்பு கொண்டு, பெரிய அளவிலான அப்டேட் புரோகிராம்களை டவுண்லோட் செய்து கொண்டிருக்கும். இவை பேட்டரியின் சக்தியை வீணடிக்கும் என்பதால், இவற்றை நிறுத்திவிடலாம்.
5. தேவையற்ற சாதனங்கள்: லேப்டாப் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ள, பயன்படுத்தாத சாதனங்களை நீக்கிவிடலாம். உள்ளாக இணைந்த மோடம், வை-பி, புளுடூத் போன்றவை பயன்படுத்தப்படவில்லை எனில், செயல்பாட்டினை நிறுத்தி வைக்கலாம்.
மேலே தரப்பட்டுள்ள செயல்பாடுகளை நாம் மிக எளிதாக மேற்கொண்டு, பேட்டரியின் வாழ்நாளை அதிகரிக்கலாம். திடீரென பேட்டரியின் செயல் இழப்பால், நாம் லேப்டாப் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளும் பணிகள் பாதிக்கப்படாமல் இதன் மூலம் பார்த்துக் கொள்ளலாம்.
Click Here
 ப்டாப் பேட்டரி

தினமலர் கம்ப்யூட்டர் மலர் 1-07-2013

வணக்கம் நண்பர்களே 
இன்று நான் வழங்குவது 

தினமலர் கம்ப்யூட்டர் மலர் 1-07-2013


மணிவண்ணன் மரணம் பாரதிராஜா காரணமா பரபரப்பான நக்கீரன் படிக்க


மணிவண்ணன் மரணம் பாரதிராஜா காரணமா 
பரபரப்பான நக்கீரன் படிக்க 

1x1.trans Nakkheeran 19 06 2013 | Free Download Nakkheeran PDF This week | Nakkheeran 19th June 2013 E Book


நக்கீரன் டவுன்லோட் லிங்க் skip adசெய்து பார்க்கவும்

fieflash தளம் இந்தியாவில் தடை செய்யப்பட்டு உள்ளதால் 
இந்த லிங்க் மூலம் டவுன்லோட் செய்யவும் 

நக்கீரன் டவுன்லோட் லிங்க் 2  

1x1.trans Kungumam Thozhi 01 06 2013 | Free Download Kungumam Thozhi PDF This week | Kungumam Thozhi 01st June 2013 E Book















குங்குமம் தோழி டவுன்லோட் லிங்க்  skip ad செய்து பார்க்கவும் 

fieflash தளம் இந்தியாவில் தடை செய்யப்பட்டு உள்ளதால்  
இந்த லிங்க் மூலம் டவுன்லோட் செய்யவும் 


குங்குமம் தோழி டவுன்லோட் லிங்க் 2






வாருங்கள் neobux மூலம் சம்பாதிப்போம்

வணக்கம் நண்பர்களே

neobux இல் இணைவோம்

இதுவரை என்னோடு இணைந்த நண்பர்களுக்கு நன்றி

எளிதாக பணம் பண்ண ஒரு நல்ல வாய்ப்பு

ஆனால் பொறுமை வேண்டும்
நான் neobux இல் இணைந்த நாள் 23-02-2013
இன்றோடு நான்கு மாதங்கள் முடிந்து விட்டது

ஆரம்பத்தில் மாதம் ஒன்றிற்கு .6 டாலர் சம்பாதித்தேன்

ஆனால் இன்று 9 rented referral களோடு
 தினமும் .3 டாலர் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டேன்

இன்னும் நான்கு மதங்கள் முடியும்போது
3 டாலர் தினமும் சம்பாதிக்க முடியும்
அதற்கு அடுத்த நான்கு மாதம் கழித்து
3 ௦ டாலர் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது

neobux என்பது ஒரு ptc தளம்
விளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் காசு பண்ணலாம்

ஏற்கனவே இந்த தலைப்பில் நிறைய எழுதி உள்ளேன்
சந்தேகம் உள்ளவர்கள் பணம் பண்ணலாம் வாங்க என்கிற tab அழுத்தி படித்து கொள்ளுங்கள்



அல்லது

இதை கிளிக் செய்து பார்க்கவும்



மேலும் என்னோடு இணைந்து விட்டால் உங்களுக்கு
உள்ள அனைத்து சந்தேகங்களுக்கும்
விடை  கொடுத்து
உங்களையும் என்னைப்போல் சம்பாதிக்க வைப்பேன்
எனது ஈமெயில் முகவரி madurairomanceraja@gmail.com

சரி இணைந்து விட்டேன் எப்படி நான் பணத்தைப் பெறுவது
கேட்பீர்கள்

அதற்கு இரண்டு வழிமுறை உள்ளது
ஒன்று paypal

இந்த தளம் சென்று உங்கள் pancard atmcard ஆகியவைகளை பதிந்து விட்டால்
பணம் நம் bank account உக்கு வந்து விடும்

வழிமுறை இரண்டு payza என்கிற தளம் சென்று உங்கள்
driving licinse அல்லது பாஸ்போர்ட்
கொடுத்து விட்டு உங்கள் bank account எண்ணை கொடுத்து  விட்டால்
பணம் உங்கள் account இற்கு வந்து விடும்

சந்தேகம் உள்ளவர்கள் google சென்று neobux money proof என்று தேடி பாருங்கள்
நீங்கள் இந்த தளம் சென்று உங்கள் ஈமெயில் முகவரி கொடுத்து பதியுங்கள்

அவர்கள் உங்கள் ஈமெயில் உக்கு ஒரு மெயில் அனுப்புவார்கள் அதை க்ளிக் செய்து

neobux மூலம் இணையுங்கள்
என்னோடு பணம் சம்பாதிக்க வாருங்கள்


கீழே உள்ள பேனர் அமுக்கி இணையவும்








சனி, 29 ஜூன், 2013

இன்றைய தினமலர் வாரமலர் 30-06-2013

வணக்கம் நண்பர்களே

இன்று வழங்குவது

தினமலர் வாரமலர் 30-06-2013



வாரமலர் டவுன்லோட் லிங்க் <

WORLD Z WAR ஒரு பார்வை

WORLD Z WAR ஒரு பார்வை
skip ad கொடுத்து விட்டு படிக்கவும் 



இது ஒரு புது முயற்சி

ஒரு பர பரப்பான விசயத்தை
இணையம் முழுக்க தேடி அதனை
இங்கே தொகுத்து தருகிறேன்

1 கருந்தேள் அவர்களின் விமர்சனம்

2 தினகரன் கட்டுரை

3 தினமலர் விமர்சனம்


அப்படி என்ன தான் இருக்கிறது இந்த படத்தில்
எல்லோரும் இந்த படத்தைப் பற்றி
அஹா ஓஹோ என்கிறார்கள்

நான் சொல்வதை விட இணையத்தில் உலா வந்தபோது கிடைத்த
தகவல்கள் உங்களுக்காக
முதலில் ஆங்கில படங்களை அழகாக விமர்சனம் செய்யம் திரு 
கருந்தேள் என்ன சொல்கிறார் பாருங்கள் 
இவர் தளம் செல்ல
இங்கே அழுத்துங்கள்



ஹாலிவுட்டில் வெற்றிகரமாக விற்கும் நாவல்களைத் தழுவி படமெடுப்பது சர்வ சாதாரணம். அப்படி 2006ல் வெளிவந்த World War Z’ என்ற நாவலைப் பற்றியும், அதனைப் படமாக எடுக்கும் உரிமைகளுக்காக நிகழ்ந்த போட்டியைப் பற்றியும், Zombie என்ற வார்த்தையின் பொருளைப் பற்றியும் தினகரன் வெள்ளி மலரில் சென்ற வெள்ளியன்று சிவராமன் பெரியதொரு சுவாரஸ்யமான கட்டுரை எழுதிவிட்டார். எனவே அந்த விபரங்களையே திருப்பி எழுதாமல், வேறு விஷயங்களை எழுதலாம் என்று இருக்கிறேன்.
ஹாலிவுட்டின் ‘Suspension of Disbelief’ என்ற விஷயத்தைப் பற்றி ஏற்கெனவே நமது தளத்தில் பார்த்திருக்கிறோம். அது என்ன என்றால், திரையில் என்ன நடக்கிறதோ அதில் நமது முழு கவனமும் பதிந்திருக்கும்படி அந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கவேண்டும். எந்த லாஜிக்கும் இல்லாமல் அந்தப் படம் இருந்தாலுமே, படம் பார்க்கும் அந்த நேரத்தில் அது ஆடியன்ஸின் மண்டையில் உறைக்காமல், அவர்களுக்கு அந்தப் படம் பிடிக்கவேண்டும். உதாரணம்: ஜுராஸிக் பார்க். பழங்காலத்தில் டைனோஸாரின் ரத்தத்தை உறிஞ்சி, ஃபாஸிலாக மாறிய கொசுவின் ரத்தத்தில் இருந்து டைனோஸார் மறுபடி உருவாகும் என்று சொல்லி ஆடியன்ஸை நம்பவைத்த படம் அது. அதேபோல் E.T, கிங் காங், இண்டிபெண்டன்ஸ் டே, மென் இன் ப்ளாக், டெர்மினேட்டர் முதலிரண்டு படங்கள்- இப்படி ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கிறது. இந்தப் படங்கள் எதிலுமே லாஜிக்கலான, இயல்பு வாழ்க்கையில் நாம் பார்த்து உணர்ந்த விஷயங்கள் இருக்காது. நமக்கு முற்றிலும் அந்நியமான விஷயங்களை எடுத்துக்கொண்டு, அவை நடக்க வாய்ப்புகள் அதிகம் என்று சொல்லி, ஆடியன்ஸை நம்பவைத்து, அதனாலேயே உலகெங்கும் ஓடிய படங்கள் இவை. படம் பார்க்கும்போது ஆடியன்ஸுக்கு லாஜிகல் கேள்விகள் வராது. படம் முடிந்தபின்னர் வேண்டுமானால் வரலாம்.

ஆனால் அதே ஹாலிவுட்டில், இவற்றைப் போன்றே பல படங்கள் இதே Suspension of Disbelief மேட்டரை வைத்து எடுக்கப்பட்டு பயங்கர காமெடிப் படங்களாக அமைந்தும் இருக்கின்றன. உதாரணமாக John Carter திரைப்படம்.
மக்களால் நம்ப இயலாத விஷயங்களை வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள் சில சமயம் நன்றாக ஓடுவதிலும், பல சமயங்கள் அடிமட்ட ஃப்ளாப் ஆவதிலும் இருக்கும் ரகசியம் என்ன?
அதுதான் திரைக்கதையின் சுவாரஸ்யம். திரைக்கதையில் சொல்லப்படும் விஷயங்கள் கேள்விகள் கேட்கப்படாமல் நம்பப்பட வேண்டும். இதில் எங்காவது சுவாரஸ்யம் தப்பினால் உடனடியாக பல கேள்விகள் எழுந்து, படம் காலி.

ஆரம்பத்தில் இந்தப் படத்தின் மீது எனக்கு நல்ல அபிப்ராயமே இருக்கவில்லை. மற்றுமொரு ஸோம்பி திரைப்படம் என்று தான் எண்ணினேன். வழக்கப்படி கடைசி நேரத்தில் ‘போய்த்தான் பார்ப்போமே’ என்று நினைத்து இந்தப் படத்தைப் பார்த்தோம்.
ஆச்சரியகரமாக, இந்தப் படம் எங்களுக்குப் பிடித்ததற்கு, இந்தப் படத்தின் வேகமான திரைக்கதைதான் காரணம்.
இதற்கு முன்னர் வெளிவந்த சில படங்கள் ஸோம்பிகளால் ஏற்படும் அழிவைப் பற்றிச் சொல்லியிருந்தாலும், இந்தப் படத்தின் அளவு பிரம்மாண்டமாக எந்தப் படத்திலும் ஸோம்பிகளைப் பார்த்ததில்லை. Walking Dead போன்ற டிவி ஸீரீஸ்களிலும் கூட, ஸோம்பிகள் இந்த அளவு வந்ததில்லை. புற்றிலிருந்து கிளம்பும் எறும்புகளைப் போல உலக மக்கள் படுவேகமாக ஸோம்பிகளாக மாறுகின்றனர். உலகத்தின் பல நாடுகள் அழிந்தேவிடுகின்றன. வழக்கமான ஸோம்பி ஃபார்முலாதான் இதிலும் இருக்கிறது என்றாலும் (ஸோம்பி ஒரு மனிதனைக் கடித்தால் அவன் ஸோம்பியாகிவிடுவான்), படம் சுவாரஸ்யமாக எடுக்கப்பட்டிருக்கிறது.
படத்தின் கரு, படுவேகமாக பரவும் ஒரு அழிவைப் பற்றியது. பறவைக்காய்ச்சல், சார்ஸ் போன்ற பல வியாதிகள் ஏற்கெனவே நமக்குப் பரிச்சயம் ஆகியிருப்பதால், இந்த ஸோம்பி வைரஸ் அவைகளை வைத்தே இப்படத்தில் உருவாக்கப்பட்டிருப்பதன் லாஜிக் புரிகிறது. ஒருவேளை தடாலென்று இப்படி ஒரு விஷயம் நடந்துவிட்டால்? இந்தக் கேள்விதான் இந்தப் படத்தை சுவாரஸ்யப்படுத்தும் விஷயங்களில் ஒன்று என்று தோன்றுகிறது.
படத்தின் நாயகன் ஜெர்ரி (ப்ராட் பிட்) ஒரு ஐநா முன்னாள் ஊழியன். படத்தில் இந்த ஸோம்பி வைரஸிடமிருந்து தப்பிய அமெரிக்க ராணுவ ஊழியர்களின் கமாண்டர், ஜெர்ரியிடம் இந்த வைரஸின் உருவாக்கத்தை ஆராயச்சொல்லி, இதைப்பற்றி பரிசோதனைகளை மேற்கொண்டுவரும் மருத்துவர் ஃபாஸ்பேக்குக்கு உதவ ஜெர்ரியை நிர்ப்பந்திக்கிறார். இந்த விஷயத்தில் ஃபாஸ்பேக்குக்கு உதவாவிடில் தனது குடும்பம் அங்கிருந்து வெளியேற்றப்படும் என்பதால் ஜெர்ரி சம்மதிக்கிறான். முதலில் ஃபாஸ்பேக்குடன் ஜெர்ரி பயணிக்கும் இடம் – தென் கொரியா. அங்குதான் இந்த ஸோம்பி வைரஸின் முதல் தாக்குதல் நிகழ்ந்திருப்பதாக செய்திகள் கிடைத்திருக்கின்றன. அங்கே, இந்த வைரஸினால் பாதிக்கப்பட்ட கிராமத்தானின் பிணமும், அவனால் கடிபட்ட மருத்துவரின் பிணமும் இருக்கின்றன. ஆனால், இந்த ஸோம்பிகள் தாக்குதலின்போது தப்பிய ஒரு படைவீரனும் அங்கு இருக்கிறான். அவனைச் சுற்றியும் ஸோம்பிக்கள் வந்தபோதும் அவன் எப்படித் தப்பினான்?
இதைத்தொடர்ந்து, இஸ்ரேல் நாடு, ஸோம்பிகளின் தாக்குதலை முன்கூட்டிய அறிந்துகொண்டு ஒரு பாதுகாப்புமிக்க இடத்தை ஏற்படுத்தி, அங்கே அந்நாட்டவர்களை அனுமதித்துக்கொண்டிருப்பதாக ஒரு செய்தி ஜெர்ரிக்குக் கிடைக்கிறது. உடனே இஸ்ரேல் செல்கிறான் (இதற்கிடையில், ஜெர்ரியுடன் தென் கொரியா வந்த டாக்டர் ஃபாஸ்பேக், கால் தடுக்கி விழுந்து தனது துப்பாக்கியால் தவறுதலாக தன்னையே சுட்டுக்கொண்டு இறந்துவிடுகிறார்).
இஸ்ரேல். இந்த ஸோம்பி வைரஸ் முதன்முதலில் இந்தியாவில்தான் உருவானது என்று ஜெர்ரிக்குத் தெரிகிறது. இந்தத் தகவலை முன்கூட்டியே அறிந்த இஸ்ரேலின் உளவுத்துறையான மொஸாடின் தலைவர் வாம்ப்ரன், என்னதான் நம்பவே முடியாத தகவலாக இருந்தாலும் இஸ்ரேலில் பாதுகாப்புமிகுந்த இடம் ஒன்றை ஏற்படுத்தியதாகவும், அதனால்தான் இஸ்ரேல் இந்தத் தாக்குதலிலிருந்து பிழைத்தது என்றும் சொல்கிறார். ஆனால், ஒரு சிறிய தவறின் காரணமாக இஸ்ரேலும் அழிகிறது (எப்படி என்பதை படத்தில் பார்த்துக்கொள்ளவும்).
ஜெர்ரியின் பயணத்தில் இந்த ஸோம்பி வைரஸின் தாக்குதலுக்குத் தப்பித்த சிலரையும் எதேச்சையாக சந்திக்கிறான். ஆனால் முதலில் அதை ஸீரியஸாக எடுத்துக்கொள்ளாத ஜெர்ரி, பின்னால் இதைப்பற்றி ஆராய முற்படுகிறான்.
இஸ்ரேலிலிருந்து தப்பிக்கும் ஜெர்ரி என்ன ஆனான்? இந்த ஸோம்பி வைரஸை அவனால் தடுக்க முடிந்ததா? படம் பார்த்துப் புரிந்துகொள்க.
டெர்மினேட்டர் 2 படத்தைப் பார்த்தவர்களுக்கு, அந்தப் படம், வரிசையான அக்‌ஷன் காட்சிகளால் உருவான படம் என்பது தெரிந்திருக்கும். அதைப்போலவே இந்தப் படத்திலும் வரிசையான, சுவாரஸ்யமான காட்சிகள் ஒன்றின்பின் ஒன்றாக வருகின்றன. இந்தக் காட்சிகளின் வேகத்தால், எந்த ஒரு காட்சியிலும் அலுப்பு தட்டுவதன்முன்பே அடுத்த காட்சி ஆரம்பித்துவிடுகிறது. இதனால் பழைய காட்சியில் எந்தக் கேள்விகளும் எழுவதில்லை.
படத்தில் கதை என்பது பெரிதாக இல்லை. ஆனால் படத்தை எடுத்த விதத்தில்தான் சுவாரஸ்யம் இருக்கிறது. படத்தின் பிரம்மாண்டம்+ஸிஜி+வேகம் ஆகியனவே இந்தப்படம் எனக்குப் பிடித்ததன் காரணம். படத்தின் முதல் காட்சியில் இருந்தே கதை தொடங்கிவிடுகிறது. எந்த வழவழாவும் இல்லை. அதேசமயம், படத்தில் பல டெம்ப்ளேட் காட்சிகளும் இருக்கின்றன. ஆனால், என்னைப்பொறுத்தவரை படத்தில் டெம்ப்ளேட் காட்சிகள் இருந்தாலும், திரைக்கதை வேகமாக இருந்தால், அக்காட்சிகளை மன்னிக்கலாம்.
வேர்ல்ட் வார் ஸீ – படத்தில் எதையும் எதிர்பார்க்காமல் சென்றால் படம் உங்களைக் கவரலாம். ஒருவேளை படம் பார்த்தபின் உங்களுக்குப் பிடிக்காவிட்டால் – well, better luck next time :-)

அடுத்து தினகரன் வழங்கிய கட்டுரை 
இதை நேரடியாக படிக்க இங்கே அழுத்தவும்
அல்லது copy செய்த கட்டுரை 

ஆனால், அதற்கு முன்பு ‘ஸோம்பி’ குறித்து பார்த்துவிடுவோம். அப்போதுதான் ‘வோல்ட் வார் இசட்’ (World War Z) ஹாலிவுட் படம் ஓரளவு புரியும். ஏனெனில் இந்தப் பட டைட்டில் குறிப்பிடும் ‘இசட்’ என்பது ‘ஸோம்பி’யை (zombie) சுட்டுவதுதான். ஸோம்பி? சூப்பர் பவர் கொண்டவர்கள். ரத்த வெறி பிடித்து அலைபவர்கள். குருதியை குடிக்கும் ரத்தக் காட்டேரிகள். கொடூரமானவர்கள். உலகையே அழிப்பவர்கள்... இத்யாதி, இத்யாதி என்றுதானே நினைக்கிறோம்? நம்புகிறோம்? இல்லை. ஹாலிவுட் செய்த பல பாவங்களில் இதுவும் ஒன்று. உண்மையான ‘ஸோம்பி’க்கும், ஹாலிவுட் படங்களில் தோன்றும் ‘ஸோம்பி’களுக்கும் துளிக்கூட தொடர்பில்லை.

ஒரு மனிதனை இறந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால், உயிரை எடுக்கக் கூடாது. அதே நேரம் உணர்வையும் கொடுக்கக் கூடாது. கிட்டத்தட்ட நடைப்பிணம் மாதிரி அந்த மனிதனை மாற்ற வேண்டும். இப்படி மாற்றப்பட்ட மனிதர்களே உண்மையான ‘ஸோம்பிஸ்’.
இவர்கள் பண்ணையில் அடிமைகளாக இருந்தார்கள். இவர்களுக்கு கூலி தர வேண்டாம். உணவும் அவசியமில்லை. வாரத்துக்கு இரண்டு வேளை சாப்பாடு போட்டால் போதும். மற்றபடி மாடு மாதிரி உழைப்பார்கள். ஒருநாளைக்கு 15 மணி நேரங்கள் கூட ‘ஸோம்பி’களால் உழைக்க முடியும். 
தூக்கமோ, ஓய்வோ தேவையில்லை. என்ன கட்டளை தங்களுக்கு இடப்பட்டிருக்கிறதோ அதை மட்டும் செய்வார்கள்... செய்வார்கள்... செய்து கொண்டே இருப்பார்கள்.

இப்படிக் கூட அடிமைகளை உருவாக்க முடியுமா? முடியும். அதைத்தான் ஆப்பிரிக்க மந்திரக் கலையான ‘வூடு’ சென்ற நூற்றாண்டு வரை செய்து வந்தது. இந்த மந்திரக் கலையை கற்றவர்கள், ‘ஸோம்பி’களை உற்பத்தி செய்து மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார்கள். இன்றைய அமெரிக்கா உருவாக, நடைப்பிணமாக மாற்றப்பட்ட இந்த மனிதர்களே காரணம். வூடு மந்திரவாதிகள் ஒரு மனிதனின் ஆன்மாவை பிடுங்கி ஒரு குடுவையில் அடைத்துவிடுவார்கள். அதனால்தான் அந்த மனிதன் உணர்வற்ற நிலையில், நடைப்பிணமாக வாழ்கிறான்... என்று கட்டுக்கதையை அலேக்காக தூக்கி கடாசி விடலாம். உண்மையில் ‘ஸோம்பி பவுடரை’ தண்ணீரில் கலந்து குடிக்க வைத்துத்தான் ‘ஸோம்பி’களை உருவாக்குகிறார்கள். 

இந்த ‘ஸோம்பி பவுடர்’ மூன்று வழிகளில் தயாரிக்கப்படுகிறது. முதலாவது ‘பஃபர்’ என்னும் விஷ மீனைக் கொண்டு தயாரிக்கப்படும் பவுடர். இரண்டாவது ஒருவகை கடல் தவளை அல்லது ஹைலா மரத் தவளையிலிருந்து எடுக்கப்படுவது. மூன்றாவது இறந்த மனிதர்களின் எலும்புகளையும் பிற கழிவுகளையும் கலந்து உருவாகும் பவுடர். இந்த மூன்று வகையிலும் வேறு சில விஷத் தாவரங்கள், விலங்குகளின் கழிவுகள், பல்லி, சிலந்தி, தேள், கண்ணாடித் தூள் போன்றவை கலக்கப்படும். என்றாலும் ‘பஃபர்’ மீனிலிருந்து தயாராகும் பவுடர்தான் அதிக ஆபத்தானது. இந்த பவுடர் கலந்த நீரை குடித்ததும் ரத்த வாந்தி வரும். நாடித் துடிப்பு குறைந்து ‘இறந்த’ நிலைக்கு கொண்டு செல்லும். ஆனால், இந்த மனிதர்களால் சுற்றி நிகழ்வதை உணர முடியும். வினையோ, எதிர்வினையோ புரிய முடியாது. இப்படி மாற்றப்பட்ட மனிதர்கள்தான் ‘ஸோம்பி’. இவர்களை வைத்து திருட்டு வேலைகளில் ஈடுபடலாம். கொலை, கொள்ளைகளை நிகழ்த்தலாம். பெண் ‘ஸோம்பி’ என்றால் பாலியல் ரீதியாக சுரண்டலாம். 

கொஞ்சம் கொஞ்சமாக ‘ஸோம்பி’களது உடல் சுருங்கி சக்கையாக மாறிய பிறகு தூக்கி எறிந்து விடலாம். என்ன... அடிக்கடி ‘ஸோம்பி’ பவுடர் கலந்த நீரை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். உணவில் தப்பித் தவறிக் கூட உப்பை சேர்க்கக் கூடாது. காரணம், ‘ஸோம்பி’ பவுடரின் விஷத் 
தன்மையை உப்பு முறியடித்துவிடும். இந்த உண்மைகளை தகுந்த ஆதாரங்களுடன் உலகுக்கு அறிவித்தவர், வேட் டேவிஸ் என்கிற அமெரிக்க ஆராய்ச்சியாளர். 1985ல் வெளியான இவரது ‘The Serpent and the Rainbow’ புத்தகமும், அதன் பிறகு வெளியான கட்டுரைகளுமே ‘ஸோம்பிஸ்’ குறித்த தெளிவை உருவாக்கின.

ஆனால், வேட் டேவிஸ் பொய் சொல்கிறார். அவர் எந்த ‘ஸோம்பி’களையும் சந்திக்கவில்லை. பார்த்து ஆராய்ந்ததெல்லாம் மனநோயாளிகளைத்தான். ‘நிஜ’மான ‘ஸோம்பி’, ரத்த வெறி பிடித்த மிருகம்தான் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே ‘வூடு’ மந்திரவாதிகள் மனிதனின் ஆன்மாவை பிடுங்கி குடுவையில் அடைக்கக் கூடிய அளவுக்கு சக்திப் படைத்தவர்கள் என்பதை நம்புபவர்கள்! எது எப்படியோ, ‘ஸோம்பி’ பவுடரை ஹாலிவுட் நம்பவில்லை. ரத்தக் காட்டேரிகளாகத்தான் ‘ஸோம்பிஸை’ வரையறுக்கிறது. அதனால்தான் 1932ல் வெளியான ‘ஒயிட் ஸோம்பி’ படம் முதல் இன்று வரை ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட, எடுக்கப்பட்டு வரும் அனைத்து ‘ஸோம்பி’ படங்களும் அவர்களை கொடூரமானவர்களாகவே சித்தரிக்கிறது. இதன் லேட்டஸ்ட் வெர்ஷன்தான் ‘வோல்ட் வார் இசட்’. உண்மையில் இதுவொரு நாவல். மேக்ஸ் ப்ரூக்ஸ் (Max Brooks) என்னும் அமெரிக்கர் எழுதிய புதினம் இது. இவரும் சினிமா குடும்பத்தை சேர்ந்தவர்தான். அப்பா, மெல் ப்ரூக்ஸ், ஹாலிவுட்டின் தலைச்சிறந்த காமெடி நடிகர்களில் ஒருவர். ஆனால், மகனுக்கு ஹாரர் நாவல்களை எழுதுவதில்தான் விருப்பம் அதிகம். அதுவும் ‘ஸோம்பி’களை வைத்து புதினம் எழுதுவது என்றால், அது 
அல்வா சாப்பிடுவது மாதிரி.

2003ல் இவர் ‘த ஸோம்பி சர்வைவல் கைட்’ (The Zombie Survival Guide) என்னும் நாவலை எழுதினார். பெஸ்ட் செல்லர் பட்டியலில் இணைந்தது. விளைவு? இந்த நாவலின் இரண்டாம் பாகத்தை எழுதி, 2006ல் வெளியிட்டார். அதுதான் ‘வோல்ட் வார் இசட்’. பெயருக்குத்தான் இரண்டாம் பாகம். ஆனால், கதை புத்தம் புதுசு. முந்தைய பாகத்தில் ‘ஸோம்பி’கள் குறித்த விவரங்களை (வேறென்ன ரத்தக் காட்டேரிகள், குருதியை குடிப்பவர்கள் வகையறாதான்) சொல்லியிருந்தார். அது, இந்த நாவலிலும் தொடர்ந்தது. இந்த நாவலும் பம்பர் ஹிட். சினிமாக்காரர்கள் விடுவார்களா? படமாக்க நான், நீ என்று போட்டிப் போட்டார்கள். இரு முன்னணி ஹாலிவுட் நடிகர்களுக்கு இடையே இந்த நாவலின் ரைட்ஸை வாங்க வெட்டுக் குத்தே நடந்ததாக கிசுகிசுக்கிறார்கள். எப்படியோ, கடைசி நேரத்தில் பிராட் பிட் உரிமையை பெற்றுவிட்டார். நண்பர்களுடன் இணைந்து படத்தை தயாரித்திருப்பதுடன், முக்கிய வேடத்திலும் அவரே நடித்திருக்கிறார். 

ஆனால், நாவலை அப்படியே படமாக்கவில்லை. புதினத்தை அடிப்படையாக வைத்து ஃப்ரெஷ் ஆக ஒரு டிஷ்ஷை மேத்யூ மைக்கேல் கேமஹன் சமைத்திருக்கிறார். இவர், நாவல்களை அடிப்படையாக வைத்து படத்துக்கு திரைக்கதை எழுதுவதில் கெட்டிக்காரர். நாவலுக்கு தொடர்புடைய, ஆனால், புதினத்தில் இடம்பெறாத கதாபாத்திரத்தை நைசாக படத்தில் சொருகிவிடுவார். இந்த வித்தை, இவருக்கு கை வந்த கலை.
அதனால்தான் ‘வோல்ட் வார் இசட்’ நாவலின் உரிமையை வாங்கிய கையோடு, அதற்கு திரைக்கதை எழுதும் பொறுப்பை இவரிடம் பிராட் பிட் ஒப்படைத்தார். மனிதரும் ஏமாற்றவில்லை. கர்ம சிரத்தையாக நாவலை படித்தார். பிறகு அதைத் தூக்கி ஓரமாக வைத்தார். கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து வழக்கம் போல் நாவலைத் தழுவி புதிதாக ஒரு கதையை உருவாக்கினார். அதற்கான திரைக்கதையை தன் நண்பர்களான ட்ரூ கொடார்ட், டேமன் லின்டெல்ஃப் ஆகியோருடன் இணைந்து எழுதினார்.

என்றாலும் இந்த திரைக்கதை விஷயம் தொடர்பாக நிறைய நெகடிவ் செய்திகள் உலாவுகின்றன. 2008ல் இந்தப் படத்தின் திரைக்கதை என்ற அடைமொழியுடன் ஒரு ஸ்கிரிப்ட் இணையத்தில் ‘லீக்’ ஆனது. படித்துப் பார்த்தவர்கள், ‘குப்பையாக இருக்கிறதே...’ என ஒதுக்கிவிட்டார்கள். ஆனால், ‘வெளியானது ஆரம்பக்கட்ட வெர்ஷன். அதன் பிறகு நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு விட்டன’ என தயாரிப்புத் தரப்பில் விளக்கம் தரப்பட்டது.
அதற்கேற்ப பலகட்ட மாறுதல்களுக்குப் பின், பலரது பங்கேற்புக்கு பின், திரைக்கதை இறுதி வடிவம் பெற்றது. என்றாலும் ஷூட்டிங் சமயத்தில் பல ஸ்கிரிப்ட் ரைட்டர்கள் வந்து போனார்கள். பல காட்சிகள் திரும்பத் திரும்ப எடுக்கப்பட்டன. எடுத்ததை தூக்கி ஓரமாக வைத்துவிட்டு புதிதாக எடுத்தார்கள். பிறகு, புதிதாக ஷூட் செய்ததை தள்ளி வைத்துவிட்டு முன்பு எடுத்ததையே தூசு தட்டினார்கள். இதனால் பட்ஜெட் தாறுமாறாக எகிறியது. படத்தை வெளியிட முன்வந்த பேராமவுண்ட் பிக்சர்ஸ் ஒரு கட்டத்தில் செய்வதறியாது திகைத்து நின்றது. என்றாலும் முன் வைத்த காலை பின் வைக்கவில்லை. படப்பிடிப்பு தொடர்ந்தது, சுபயோக சுபதினத்தில் முடியவும் செய்தது. டபுள் பாசிடிவ்வை பார்த்தவர்கள், நிச்சயம் சூப்பர் ஹிட் என்று சொல்லியிருக்கிறார்கள். பார்க்கலாம். ‘மான்ஸ்டர்ஸ் பால்’, ‘ஃபைன்டிங் நெவர்லேண்ட்’, ‘ஸ்ட்ரேன்ஜர் தேன் ஃபிக்ஷன்’, ‘த கைட் ரன்னர்’, ‘குவாண்டம் ஆஃப் சோலஸ்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் மார்க் ஃபோர்ஸ்டர், இந்தப் படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். ‘ஸோம்பி’களால் உலகம் அழிவதை எப்படி ஹீரோ தடுத்து நிறுத்துகிறார் என்பதுதான் ஒன்லைன். இதைத்தான் பல நாடுகளுக்கு பயணம் செய்து, ஹைடெக் மசாலாவாக உருவாக்கியிருக்கிறார்கள். ஆக்ஷன் ப்ளாக் பட்டையை கிளப்பும் என்பது ஜோதிடர்களின் நம்பிக்கை.
இதெல்லாம் உண்மையா என்பது படம் பார்த்தால்தான் தெரியும். 

ஆனால், ஒன்று -‘ஸோம்பிஸ்’ என்பவர்கள் படம் குறிப்பிடுவது போல் ரத்த வெறி பிடித்த மிருகங்கள் அல்ல. இதை மட்டும் என்றுமே நாம் மறக்கக் கூடாது. இந்தத் தெளிவுதான் இன்றைய நவீன உலகை தங்கள் உழைப்பால் உருவாக்கி கொடுத்திருக்கும் உண்மையான ‘ஸோம்பி’களுக்கு - ஆப்பிரிக்க கறுப்பின மக்களுக்கு - நாம் செலுத்தும் மரியாதை அல்லது செய்த பாவங்களுக்கான பரிகாரம்.
தினமலர் விமர்சனம் பாருங்கள் 
தளம் சென்று பார்க்க இங்கே அழுத்தவும்

உலக நாடுகளை அச்சுறுத்தும் ஸோம்பிக்களின் தாக்குதல். அடக்கும் திறன் படைத்த நாயகனின் குடும்பமே நாசமாகும் பயங்கரம். குலை நடுங்க வைக்கும் ‘முப்பரிமாண’ த்ரில்லர்.

ஜெர்ரி லேனின் (பிராட் பிட்) வாழ்க்கை, சந்தோஷமாக போய்க்கொண்டிருக்கிறது. அவன், உலக நாடுகள் சபையின் ஓய்வுபெற்ற ஊழியன். அவனுடைய காதல் மனைவி கரின் லேன் (மிர்ரில்லி ஈனோஸ்) மற்றும் இரண்டு மகள்களுடனான வாழ்வில் குறுக்கிடுகிறது ஒரு கொடூரம். மரணமற்ற ஸோம்பிக்கள் (பிரேத மனிதர்கள்) நியூயார்க்கை முற்றுகையிட்டு விட்டார்கள். அவர்களால் கடிபட்ட எவரும் ஸோம்பிக்களாக மாறு்ம் அபாயம்! கரின் மற்றும் குழந்தைகளைக் காப்பாற்றி, அமெரிக்க ராணுவத்திடம் பாதுகாப்பாக ஒப்படைக்கிறான் ஜெர்ரி. ‘‘திரும்பி வந்தால் சேர்ந்து வாழ்வோம்’’ என்கிற கடைசி வார்த்‌தைகளுடன், வேட்டைக்கு புறப்படுகிறான். தென்கொரியா, இஸ்ரேல் என பல நாடுகளுக்கு பயணித்ததில், வேல்ஸில் இருக்கும் சோதனைச்சாலையில், ஸோம்பிக்களின் தாக்குதலிலிருந்து காப்பாற்றும் மருந்து இருப்பதை கண்டறிகிறான். ஆனால், அது பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் அறையில் வேலை பார்த்த 18 விஞ்ஞானிகளும், ஸோம்பிக்களாக மாறி அங்கேயே இருக்கிறார்கள். ஜெர்ரி மருந்தை கைப்பற்றினானா? அல்லது மரணத்தை தழுவினானா? என்பது 115 நிமிட திக் திக்.

இதயத்தை சுக்கு நூறாக உடைக்கக்கூடிய முப்பரிமாண காட்சிகள். கடிபட்ட மனிதர்கள் ஸோம்பிக்களாக மாறி, கோர முகங்களுடன் நம் முன் சீட்டுக்கு வரும்போது, இதயம் கொஞ்சம் நின்று துடிக்கிறது. ஒளி இயக்குனர் பென் செரேசின், பிரம்மாண்டத்தை அற்புதமாக படம் பிடித்திருக்கிறார். இஸ்ரேலின் 100 அடி உயர சுற்றுச்சுவர் மீது, ஸோம்பிக்கள் மனித மலை போல் ஏற முயற்சிப்பதும், உயரம் தாண்டிய பலர்... தெருக்களில் ஆ‌வேசமாக ஓடி வருவதும், ஒரு பருந்துப் பார்வையில் காட்டப்படும்போது... நெஞ்சம் சிலிர்க்கிறது. திகிலுக்கு பஞ்சம் வைக்காமல் இசையமைத்திருக்கிறார் மார்க்கோ பெல்டிராமி. நம்‌மை துளிகூட அசையவிடாமல் படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் மார்க் பாஸ்டர்.

அதிகம் அலட்டவில்லை. ஆனாலும், ‘இவன் ஜெயிக்க வேண்டும்‌’ என்கிற உணர்வை நமக்கு ஊட்டுகிறார் பிராட் பிட்.

ரசிகன் குரல்: மாப்ளே... பேண்ட்ல ‘உச்சா’ போயிட்டேன்னு நினைக்கிறேன்!

குமுதம் பக்தி 15-06-2013தினமலர் ஆன்மீக மலர் 29-06-2013 ம்மற்றும் குமுதம் ரிப்போர்ட்டர் 16-06-2013 download links

இன்றைய நாளிதழ் 29-06-2013


இன்றைய  நாளிதழ்


1x1.trans Dinamalar Epaper 29 06 2013 | Free Download Dinamalar Daily Epaper PDF | Dinamalar 29th June 2013



dinamalar 29-06-2013 download link



1x1.trans Dinakaran Epaper 29 06 2013 | Free Download Dinakaran Daily Epaper PDF | Dinakaran 29th June 2013


dinakaran 29-06-2013 download link



வெள்ளி, 28 ஜூன், 2013

தினகரன் வெள்ளி மலர் 28-06-2013மற்றும் சினிமா எக்ஸ்பிரஸ்

டூல்பார் கிளீன் செய்ய ஒரு அழகான இலவச சாப்ட்வேர்

டூல்பார் கிளீன் செய்ய ஒரு அழகான இலவச சாப்ட்வேர்






எனது  நண்பர்கள்
அனைவரும் கேம் டவுன்லோட் செய்கிறேன்
என கூறி எனது கம்ப்யூட்டர் இல்
கண்ட தளங்களில் டவுன்லோட் செய்ததன் விளைவு

ஒரு பத்து டூல்பார்  ப்ரௌசரில் உட்கார்ந்து கொண்டது

இணைய வேகத்தை பாதியாக குறைத்து விட்டது
setiings சென்று சரி செய்தாலும்
அடிக்கடி இவ்வாறு ஆனது

கூகுள் தலைவர் உதவியுடன்  தேடியதில்
ஒரு நல்ல இலவச சாப்ட்வேர் கிடைத்தது



அத்தனை டூல்பாரையும் ஸ்வாஹா பண்ணி விட்டது
கீழே உள்ள தளம் சென்று டவுன்லோட் செய்து இன்ஸ்டால் பண்ணி
பாருங்கள்





இங்கே அழுத்தவும்

அல்லது கீழே உள்ள லிங்க் அழுத்தவும்

http://toolbarcleaner.com/