WORLD Z WAR ஒரு பார்வை
skip ad கொடுத்து விட்டு படிக்கவும்

இது ஒரு புது முயற்சி
ஒரு பர பரப்பான விசயத்தை
இணையம் முழுக்க தேடி அதனை
இங்கே தொகுத்து தருகிறேன்
1 கருந்தேள் அவர்களின் விமர்சனம்
2 தினகரன் கட்டுரை
3 தினமலர் விமர்சனம்

அப்படி என்ன தான் இருக்கிறது இந்த படத்தில்
எல்லோரும் இந்த படத்தைப் பற்றி
அஹா ஓஹோ என்கிறார்கள்
நான் சொல்வதை விட இணையத்தில் உலா வந்தபோது கிடைத்த
தகவல்கள் உங்களுக்காக
முதலில் ஆங்கில படங்களை அழகாக விமர்சனம் செய்யம் திரு
கருந்தேள் என்ன சொல்கிறார் பாருங்கள்
இவர் தளம் செல்ல
இங்கே அழுத்துங்கள்

ஹாலிவுட்டில் வெற்றிகரமாக விற்கும் நாவல்களைத் தழுவி படமெடுப்பது சர்வ சாதாரணம். அப்படி 2006ல் வெளிவந்த World War Z’ என்ற நாவலைப் பற்றியும், அதனைப் படமாக எடுக்கும் உரிமைகளுக்காக நிகழ்ந்த போட்டியைப் பற்றியும், Zombie என்ற வார்த்தையின் பொருளைப் பற்றியும் தினகரன் வெள்ளி மலரில் சென்ற வெள்ளியன்று சிவராமன் பெரியதொரு சுவாரஸ்யமான கட்டுரை எழுதிவிட்டார். எனவே அந்த விபரங்களையே திருப்பி எழுதாமல், வேறு விஷயங்களை எழுதலாம் என்று இருக்கிறேன்.
ஹாலிவுட்டின் ‘Suspension of Disbelief’ என்ற விஷயத்தைப் பற்றி ஏற்கெனவே நமது தளத்தில் பார்த்திருக்கிறோம். அது என்ன என்றால், திரையில் என்ன நடக்கிறதோ அதில் நமது முழு கவனமும் பதிந்திருக்கும்படி அந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கவேண்டும். எந்த லாஜிக்கும் இல்லாமல் அந்தப் படம் இருந்தாலுமே, படம் பார்க்கும் அந்த நேரத்தில் அது ஆடியன்ஸின் மண்டையில் உறைக்காமல், அவர்களுக்கு அந்தப் படம் பிடிக்கவேண்டும். உதாரணம்: ஜுராஸிக் பார்க். பழங்காலத்தில் டைனோஸாரின் ரத்தத்தை உறிஞ்சி, ஃபாஸிலாக மாறிய கொசுவின் ரத்தத்தில் இருந்து டைனோஸார் மறுபடி உருவாகும் என்று சொல்லி ஆடியன்ஸை நம்பவைத்த படம் அது. அதேபோல் E.T, கிங் காங், இண்டிபெண்டன்ஸ் டே, மென் இன் ப்ளாக், டெர்மினேட்டர் முதலிரண்டு படங்கள்- இப்படி ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கிறது. இந்தப் படங்கள் எதிலுமே லாஜிக்கலான, இயல்பு வாழ்க்கையில் நாம் பார்த்து உணர்ந்த விஷயங்கள் இருக்காது. நமக்கு முற்றிலும் அந்நியமான விஷயங்களை எடுத்துக்கொண்டு, அவை நடக்க வாய்ப்புகள் அதிகம் என்று சொல்லி, ஆடியன்ஸை நம்பவைத்து, அதனாலேயே உலகெங்கும் ஓடிய படங்கள் இவை. படம் பார்க்கும்போது ஆடியன்ஸுக்கு லாஜிகல் கேள்விகள் வராது. படம் முடிந்தபின்னர் வேண்டுமானால் வரலாம்.
ஆனால் அதே ஹாலிவுட்டில், இவற்றைப் போன்றே பல படங்கள் இதே Suspension of Disbelief மேட்டரை வைத்து எடுக்கப்பட்டு பயங்கர காமெடிப் படங்களாக அமைந்தும் இருக்கின்றன. உதாரணமாக John Carter திரைப்படம்.
மக்களால் நம்ப இயலாத விஷயங்களை வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள் சில சமயம் நன்றாக ஓடுவதிலும், பல சமயங்கள் அடிமட்ட ஃப்ளாப் ஆவதிலும் இருக்கும் ரகசியம் என்ன?
அதுதான் திரைக்கதையின் சுவாரஸ்யம். திரைக்கதையில் சொல்லப்படும் விஷயங்கள் கேள்விகள் கேட்கப்படாமல் நம்பப்பட வேண்டும். இதில் எங்காவது சுவாரஸ்யம் தப்பினால் உடனடியாக பல கேள்விகள் எழுந்து, படம் காலி.
ஆரம்பத்தில் இந்தப் படத்தின் மீது எனக்கு நல்ல அபிப்ராயமே இருக்கவில்லை. மற்றுமொரு ஸோம்பி திரைப்படம் என்று தான் எண்ணினேன். வழக்கப்படி கடைசி நேரத்தில் ‘போய்த்தான் பார்ப்போமே’ என்று நினைத்து இந்தப் படத்தைப் பார்த்தோம்.
ஆச்சரியகரமாக, இந்தப் படம் எங்களுக்குப் பிடித்ததற்கு, இந்தப் படத்தின் வேகமான திரைக்கதைதான் காரணம்.
இதற்கு முன்னர் வெளிவந்த சில படங்கள் ஸோம்பிகளால் ஏற்படும் அழிவைப் பற்றிச் சொல்லியிருந்தாலும், இந்தப் படத்தின் அளவு பிரம்மாண்டமாக எந்தப் படத்திலும் ஸோம்பிகளைப் பார்த்ததில்லை. Walking Dead போன்ற டிவி ஸீரீஸ்களிலும் கூட, ஸோம்பிகள் இந்த அளவு வந்ததில்லை. புற்றிலிருந்து கிளம்பும் எறும்புகளைப் போல உலக மக்கள் படுவேகமாக ஸோம்பிகளாக மாறுகின்றனர். உலகத்தின் பல நாடுகள் அழிந்தேவிடுகின்றன. வழக்கமான ஸோம்பி ஃபார்முலாதான் இதிலும் இருக்கிறது என்றாலும் (ஸோம்பி ஒரு மனிதனைக் கடித்தால் அவன் ஸோம்பியாகிவிடுவான்), படம் சுவாரஸ்யமாக எடுக்கப்பட்டிருக்கிறது.
படத்தின் கரு, படுவேகமாக பரவும் ஒரு அழிவைப் பற்றியது. பறவைக்காய்ச்சல், சார்ஸ் போன்ற பல வியாதிகள் ஏற்கெனவே நமக்குப் பரிச்சயம் ஆகியிருப்பதால், இந்த ஸோம்பி வைரஸ் அவைகளை வைத்தே இப்படத்தில் உருவாக்கப்பட்டிருப்பதன் லாஜிக் புரிகிறது. ஒருவேளை தடாலென்று இப்படி ஒரு விஷயம் நடந்துவிட்டால்? இந்தக் கேள்விதான் இந்தப் படத்தை சுவாரஸ்யப்படுத்தும் விஷயங்களில் ஒன்று என்று தோன்றுகிறது.
படத்தின் நாயகன் ஜெர்ரி (ப்ராட் பிட்) ஒரு ஐநா முன்னாள் ஊழியன். படத்தில் இந்த ஸோம்பி வைரஸிடமிருந்து தப்பிய அமெரிக்க ராணுவ ஊழியர்களின் கமாண்டர், ஜெர்ரியிடம் இந்த வைரஸின் உருவாக்கத்தை ஆராயச்சொல்லி, இதைப்பற்றி பரிசோதனைகளை மேற்கொண்டுவரும் மருத்துவர் ஃபாஸ்பேக்குக்கு உதவ ஜெர்ரியை நிர்ப்பந்திக்கிறார். இந்த விஷயத்தில் ஃபாஸ்பேக்குக்கு உதவாவிடில் தனது குடும்பம் அங்கிருந்து வெளியேற்றப்படும் என்பதால் ஜெர்ரி சம்மதிக்கிறான். முதலில் ஃபாஸ்பேக்குடன் ஜெர்ரி பயணிக்கும் இடம் – தென் கொரியா. அங்குதான் இந்த ஸோம்பி வைரஸின் முதல் தாக்குதல் நிகழ்ந்திருப்பதாக செய்திகள் கிடைத்திருக்கின்றன. அங்கே, இந்த வைரஸினால் பாதிக்கப்பட்ட கிராமத்தானின் பிணமும், அவனால் கடிபட்ட மருத்துவரின் பிணமும் இருக்கின்றன. ஆனால், இந்த ஸோம்பிகள் தாக்குதலின்போது தப்பிய ஒரு படைவீரனும் அங்கு இருக்கிறான். அவனைச் சுற்றியும் ஸோம்பிக்கள் வந்தபோதும் அவன் எப்படித் தப்பினான்?
இதைத்தொடர்ந்து, இஸ்ரேல் நாடு, ஸோம்பிகளின் தாக்குதலை முன்கூட்டிய அறிந்துகொண்டு ஒரு பாதுகாப்புமிக்க இடத்தை ஏற்படுத்தி, அங்கே அந்நாட்டவர்களை அனுமதித்துக்கொண்டிருப்பதாக ஒரு செய்தி ஜெர்ரிக்குக் கிடைக்கிறது. உடனே இஸ்ரேல் செல்கிறான் (இதற்கிடையில், ஜெர்ரியுடன் தென் கொரியா வந்த டாக்டர் ஃபாஸ்பேக், கால் தடுக்கி விழுந்து தனது துப்பாக்கியால் தவறுதலாக தன்னையே சுட்டுக்கொண்டு இறந்துவிடுகிறார்).
இஸ்ரேல். இந்த ஸோம்பி வைரஸ் முதன்முதலில் இந்தியாவில்தான் உருவானது என்று ஜெர்ரிக்குத் தெரிகிறது. இந்தத் தகவலை முன்கூட்டியே அறிந்த இஸ்ரேலின் உளவுத்துறையான மொஸாடின் தலைவர் வாம்ப்ரன், என்னதான் நம்பவே முடியாத தகவலாக இருந்தாலும் இஸ்ரேலில் பாதுகாப்புமிகுந்த இடம் ஒன்றை ஏற்படுத்தியதாகவும், அதனால்தான் இஸ்ரேல் இந்தத் தாக்குதலிலிருந்து பிழைத்தது என்றும் சொல்கிறார். ஆனால், ஒரு சிறிய தவறின் காரணமாக இஸ்ரேலும் அழிகிறது (எப்படி என்பதை படத்தில் பார்த்துக்கொள்ளவும்).
ஜெர்ரியின் பயணத்தில் இந்த ஸோம்பி வைரஸின் தாக்குதலுக்குத் தப்பித்த சிலரையும் எதேச்சையாக சந்திக்கிறான். ஆனால் முதலில் அதை ஸீரியஸாக எடுத்துக்கொள்ளாத ஜெர்ரி, பின்னால் இதைப்பற்றி ஆராய முற்படுகிறான்.
இஸ்ரேலிலிருந்து தப்பிக்கும் ஜெர்ரி என்ன ஆனான்? இந்த ஸோம்பி வைரஸை அவனால் தடுக்க முடிந்ததா? படம் பார்த்துப் புரிந்துகொள்க.
டெர்மினேட்டர் 2 படத்தைப் பார்த்தவர்களுக்கு, அந்தப் படம், வரிசையான அக்ஷன் காட்சிகளால் உருவான படம் என்பது தெரிந்திருக்கும். அதைப்போலவே இந்தப் படத்திலும் வரிசையான, சுவாரஸ்யமான காட்சிகள் ஒன்றின்பின் ஒன்றாக வருகின்றன. இந்தக் காட்சிகளின் வேகத்தால், எந்த ஒரு காட்சியிலும் அலுப்பு தட்டுவதன்முன்பே அடுத்த காட்சி ஆரம்பித்துவிடுகிறது. இதனால் பழைய காட்சியில் எந்தக் கேள்விகளும் எழுவதில்லை.
படத்தில் கதை என்பது பெரிதாக இல்லை. ஆனால் படத்தை எடுத்த விதத்தில்தான் சுவாரஸ்யம் இருக்கிறது. படத்தின் பிரம்மாண்டம்+ஸிஜி+வேகம் ஆகியனவே இந்தப்படம் எனக்குப் பிடித்ததன் காரணம். படத்தின் முதல் காட்சியில் இருந்தே கதை தொடங்கிவிடுகிறது. எந்த வழவழாவும் இல்லை. அதேசமயம், படத்தில் பல டெம்ப்ளேட் காட்சிகளும் இருக்கின்றன. ஆனால், என்னைப்பொறுத்தவரை படத்தில் டெம்ப்ளேட் காட்சிகள் இருந்தாலும், திரைக்கதை வேகமாக இருந்தால், அக்காட்சிகளை மன்னிக்கலாம்.
வேர்ல்ட் வார் ஸீ – படத்தில் எதையும் எதிர்பார்க்காமல் சென்றால் படம் உங்களைக் கவரலாம். ஒருவேளை படம் பார்த்தபின் உங்களுக்குப் பிடிக்காவிட்டால் – well, better luck next time 

அடுத்து தினகரன் வழங்கிய கட்டுரை
இதை நேரடியாக படிக்க இங்கே அழுத்தவும்
அல்லது copy செய்த கட்டுரை
ஆனால், அதற்கு முன்பு ‘ஸோம்பி’ குறித்து பார்த்துவிடுவோம். அப்போதுதான் ‘வோல்ட் வார் இசட்’ (World War Z) ஹாலிவுட் படம் ஓரளவு புரியும். ஏனெனில் இந்தப் பட டைட்டில் குறிப்பிடும் ‘இசட்’ என்பது ‘ஸோம்பி’யை (zombie) சுட்டுவதுதான். ஸோம்பி? சூப்பர் பவர் கொண்டவர்கள். ரத்த வெறி பிடித்து அலைபவர்கள். குருதியை குடிக்கும் ரத்தக் காட்டேரிகள். கொடூரமானவர்கள். உலகையே அழிப்பவர்கள்... இத்யாதி, இத்யாதி என்றுதானே நினைக்கிறோம்? நம்புகிறோம்? இல்லை. ஹாலிவுட் செய்த பல பாவங்களில் இதுவும் ஒன்று. உண்மையான ‘ஸோம்பி’க்கும், ஹாலிவுட் படங்களில் தோன்றும் ‘ஸோம்பி’களுக்கும் துளிக்கூட தொடர்பில்லை.
ஒரு மனிதனை இறந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால், உயிரை எடுக்கக் கூடாது. அதே நேரம் உணர்வையும் கொடுக்கக் கூடாது. கிட்டத்தட்ட நடைப்பிணம் மாதிரி அந்த மனிதனை மாற்ற வேண்டும். இப்படி மாற்றப்பட்ட மனிதர்களே உண்மையான ‘ஸோம்பிஸ்’.
இவர்கள் பண்ணையில் அடிமைகளாக இருந்தார்கள். இவர்களுக்கு கூலி தர வேண்டாம். உணவும் அவசியமில்லை. வாரத்துக்கு இரண்டு வேளை சாப்பாடு போட்டால் போதும். மற்றபடி மாடு மாதிரி உழைப்பார்கள். ஒருநாளைக்கு 15 மணி நேரங்கள் கூட ‘ஸோம்பி’களால் உழைக்க முடியும்.
தூக்கமோ, ஓய்வோ தேவையில்லை. என்ன கட்டளை தங்களுக்கு இடப்பட்டிருக்கிறதோ அதை மட்டும் செய்வார்கள்... செய்வார்கள்... செய்து கொண்டே இருப்பார்கள்.
இப்படிக் கூட அடிமைகளை உருவாக்க முடியுமா? முடியும். அதைத்தான் ஆப்பிரிக்க மந்திரக் கலையான ‘வூடு’ சென்ற நூற்றாண்டு வரை செய்து வந்தது. இந்த மந்திரக் கலையை கற்றவர்கள், ‘ஸோம்பி’களை உற்பத்தி செய்து மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார்கள். இன்றைய அமெரிக்கா உருவாக, நடைப்பிணமாக மாற்றப்பட்ட இந்த மனிதர்களே காரணம். வூடு மந்திரவாதிகள் ஒரு மனிதனின் ஆன்மாவை பிடுங்கி ஒரு குடுவையில் அடைத்துவிடுவார்கள். அதனால்தான் அந்த மனிதன் உணர்வற்ற நிலையில், நடைப்பிணமாக வாழ்கிறான்... என்று கட்டுக்கதையை அலேக்காக தூக்கி கடாசி விடலாம். உண்மையில் ‘ஸோம்பி பவுடரை’ தண்ணீரில் கலந்து குடிக்க வைத்துத்தான் ‘ஸோம்பி’களை உருவாக்குகிறார்கள்.
இந்த ‘ஸோம்பி பவுடர்’ மூன்று வழிகளில் தயாரிக்கப்படுகிறது. முதலாவது ‘பஃபர்’ என்னும் விஷ மீனைக் கொண்டு தயாரிக்கப்படும் பவுடர். இரண்டாவது ஒருவகை கடல் தவளை அல்லது ஹைலா மரத் தவளையிலிருந்து எடுக்கப்படுவது. மூன்றாவது இறந்த மனிதர்களின் எலும்புகளையும் பிற கழிவுகளையும் கலந்து உருவாகும் பவுடர். இந்த மூன்று வகையிலும் வேறு சில விஷத் தாவரங்கள், விலங்குகளின் கழிவுகள், பல்லி, சிலந்தி, தேள், கண்ணாடித் தூள் போன்றவை கலக்கப்படும். என்றாலும் ‘பஃபர்’ மீனிலிருந்து தயாராகும் பவுடர்தான் அதிக ஆபத்தானது. இந்த பவுடர் கலந்த நீரை குடித்ததும் ரத்த வாந்தி வரும். நாடித் துடிப்பு குறைந்து ‘இறந்த’ நிலைக்கு கொண்டு செல்லும். ஆனால், இந்த மனிதர்களால் சுற்றி நிகழ்வதை உணர முடியும். வினையோ, எதிர்வினையோ புரிய முடியாது. இப்படி மாற்றப்பட்ட மனிதர்கள்தான் ‘ஸோம்பி’. இவர்களை வைத்து திருட்டு வேலைகளில் ஈடுபடலாம். கொலை, கொள்ளைகளை நிகழ்த்தலாம். பெண் ‘ஸோம்பி’ என்றால் பாலியல் ரீதியாக சுரண்டலாம்.
கொஞ்சம் கொஞ்சமாக ‘ஸோம்பி’களது உடல் சுருங்கி சக்கையாக மாறிய பிறகு தூக்கி எறிந்து விடலாம். என்ன... அடிக்கடி ‘ஸோம்பி’ பவுடர் கலந்த நீரை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். உணவில் தப்பித் தவறிக் கூட உப்பை சேர்க்கக் கூடாது. காரணம், ‘ஸோம்பி’ பவுடரின் விஷத்
தன்மையை உப்பு முறியடித்துவிடும். இந்த உண்மைகளை தகுந்த ஆதாரங்களுடன் உலகுக்கு அறிவித்தவர், வேட் டேவிஸ் என்கிற அமெரிக்க ஆராய்ச்சியாளர். 1985ல் வெளியான இவரது ‘The Serpent and the Rainbow’ புத்தகமும், அதன் பிறகு வெளியான கட்டுரைகளுமே ‘ஸோம்பிஸ்’ குறித்த தெளிவை உருவாக்கின.
ஆனால், வேட் டேவிஸ் பொய் சொல்கிறார். அவர் எந்த ‘ஸோம்பி’களையும் சந்திக்கவில்லை. பார்த்து ஆராய்ந்ததெல்லாம் மனநோயாளிகளைத்தான். ‘நிஜ’மான ‘ஸோம்பி’, ரத்த வெறி பிடித்த மிருகம்தான் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே ‘வூடு’ மந்திரவாதிகள் மனிதனின் ஆன்மாவை பிடுங்கி குடுவையில் அடைக்கக் கூடிய அளவுக்கு சக்திப் படைத்தவர்கள் என்பதை நம்புபவர்கள்! எது எப்படியோ, ‘ஸோம்பி’ பவுடரை ஹாலிவுட் நம்பவில்லை. ரத்தக் காட்டேரிகளாகத்தான் ‘ஸோம்பிஸை’ வரையறுக்கிறது. அதனால்தான் 1932ல் வெளியான ‘ஒயிட் ஸோம்பி’ படம் முதல் இன்று வரை ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட, எடுக்கப்பட்டு வரும் அனைத்து ‘ஸோம்பி’ படங்களும் அவர்களை கொடூரமானவர்களாகவே சித்தரிக்கிறது. இதன் லேட்டஸ்ட் வெர்ஷன்தான் ‘வோல்ட் வார் இசட்’. உண்மையில் இதுவொரு நாவல். மேக்ஸ் ப்ரூக்ஸ் (Max Brooks) என்னும் அமெரிக்கர் எழுதிய புதினம் இது. இவரும் சினிமா குடும்பத்தை சேர்ந்தவர்தான். அப்பா, மெல் ப்ரூக்ஸ், ஹாலிவுட்டின் தலைச்சிறந்த காமெடி நடிகர்களில் ஒருவர். ஆனால், மகனுக்கு ஹாரர் நாவல்களை எழுதுவதில்தான் விருப்பம் அதிகம். அதுவும் ‘ஸோம்பி’களை வைத்து புதினம் எழுதுவது என்றால், அது
அல்வா சாப்பிடுவது மாதிரி.

2003ல் இவர் ‘த ஸோம்பி சர்வைவல் கைட்’ (The Zombie Survival Guide) என்னும் நாவலை எழுதினார். பெஸ்ட் செல்லர் பட்டியலில் இணைந்தது. விளைவு? இந்த நாவலின் இரண்டாம் பாகத்தை எழுதி, 2006ல் வெளியிட்டார். அதுதான் ‘வோல்ட் வார் இசட்’. பெயருக்குத்தான் இரண்டாம் பாகம். ஆனால், கதை புத்தம் புதுசு. முந்தைய பாகத்தில் ‘ஸோம்பி’கள் குறித்த விவரங்களை (வேறென்ன ரத்தக் காட்டேரிகள், குருதியை குடிப்பவர்கள் வகையறாதான்) சொல்லியிருந்தார். அது, இந்த நாவலிலும் தொடர்ந்தது. இந்த நாவலும் பம்பர் ஹிட். சினிமாக்காரர்கள் விடுவார்களா? படமாக்க நான், நீ என்று போட்டிப் போட்டார்கள். இரு முன்னணி ஹாலிவுட் நடிகர்களுக்கு இடையே இந்த நாவலின் ரைட்ஸை வாங்க வெட்டுக் குத்தே நடந்ததாக கிசுகிசுக்கிறார்கள். எப்படியோ, கடைசி நேரத்தில் பிராட் பிட் உரிமையை பெற்றுவிட்டார். நண்பர்களுடன் இணைந்து படத்தை தயாரித்திருப்பதுடன், முக்கிய வேடத்திலும் அவரே நடித்திருக்கிறார்.
ஆனால், நாவலை அப்படியே படமாக்கவில்லை. புதினத்தை அடிப்படையாக வைத்து ஃப்ரெஷ் ஆக ஒரு டிஷ்ஷை மேத்யூ மைக்கேல் கேமஹன் சமைத்திருக்கிறார். இவர், நாவல்களை அடிப்படையாக வைத்து படத்துக்கு திரைக்கதை எழுதுவதில் கெட்டிக்காரர். நாவலுக்கு தொடர்புடைய, ஆனால், புதினத்தில் இடம்பெறாத கதாபாத்திரத்தை நைசாக படத்தில் சொருகிவிடுவார். இந்த வித்தை, இவருக்கு கை வந்த கலை.
அதனால்தான் ‘வோல்ட் வார் இசட்’ நாவலின் உரிமையை வாங்கிய கையோடு, அதற்கு திரைக்கதை எழுதும் பொறுப்பை இவரிடம் பிராட் பிட் ஒப்படைத்தார். மனிதரும் ஏமாற்றவில்லை. கர்ம சிரத்தையாக நாவலை படித்தார். பிறகு அதைத் தூக்கி ஓரமாக வைத்தார். கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து வழக்கம் போல் நாவலைத் தழுவி புதிதாக ஒரு கதையை உருவாக்கினார். அதற்கான திரைக்கதையை தன் நண்பர்களான ட்ரூ கொடார்ட், டேமன் லின்டெல்ஃப் ஆகியோருடன் இணைந்து எழுதினார்.

என்றாலும் இந்த திரைக்கதை விஷயம் தொடர்பாக நிறைய நெகடிவ் செய்திகள் உலாவுகின்றன. 2008ல் இந்தப் படத்தின் திரைக்கதை என்ற அடைமொழியுடன் ஒரு ஸ்கிரிப்ட் இணையத்தில் ‘லீக்’ ஆனது. படித்துப் பார்த்தவர்கள், ‘குப்பையாக இருக்கிறதே...’ என ஒதுக்கிவிட்டார்கள். ஆனால், ‘வெளியானது ஆரம்பக்கட்ட வெர்ஷன். அதன் பிறகு நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு விட்டன’ என தயாரிப்புத் தரப்பில் விளக்கம் தரப்பட்டது.
அதற்கேற்ப பலகட்ட மாறுதல்களுக்குப் பின், பலரது பங்கேற்புக்கு பின், திரைக்கதை இறுதி வடிவம் பெற்றது. என்றாலும் ஷூட்டிங் சமயத்தில் பல ஸ்கிரிப்ட் ரைட்டர்கள் வந்து போனார்கள். பல காட்சிகள் திரும்பத் திரும்ப எடுக்கப்பட்டன. எடுத்ததை தூக்கி ஓரமாக வைத்துவிட்டு புதிதாக எடுத்தார்கள். பிறகு, புதிதாக ஷூட் செய்ததை தள்ளி வைத்துவிட்டு முன்பு எடுத்ததையே தூசு தட்டினார்கள். இதனால் பட்ஜெட் தாறுமாறாக எகிறியது. படத்தை வெளியிட முன்வந்த பேராமவுண்ட் பிக்சர்ஸ் ஒரு கட்டத்தில் செய்வதறியாது திகைத்து நின்றது. என்றாலும் முன் வைத்த காலை பின் வைக்கவில்லை. படப்பிடிப்பு தொடர்ந்தது, சுபயோக சுபதினத்தில் முடியவும் செய்தது. டபுள் பாசிடிவ்வை பார்த்தவர்கள், நிச்சயம் சூப்பர் ஹிட் என்று சொல்லியிருக்கிறார்கள். பார்க்கலாம். ‘மான்ஸ்டர்ஸ் பால்’, ‘ஃபைன்டிங் நெவர்லேண்ட்’, ‘ஸ்ட்ரேன்ஜர் தேன் ஃபிக்ஷன்’, ‘த கைட் ரன்னர்’, ‘குவாண்டம் ஆஃப் சோலஸ்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் மார்க் ஃபோர்ஸ்டர், இந்தப் படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். ‘ஸோம்பி’களால் உலகம் அழிவதை எப்படி ஹீரோ தடுத்து நிறுத்துகிறார் என்பதுதான் ஒன்லைன். இதைத்தான் பல நாடுகளுக்கு பயணம் செய்து, ஹைடெக் மசாலாவாக உருவாக்கியிருக்கிறார்கள். ஆக்ஷன் ப்ளாக் பட்டையை கிளப்பும் என்பது ஜோதிடர்களின் நம்பிக்கை.
இதெல்லாம் உண்மையா என்பது படம் பார்த்தால்தான் தெரியும்.
ஆனால், ஒன்று -‘ஸோம்பிஸ்’ என்பவர்கள் படம் குறிப்பிடுவது போல் ரத்த வெறி பிடித்த மிருகங்கள் அல்ல. இதை மட்டும் என்றுமே நாம் மறக்கக் கூடாது. இந்தத் தெளிவுதான் இன்றைய நவீன உலகை தங்கள் உழைப்பால் உருவாக்கி கொடுத்திருக்கும் உண்மையான ‘ஸோம்பி’களுக்கு - ஆப்பிரிக்க கறுப்பின மக்களுக்கு - நாம் செலுத்தும் மரியாதை அல்லது செய்த பாவங்களுக்கான பரிகாரம்.

தினமலர் விமர்சனம் பாருங்கள்
தளம் சென்று பார்க்க இங்கே அழுத்தவும்
உலக நாடுகளை அச்சுறுத்தும் ஸோம்பிக்களின் தாக்குதல். அடக்கும் திறன் படைத்த நாயகனின் குடும்பமே நாசமாகும் பயங்கரம். குலை நடுங்க வைக்கும் ‘முப்பரிமாண’ த்ரில்லர்.
ஜெர்ரி லேனின் (பிராட் பிட்) வாழ்க்கை, சந்தோஷமாக போய்க்கொண்டிருக்கிறது. அவன், உலக நாடுகள் சபையின் ஓய்வுபெற்ற ஊழியன். அவனுடைய காதல் மனைவி கரின் லேன் (மிர்ரில்லி ஈனோஸ்) மற்றும் இரண்டு மகள்களுடனான வாழ்வில் குறுக்கிடுகிறது ஒரு கொடூரம். மரணமற்ற ஸோம்பிக்கள் (பிரேத மனிதர்கள்) நியூயார்க்கை முற்றுகையிட்டு விட்டார்கள். அவர்களால் கடிபட்ட எவரும் ஸோம்பிக்களாக மாறு்ம் அபாயம்! கரின் மற்றும் குழந்தைகளைக் காப்பாற்றி, அமெரிக்க ராணுவத்திடம் பாதுகாப்பாக ஒப்படைக்கிறான் ஜெர்ரி. ‘‘திரும்பி வந்தால் சேர்ந்து வாழ்வோம்’’ என்கிற கடைசி வார்த்தைகளுடன், வேட்டைக்கு புறப்படுகிறான். தென்கொரியா, இஸ்ரேல் என பல நாடுகளுக்கு பயணித்ததில், வேல்ஸில் இருக்கும் சோதனைச்சாலையில், ஸோம்பிக்களின் தாக்குதலிலிருந்து காப்பாற்றும் மருந்து இருப்பதை கண்டறிகிறான். ஆனால், அது பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் அறையில் வேலை பார்த்த 18 விஞ்ஞானிகளும், ஸோம்பிக்களாக மாறி அங்கேயே இருக்கிறார்கள். ஜெர்ரி மருந்தை கைப்பற்றினானா? அல்லது மரணத்தை தழுவினானா? என்பது 115 நிமிட திக் திக்.

இதயத்தை சுக்கு நூறாக உடைக்கக்கூடிய முப்பரிமாண காட்சிகள். கடிபட்ட மனிதர்கள் ஸோம்பிக்களாக மாறி, கோர முகங்களுடன் நம் முன் சீட்டுக்கு வரும்போது, இதயம் கொஞ்சம் நின்று துடிக்கிறது. ஒளி இயக்குனர் பென் செரேசின், பிரம்மாண்டத்தை அற்புதமாக படம் பிடித்திருக்கிறார். இஸ்ரேலின் 100 அடி உயர சுற்றுச்சுவர் மீது, ஸோம்பிக்கள் மனித மலை போல் ஏற முயற்சிப்பதும், உயரம் தாண்டிய பலர்... தெருக்களில் ஆவேசமாக ஓடி வருவதும், ஒரு பருந்துப் பார்வையில் காட்டப்படும்போது... நெஞ்சம் சிலிர்க்கிறது. திகிலுக்கு பஞ்சம் வைக்காமல் இசையமைத்திருக்கிறார் மார்க்கோ பெல்டிராமி. நம்மை துளிகூட அசையவிடாமல் படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் மார்க் பாஸ்டர்.
அதிகம் அலட்டவில்லை. ஆனாலும், ‘இவன் ஜெயிக்க வேண்டும்’ என்கிற உணர்வை நமக்கு ஊட்டுகிறார் பிராட் பிட்.
ரசிகன் குரல்: மாப்ளே... பேண்ட்ல ‘உச்சா’ போயிட்டேன்னு நினைக்கிறேன்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக