சேகுவாரா என்கிற புரட்சியாளரின் வாழ்க்கை வரலாறு
உலகின் மிக சிறந்த சிந்தனையாளர்
இவரின் கதையை படித்து பாருங்கள்
சே என்ற அன்புடன் அழைக்கப்படும் எர்னாஸ்டோ சேகுவாரா. வீரசாகசவாதி என்றும் ஆயுதந்தாங்கியபுரட்சிக்காரர் என்றும் ஆயுதப் புரட்சியையே தொழிலாகக் கொண்டவர் என்றும் பொதுவாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறார்.ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் புரட்சிகர சக்திகளுடன் எந்தளவிற்கு ஈடுபாடு கொண்டு அவற்றிற்கு நேரடியாக தலைமை தாங்கி வழிகாட்டுவதில் அக்கறை காட்டினாரோ அந்தளவிற்கு மார்க்சிய சிந்தனையாளராகவும் இருந்தார். இந்தக் காலங்களில், புரட்சி, கெரில்லாயுத்தம்,சோசலின் கட்டுமானம். சோசலிச ஜனநாயகம் உட்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து நுணுக்கமாக ஆராய்கிறார். இந்தக் கண்ணோட்டத்தில், அவர் அப்போதைய சோவியத் யூனியன் உள்ளிட்ட கிழக்கு ஐரோப்பிய
சோசலிஸ முகாம் நாடுகளை கடுமையாக விமர்சித்தார். கெரில்லா யுத்தம் சம்பந்தமாக வியட்னாமின் கெரில்லாப் படைத்தலைவர் கியாப். சீனத்தலைவர் மாவோ ஆகியோரின் நூல்களை படித்தசே. ஒரு நாட்டில் புரட்சிகர கெரில்லா யுத்தம் வெற்றிபெற வேண்டுமானால் கிராம்ப்புற விவசாயிகள், நகர்புற தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம், பொது வேலை நிறுத்தம்
போன்ற போராட்டங்கள் வலுவாக நடைபெற வேண்டும் என்றும் இந்த நிலைமை தொழிலாளி விவசாயி கூட்டணியை ஏற்படுத்துவதுடன் கெரில்லா யுத்தத்திற்கு விரிவான, வலுவான தளம் அமையும் என்று கூறுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக