இந்த மார்கழி முழுவதும் அதி காலையில் எழுந்து கோலம் போடுவதால்
ஓசோன் நன்றாக சுவாசிக்கப்பட வாய்ப்பு உள்ளதால்
நம் முன்னோர்கள் மார்கழி கோலம் போடுவது பண்பாடாய் இருக்கவேண்டும் என்று கருதினார்கள்
மார்கழி மாதம் தொடங்கி விட்டது
பெண்கள் அனைவரும் காலையில் எழுந்து கோலம் போட தொடங்கி விட்டனர்
எனது மனைவி தினமும் போடும் கோலங்களை இங்கு தினசரி வெளி இடுகிறேன்
கோலம் விரும்பும் பெண்கள் இதை பார்த்து முயற்சி பண்ணி பாருங்கள்
கமல் அவர்களின் விஸ்வரூபம் சினிமா தயாரிப்பாளர்கள் மத்தியில் மிக பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது
காரணம் டி.டி.எச் மூலம் ஒலிபரப்புவேன் என்று கமல் சொல்வதுதான்
VIDEO ON DEMAND என்னும் முறையில் வீடு ஒன்றிற்கு ரூபாய் ஆயிரம் வாங்கி கொண்டு இந்த படத்தை காண்பிக்கலாம் என்று கூறுகிறார்
நாம் குறிப்பிட்ட வவுச்சர் கொண்டு ரீ சார்ஜ்சசெய்வது மூலம் நமது வீட்டின் டி.டி.எச் மூலம்படத்தை பார்க்கலாம்
இதில் உள்ள மிக பெரும் நன்மை இதன் மூலம் பெரும்தொகை கிடைக்கும்
ஆனால் தீமை நிறைய உள்ளன
ஒரு இணைப்பு மூலம் இந்த படத்தை பெற்று கேபிள் டீ வி மூலம் ஊரே பார்க்கும்
நமது திருட்டு வி.சி.டி அண்ணன்கள் அழகாய் நல்ல காமெரா மூலம் காப்பி செய்து இருபது ரூபாய்க்கு விற்று விடுவார்கள் (இப்பொழுது பத்து ரூபாய்க்கு பென் டிரைவில் காப்பிபண்ணி தருவதாக சொல்கிறார்கள் )
அப்புறம் நமது இன்டர்நெட் அண்ணன்கள் இலவசமாய் ஆன்லைனில் போட்டு புண்ணியம் தேடுவார்கள்
எந்த கட்டுப்பாடும் இல்லாத அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாட்டில் இந்த முயற்சி என்ன செய்ய போகிறது என்பதை சொல்ல முடியாது
பொருத்து இருந்து பார்போம் ஏற்கனவே சன் டி.டி.எச் VIDEO ON DEMAND ல்அயன் ,சிவாஜி படங்களை போட்டு பருப்பு சரியாக வேகாததால் நிறுத்திக்கொண்டது
ராமகிருஷ்ணன் அவர்கள் இந்த படத்திற்கான நாவல் எது என்பதை குறிப்பிட்டுள்ளார்
எரியும் பனிக்காடுரா.முருகவேல் மூலம் Red tea P.danieal
இந்த நாவலில் மூன்று திரை களம் உள்ளது
பஞ்சம் பிழைக்க செல்லும் கூட்டம்
அழகான மனைவி உடைய கதாநாயகன் அவன் மனைவியைஅடைய முயலும்
கூட்டம்
காய்ச்சல் வந்தாலும் வேலை பார்க்க வேண்டும் எனும் கட்டாயம்
இன்னொரு பக்கம் குடித்து கும்மாளம் போடும் பிரிட்டிஷ் கூட்டம்
மனிதனை கஷ்டப்படுத்துவது இன்னொரு மனிதன் தான் என்கிற வில்லியம் ஜேம்ஸ்ஸின் மேற்கோள்தான் இந்த கதை
எல்லோரும் மனிதனின் சந்தோசத்தை பிரதி பலிக்கும் கதையை எடுக்க
மனிதனின் வலிகளை காட்ட வரும் பாலா விற்கு நமது வாழ்த்துக்கள்
சிவாஜி அவர்களின் பட்டிக்காடா பட்டணமா
மாதவனின் ப்ரியசகி படங்களின் சாயல் இருந்தாலும் சிம்புவுக்கு இது புதுசு
சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மி நன்றாக நடித்து இருக்கிறார்
கதை வெளிநாட்டில் இருக்கும் சிம்பு தமிழ் கலாச்சாரம் கொண்டவர் வரலக்ஷ்மி வெளிநாட்டு கலாச்சாரத்தை விரும்புவர்
இருவரும் காதல் கொண்டு திருமணம் செய்ய
இருவருக்கும் உள்ள வேறுபாடுகளால் சிறு சண்டை ஏற்பட்டு அவர்களின் குழந்தையை விபத்தில் இழக்க
வரலக்ஷ்மி கோபம் கொண்டு பிரிய பின்பு எவ்வாறு இணைந்தார்கள் என்பதுதான் கதை
சிம்பு அழகாய் நடித்து இருக்கிறார் காதல் வரும்பொழுதும் குழந்தை பிறக்கும்போது அவர் காட்டும் உணர்ச்சிகள் அவரை தேர்ந்த நடிகராய்
காட்டுகிறது
வரலக்ஷிமியும் சிம்புவும் நன்றாக நடனம் ஆடுகிறார்கள் எவ்வளவு சிரமம் என்பதை சிம்புவே செய்து காட்டுகிறார்
ஆனால் திரைக்கதை மிக மெதுவாக செல்கிறது அழகாய் ஆரம்பித்த கதை சில சமயம் நொண்டி அடிப்பது வேதனை
கதையை நாவல் போல் அத்தியாயம் போல் சொல்லியது புதுமை
அழகான பாடல்கள் வெளிநாட்டில் அற்புதமாக படம் பிடித்து இருக்கிறார்கள்
பாடல்கள் அற்புதம்
இவ்வளவு மொக்கையாய் ஒரு ஜேம்ஸ்பாண்ட் படம் வரும் என்று நான் நினைக்கவில்லை
திரைக்கதை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் என்பது மிக பெரிய வருத்தம்
படத்தின் மிக பெரிய பலம் இசை
சும்மா பட்டை கிளப்பி உள்ளார் நியூ மேன்
கதை
agentM ய் கொல்ல சதி நடக்க அதை தடுக்க பார்க்கும் ஜேம்ஸ்பாண்ட்
இதுதான் கதை
மாற்றான், முகமூடி, என சொதப்பிய படங்களை பார்த்து விட்டு
சரி ஜேம்ஸ்பாண்ட் கிளப்புவார் என்று பார்த்தால்
நான் அப்படி எல்லாம் இல்லை
நானும் உங்க ஜாதிதான் என சொல்ல
படம் "மாமா பிசுக்கோத்து "ஆகிவிட்டது
ஜேம்ஸ்பாண்ட் படம் என்றாலே விசேசமான ஆயுதம், கார் என ஏதாவது இருக்கும்
இதில் என்னடா என்றால் ஒரு தீபாவளி துப்பாக்கியை காட்டுவது
" பிம்பிளிக்கி பிளாக்கி" ஆகி விட்டது
பட முன்னோட்டம்
இரண்டே காட்சிகள்
கை தட்ட வைக்கிறது முதல் சேசிங் காட்சி
அடுத்து வில்லன் சுரங்க பாதையில் பாம் வைக்க
ஜேம்ஸ்பாண்ட்
என்ன நடக்கும் என சாதரணமாக இருக்க ரயில் ஒன்று மேலே இருந்து விழ
திரை அரங்கம் அதிர்கிறது
மற்றபடி எதாவது கில்மா காட்சி என்று வருமா என்று பார்த்தால்
படு மோசமான இரண்டு ஆண்டிகளை கதாநாயகியாய் போட்டு
நாம் ஹோட்டலுக்கு சென்றதும் முதலில் சாப்பிட நினைப்பது புரோட்டாவைத்தான் அதற்கு காரணம் அது மட்டும்தான் நம் வீட்டில் செய்ய முடியாத உணவுப்பொருள்
சிறுவர்கள் என்றால் சில்லி புரோட்டா என்று அடம் பிடிப்பார்கள்
புரோட்டாவில் சத்து இல்லை என்று ஜல்லி அடிக்க நான் வரவில்லை
புரோட்டா செய்யும் முறை பற்றியும் அதில் எவ்வளவு சுகாதாரம் இல்லை என்பதையும் சொல்ல போகிறேன்
குறிப்பாக புரோட்டா நன்றாக இருக்க வேண்டும் என்றால் நன்றாக கைகளால் பிசைய பிசைய தான் மெதுவாக இருக்கும்
இந்த புரோட்டா மாஸ்டர்கள் கைகளில் உள்ள நகங்களில் இருக்கும் அத்தனை அழுக்குகளும் புரோட்டாவிற்கு மாவு பிசையும் போதுபுரோட்டாவில் கலந்து விடுகிறது
புரோட்டா என்பது முழவதும் வேகும் பொருள் அல்ல மேலே கீழே மட்டும் வெந்து மற்ற இடங்களில் சூட்டில் மட்டும் இருக்கும்
எனவே ஒருவேளை நக அழுக்கு கிருமிகள் இருந்தாலும் அவை அழியாது
இந்த நக அழுக்களில் என்ன கிருமி வேண்டுமானாலும் இருக்க வாய்ப்பு உள்ளது
அண்மையில் நான் புரோட்டா சாப்பிட்டு வந்ததும் வயிறு வலி வர புரோட்டவிற்குவழங்கப்படும் சால்னாவினால் அதிக காரம் இருப்பதால் தான் என்று நினைத்து இருந்தேன்
ஆனால் ஒரு புரோட்டா மாஸ்டர் என் வயிற்று வலிக்கான காரணம்
நக அழுக்கு கிருமிதான் என விளக்கி சொன்ன போது தான்உண்மை தெரிந்தது
மிக பெரிய ஹோட்டல்களில் கூட புரோட்டவிற்கு மாவு பிசையும் போது
கைகளில் க்ளௌஸ்அணிவதில்லை என்று கூறுகிறார்கள்
எனவே நண்பர்களே புரோட்டா சாப்பிடுமுன் சுவையா சுகாதாரமா என யோசித்து முடிவு செய்யுங்கள்
பேரரசுவின் படம் என்றாலே பஞ்ச் டயலாக் பறக்கும் இதில் கொஞ்சம் கம்மி
பேரரசுவின் ஆஸ்தான நடிகரே[விஜய் ] தனது ரூட்டை மாற்றிகொண்டாலும்
இவர் மட்டும் தனது ரூட்டை மாற்றாமல் இருப்பது ஏனோ
கதை முதல் காட்சியில் பரத்தின் தங்கையை யாரோ தொட அவர்களை துவம்சம் செய்கிறார்
இதனை பார்த்த மிலிட்டரி ராஜ்கிரண் இந்த உலகத்தை எப்படியாவது பரத்தின் மூலம் திருத்தி விடலாம் என்று நினைக்கிறார்
இன்னொரு இடத்தில் அநியாயம் நடக்க
அதனை பார்த்தும் பார்க்காதது போல் பரத் செல்ல
ராஜ்கிரண் குழம்புகிறார்
பரத்திடம் நீ ஏன் எல்லா அநியாயத்தையும் தட்டி கேட்க மாட்டேன் என்கிறாய் என கேட்க
நான் என் குடும்பத்திற்காக மட்டும் தான் சண்டை போடுவேன்
மற்றவர்களுக்காக சண்டை போட மாட்டேன் என சொல்லி
அதற்காக ஒரு மொக்கை பிளாஷ் பேக் சொல்ல
ராஜ்கிரணுடன் நாமும் கோபம் கொள்கிறோம்
உடனே ராஜ்கிரண் மூளையை கசக்கி ஒரு திட்டம் போட்டு
பரத்தை வைத்து அநியாயத்தை தட்டி கேட்க வைக்கிறார்
ஆனால் அந்த திட்டம் பரத்துக்கு தெரிந்து
பரத் ராஜ்கிரனை அடிக்க போக
அங்கு ஒரு மொக்கை ட்விஸ்ட் செய்ய
பரத் கண் கலங்குகிறார்
கடைசியில் இன்னொரு மொக்கை திட்டம் மூலம் பரத்தை காப்பாற்றி
படம் முடிய நாமும் ஒரு வழியாக தப்பித்து வருகிறோம்
பரத்துக்கு சிக்ஸ் பேக் வந்த பிறகு படம் எடுக்கலாம் இருந்த பேரரசு
தயாரிப்பாளர் இதுக்கு மேல லேட்ஆனா யாருக்கும் சம்பளம் கிடயாது என்று சொல்ல
இருக்கும் பேக்கை வைத்து படம் எடுத்து விட்டார் என தெரிகிறது
பட முன்னோட்டம்
ராஜ்கிரணுக்கு சம்பளம் கொடுக்க வில்லை என்ற காரணத்திற்காக நம்மை பலி வாங்கி இருக்கிறார் ராஜ்கிரண்
படம் லோ பட்ஜெட் என்பதற்காக தீவரவாதிகள் தமிழ் பேசுவதும்
மிலிட்டரி ஆபரேஷன் நடக்கும் இடம்
ஏதோ கருவா காடு என்பதும் மகா கொடுமை
படத்தில் பாராட்டப் பட வேண்டியவைகள்
முதல் நாற்பது நிமிடம் படம் கல கல என செல்கிறது
காட்சிகள் ரீபிட் என்றாலும்ரசிக்கும் படி உள்ளது
அப்பு குட்டியை செந்தில் போல பயன்படுத்தி இருக்கிறார்கள்
மற்றபடி மொக்கை திரைக்கதை எப்படி பண்ணுவது என்று பேரரசுவிடம் படிக்க விரும்புவோர் இந்த படத்தை பார்க்கலாம்
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு வாழ்த்துக்கள்(தம்பி நம்ம மதுரையப்பா ) முதல் படமாய் ஒரு திகில் படத்தை கொடுத்த தைரியத்திற்கு அமெரிக்காவா சினிமாவா என்பதிற்கு சினிமாவே வேண்டும் என வந்துள்ள இந்த இளைகருக்கு நிறைய எதிர் காலம் இருக்கு கதை பற்றி என் விமர்சன குரு செந்தில் குமார் அவர்களே ஒன்றும் சொல்லாததால் நானும் சொல்லவில்லை ஹீரோ விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்கள் நல்ல நடிப்பு பொய்யை கூட நடிப்பால் உண்மையாக்க முடிபவனேநல்லா நடிகன் என சிவாஜி அவர்கள் சொல்வார்கள் அதை விஜய் சேதுபதி நிரூபணம் செய்து உள்ளார் முதல் நாற்பது நிமிடம் மிக மெதுவாக படம் நகற்வது உறுத்தல் ஆனால் அதற்கு பிறகு படம் நாலு கால் பாய்ச்சலில் செல்கிறது ரொம்ப நாளைக்கு பிறகு சற்று பயமுறுத்திய படம் இது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும் சுஜாதா கதைகளில் கடைசி வரியில் ஒரு பாம் இருக்கும் அதே போல் இந்த படத்தின் கடைசி காட்சியல் ஒரு ட்விஸ்ட் உள்ளது நல்ல திரை கதைக்கு இந்த படம் ஒரு உதாரணம் நான் ரசித்த வசனம் பயங்கரமான பேய்கல்லாம் இந்த உலகத்தில இன்னும் உயிரோடதான் இருக்கு நம்மள மாதிரி மனுசங்களா என்ன ஒரு உண்மை மிக சரியான விளம்பரம் கொடுக்கப்பட்டால் இந்த படம் நல்ல பலன் கொடுக்கும் மிக அளவான நடிப்பு முதல் படம் என்பதால் சின்ன சின்ன தவறுகள் இருந்தாலும் கதை ஓட்டத்தில் தெரியவில்லை நேரம் இருந்தால் பாருங்கள் விடுமுறை காலத்தில் வெளியிட்டு இருந்தால் சிறுவர்களை சென்று அடைய வசதியாய் இருந்து இருக்கும் அதனால் என்ன அது வரை இந்த படம் ஓடும்