செவ்வாய், 30 அக்டோபர், 2012

புரோட்டா பிரியரா நீங்கள் உஷார்

புரோட்டா பிரியரா நீங்கள் உஷார்

நாம் ஹோட்டலுக்கு சென்றதும் முதலில் சாப்பிட நினைப்பது புரோட்டாவைத்தான் அதற்கு காரணம் அது மட்டும்தான் நம் வீட்டில் செய்ய முடியாத உணவுப்பொருள்

சிறுவர்கள் என்றால் சில்லி புரோட்டா என்று அடம் பிடிப்பார்கள்







புரோட்டாவில் சத்து இல்லை என்று ஜல்லி அடிக்க நான் வரவில்லை

புரோட்டா செய்யும் முறை பற்றியும் அதில் எவ்வளவு சுகாதாரம் இல்லை என்பதையும் சொல்ல போகிறேன்


குறிப்பாக புரோட்டா நன்றாக இருக்க வேண்டும் என்றால் நன்றாக கைகளால் பிசைய பிசைய தான் மெதுவாக இருக்கும்
இந்த புரோட்டா மாஸ்டர்கள் கைகளில் உள்ள நகங்களில் இருக்கும் அத்தனை அழுக்குகளும் புரோட்டாவிற்கு மாவு பிசையும் போதுபுரோட்டாவில் கலந்து விடுகிறது

புரோட்டா என்பது முழவதும் வேகும் பொருள் அல்ல மேலே கீழே மட்டும் வெந்து மற்ற இடங்களில் சூட்டில் மட்டும் இருக்கும்
எனவே ஒருவேளை நக அழுக்கு கிருமிகள் இருந்தாலும் அவை அழியாது

இந்த நக அழுக்களில் என்ன கிருமி வேண்டுமானாலும் இருக்க வாய்ப்பு உள்ளது

அண்மையில் நான் புரோட்டா சாப்பிட்டு வந்ததும் வயிறு வலி வர புரோட்டவிற்குவழங்கப்படும் சால்னாவினால் அதிக காரம் இருப்பதால் தான் என்று நினைத்து இருந்தேன்


ஆனால் ஒரு புரோட்டா மாஸ்டர் என் வயிற்று வலிக்கான காரணம்
 நக அழுக்கு கிருமிதான் என விளக்கி சொன்ன போது தான்உண்மை  தெரிந்தது

மிக பெரிய ஹோட்டல்களில் கூட புரோட்டவிற்கு மாவு பிசையும் போது
கைகளில் க்ளௌஸ்அணிவதில்லை என்று கூறுகிறார்கள்
 எனவே நண்பர்களே புரோட்டா சாப்பிடுமுன் சுவையா சுகாதாரமா என யோசித்து முடிவு செய்யுங்கள்
  




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக