ஞாயிறு, 28 அக்டோபர், 2012

திருத்தணி விமர்சனம்

திருத்தணி விமர்சனம்




படம் பொங்கலுக்கு[2012] வர வேண்டியது


பேரரசுவின் படம் என்றாலே பஞ்ச் டயலாக் பறக்கும் இதில் கொஞ்சம் கம்மி
பேரரசுவின் ஆஸ்தான நடிகரே[விஜய் ] தனது ரூட்டை மாற்றிகொண்டாலும்

இவர் மட்டும் தனது ரூட்டை மாற்றாமல் இருப்பது ஏனோ

கதை முதல் காட்சியில் பரத்தின் தங்கையை யாரோ தொட அவர்களை துவம்சம் செய்கிறார்
இதனை பார்த்த மிலிட்டரி ராஜ்கிரண் இந்த உலகத்தை எப்படியாவது பரத்தின் மூலம் திருத்தி விடலாம் என்று நினைக்கிறார்

இன்னொரு இடத்தில் அநியாயம் நடக்க
அதனை பார்த்தும் பார்க்காதது போல் பரத்  செல்ல
ராஜ்கிரண் குழம்புகிறார்
பரத்திடம் நீ ஏன் எல்லா அநியாயத்தையும் தட்டி கேட்க மாட்டேன் என்கிறாய் என கேட்க
நான் என் குடும்பத்திற்காக மட்டும் தான் சண்டை போடுவேன்
மற்றவர்களுக்காக சண்டை போட மாட்டேன் என சொல்லி
அதற்காக ஒரு மொக்கை பிளாஷ் பேக் சொல்ல
ராஜ்கிரணுடன் நாமும் கோபம் கொள்கிறோம்

உடனே ராஜ்கிரண் மூளையை கசக்கி ஒரு திட்டம் போட்டு
பரத்தை வைத்து அநியாயத்தை தட்டி கேட்க வைக்கிறார்
ஆனால் அந்த திட்டம் பரத்துக்கு தெரிந்து
 பரத் ராஜ்கிரனை அடிக்க போக
அங்கு ஒரு மொக்கை ட்விஸ்ட் செய்ய
 பரத்  கண் கலங்குகிறார்

கடைசியில் இன்னொரு மொக்கை திட்டம் மூலம் பரத்தை காப்பாற்றி
படம் முடிய நாமும் ஒரு வழியாக  தப்பித்து வருகிறோம்

பரத்துக்கு சிக்ஸ் பேக் வந்த பிறகு படம் எடுக்கலாம் இருந்த பேரரசு
தயாரிப்பாளர் இதுக்கு மேல லேட்ஆனா யாருக்கும் சம்பளம் கிடயாது என்று சொல்ல
இருக்கும் பேக்கை வைத்து படம் எடுத்து விட்டார் என தெரிகிறது



பட முன்னோட்டம்




ராஜ்கிரணுக்கு சம்பளம் கொடுக்க வில்லை என்ற காரணத்திற்காக நம்மை பலி வாங்கி இருக்கிறார் ராஜ்கிரண்


படம் லோ பட்ஜெட் என்பதற்காக தீவரவாதிகள் தமிழ் பேசுவதும்
மிலிட்டரி ஆபரேஷன் நடக்கும் இடம்
ஏதோ கருவா காடு என்பதும்  மகா  கொடுமை
படத்தில் பாராட்டப் பட வேண்டியவைகள்


முதல் நாற்பது நிமிடம் படம் கல கல என  செல்கிறது
காட்சிகள் ரீபிட் என்றாலும்ரசிக்கும் படி உள்ளது
அப்பு குட்டியை  செந்தில் போல பயன்படுத்தி இருக்கிறார்கள்


மற்றபடி மொக்கை திரைக்கதை எப்படி பண்ணுவது என்று பேரரசுவிடம் படிக்க  விரும்புவோர் இந்த படத்தை பார்க்கலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக