இவ்வளவு மொக்கையாய் ஒரு ஜேம்ஸ்பாண்ட் படம் வரும் என்று நான் நினைக்கவில்லை
திரைக்கதை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் என்பது மிக பெரிய வருத்தம்
படத்தின் மிக பெரிய பலம் இசை
சும்மா பட்டை கிளப்பி உள்ளார் நியூ மேன்

கதை
agentM ய் கொல்ல சதி நடக்க அதை தடுக்க பார்க்கும் ஜேம்ஸ்பாண்ட்
இதுதான் கதை
மாற்றான், முகமூடி, என சொதப்பிய படங்களை பார்த்து விட்டு
சரி ஜேம்ஸ்பாண்ட் கிளப்புவார் என்று பார்த்தால்
நான் அப்படி எல்லாம் இல்லை
நானும் உங்க ஜாதிதான் என சொல்ல
படம் "மாமா பிசுக்கோத்து "ஆகிவிட்டது

ஜேம்ஸ்பாண்ட் படம் என்றாலே விசேசமான ஆயுதம், கார் என ஏதாவது இருக்கும்
இதில் என்னடா என்றால் ஒரு தீபாவளி துப்பாக்கியை காட்டுவது
" பிம்பிளிக்கி பிளாக்கி" ஆகி விட்டது
பட முன்னோட்டம்
இரண்டே காட்சிகள்
கை தட்ட வைக்கிறது முதல் சேசிங் காட்சி
அடுத்து வில்லன் சுரங்க பாதையில் பாம் வைக்க
ஜேம்ஸ்பாண்ட்
என்ன நடக்கும் என சாதரணமாக இருக்க ரயில் ஒன்று மேலே இருந்து விழ
திரை அரங்கம் அதிர்கிறது
மற்றபடி எதாவது கில்மா காட்சி என்று வருமா என்று பார்த்தால்
படு மோசமான இரண்டு ஆண்டிகளை கதாநாயகியாய் போட்டு
கொல்கிறார்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக