செவ்வாய், 23 அக்டோபர், 2012

பீட்சா திரை விமர்சனம்

பீட்சா திரை விமர்சனம் 






பட முன்னோட்டம்


இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு வாழ்த்துக்கள்(தம்பி நம்ம மதுரையப்பா )


முதல் படமாய் ஒரு திகில் படத்தை கொடுத்த தைரியத்திற்கு 

அமெரிக்காவா சினிமாவா என்பதிற்கு சினிமாவே வேண்டும் என வந்துள்ள இந்த இளைகருக்கு நிறைய எதிர் காலம் இருக்கு 

கதை பற்றி என் விமர்சன குரு செந்தில் குமார் அவர்களே ஒன்றும் சொல்லாததால்   நானும் சொல்லவில்லை 


ஹீரோ விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்கள் நல்ல நடிப்பு

பொய்யை கூட நடிப்பால் உண்மையாக்க முடிபவனேநல்லா நடிகன் என சிவாஜி அவர்கள் சொல்வார்கள் அதை விஜய் சேதுபதி நிரூபணம் செய்து உள்ளார் 
முதல் நாற்பது நிமிடம் மிக மெதுவாக படம் நகற்வது உறுத்தல்  ஆனால் அதற்கு பிறகு படம் நாலு கால் பாய்ச்சலில் செல்கிறது 
ரொம்ப நாளைக்கு பிறகு சற்று பயமுறுத்திய படம் இது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும் 

சுஜாதா கதைகளில் கடைசி வரியில் ஒரு பாம் இருக்கும் 
அதே போல் இந்த படத்தின் கடைசி காட்சியல் ஒரு ட்விஸ்ட் உள்ளது

நல்ல திரை கதைக்கு இந்த படம் ஒரு உதாரணம்  





நான் ரசித்த வசனம்  பயங்கரமான பேய்கல்லாம் இந்த உலகத்தில இன்னும் உயிரோடதான் இருக்கு நம்மள மாதிரி  மனுசங்களா என்ன ஒரு உண்மை 
மிக சரியான விளம்பரம் கொடுக்கப்பட்டால் இந்த படம் நல்ல பலன் கொடுக்கும் 
மிக அளவான நடிப்பு முதல் படம் என்பதால் சின்ன சின்ன தவறுகள் இருந்தாலும் கதை ஓட்டத்தில் தெரியவில்லை 

நேரம்  இருந்தால் பாருங்கள் 
விடுமுறை காலத்தில் வெளியிட்டு இருந்தால் சிறுவர்களை சென்று அடைய வசதியாய் இருந்து இருக்கும் அதனால் என்ன அது வரை இந்த படம் ஓடும்  




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக