வியாழன், 31 ஜனவரி, 2013

விஸ்வரூபம் விமர்சனம் viswaroopam kamal

விஸ்வரூபம் விமர்சனம் viswaroopam kamal



கமல் மனைவி பூஜா பேசுவது போல் படம் ஆரம்பிக்கிறது
எனக்கு அவர பிடிக்கல அவரு பொம்பள போல இருக்காரு
ஆமா உங்களுக்குள்ள ஒன்னும் இல்லையா
எனக்கு படுத்துகிட்டே படிக்க பிடிக்காதுன்னு சொல்லிட்டேன் அவரும் ஒத்துக்கிட்டார்
அவர் எப்படி இருப்பார்என  சொல்ல

கமல் தக தக என ஆடுகிறார் என்ன ஒரு அபிநயம்
பெண் போல அவ்வளவு அழாகாய்  ஆடுகிறார்

 கமல் மனைவி கமலை எப்படியாவது கலட்டி விட்டு விட்டு அவளுடைய பாஸ் இளைகன் ஒருவனை மடக்காலாம் என நினைக்க


கமலை பற்றி உண்மைகளை அறிய ஆள் வைத்து துப்பறிய 
கமல் ஒரு முஸ்லிம் என தெரியவருகிறது ஆனால் துப்பறிய வரும் நபரை வில்லன்கள் சந்தேகப்பட்டு கொல்ல
வில்லன்கள் கூட்டம் கமலையும் கமல் மனைவியையும் கடத்த கதை சூடுபிடிக்கிறது

கமலை பார்க்கும் ஓமருக்கு (கமல் பற்றி அனைத்து ரகசியம் தெரிந்த முஸ்லிம் குழு தலைவர்)
அதற்குள் கமல் நமாஸ் பண்ண வேண்டும் என அனுமதி கேட்டு 
அங்கு இருந்து தப்பிக்க கமல் மனைவி நீங்கள் யார் என கேட்க
கதை சொல்ல ஆரம்பிக்கிறார்

ஒசாமா பின்லேடனை அழிக்க இந்திய உளவுத் துறை மூலமாக  அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க கமல் ஆப்கானிஸ்தான் செல்ல
அங்கு இருக்கும் முஸ்லிம் அமைப்பிற்கு பயிற்சி கொடுக்கிறார் பின்பு ஒசாமா பின்லேடனை கொல்ல உதவி செய்து (கமல் உதவி செய்வது யார்க்கும் தெரியாது )அங்கு இருந்து கிளம்பும் பொழுது அமெரிக்காவை நியுக்கிளியர் பாம் மூலம் ஓமர் கொள்ள சதி  செய்வது தெரிந்து அதை தடுக்க
  
விஸ்வாநாதன் எனும் நாட்டிய கலைகனாக நியூயார்க் வந்த கதை சொல்கிறார்
முடிவில் ஓமரின் சதியை முறியடிக்கிறார்

அழகாய் ஆரம்பிக்கும் திரைக்கதை தலிபான் கதை களம் செல்லும்பொழுது சற்று நொண்டிஅடிக்கிறது 
பின்பு நியூ யார்க் வரவும் கதை சூடு பிடிக்கிறது
சிறப்புகள்
தக தக என கமல் ஆட நாமும் ஆடுகிறோம் 
என்ன ஒரு அழகான நடனம்
அந்த ஆப்கானிஸ்தான் செட்டிங்குகள் ஹெலிகாப்டர் சண்டை காட்சிகள் படத்தை ஹாலிவுட் தரத்திற்கு கமல் கொண்டு சென்று உள்ளார்

வசனம் பல இடங்களில் சுஜாதாவை நினைவு படுத்துகிறார்
அரச கட்டளை வேலை பார்த்தாகணும்
என்னால படுத்துகிட்டு படிக்க முடியாது
அல்லா நம்மளை மன்னிக்க மாட்டார் என கமல் தன் உதவியாளரிடம் சொல்ல  
என்னைய இல்ல ஏன்னா நான் முஸ்லிம் இல்ல என சொல்லும் பொழுது வசனம் அற்புதம்

ஓமர்  நீ என்ன ஆகப் போற என மகனிடம் கேட்க டாக்டர் என பதில் சொல்ல டுஷ் என நெத்தியில் கை வைக்க 
எல்லாரும் டுஸ் என சொல்ல
அற்புதமான காட்சி
குறைகள்
கமல் எதற்காக ஆப்கானிஸ்தான் செல்லுகிறார் யார் அவரை அனுப்புகிறது
தமிழ் ஜிகாதி என சொல்லும் கமல் எங்கு இருந்தார் என சின்ன பிளாஸ் பேக் கூட இல்லாதது
சீசியம் பற்றி எத்தனை பேர் தெரிந்து வைத்து இருப்பார்கள் அதனை பற்றி இன்னும் விவரித்து இருக்க வேண்டும்
தசாவதாரம் படத்தில் அந்த குரங்கு சாகும் காட்சி போல் ஏதாவது செய்து இருக்கலாம்


தீவிரவாதம் அழிய வேண்டும் என சொல்லும் கதை  ஒரு முறை பார்க்கலாம்
கமல் அவர்களுக்காக கண்டிப்பாகபார்க்க வேண்டும் 

வெள்ளி, 25 ஜனவரி, 2013

கமல் மேல் ஏன் இத்தனை காட்டம்

கமல் மேல் ஏன் இத்தனை காட்டம்


நடிகர்களில் வரியை ஒழுங்காக கட்டும் ஒரே நடிகர் கமல் அவர்கள்தான்

கருப்பு பணம் வேண்டாம் வெள்ளை மட்டுமே போதும் எனும் ஒரு நடிகரை ரௌண்டு கட்டி அடிப்பது என்ன நியாயம்

மிக சிறந்த நாத்திகர் எல்லாவற்றுக்கும் காரணம் கடவுள் அல்ல
நாம்தான் காரணம் என்று கூறும் தன்னம்பிக்கை மிக்க ஒரே நடிகர் கமல்


எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் குழந்தைகளுக்கு தனி டிரஸ்ட் நடத்தும் நடிகர் அவர்

மக்களுக்கு எதிராக இருக்கும் மனிதர்கள் தீவிரவாதிகள்
இதில் மதம் எங்கு உள்ளது

தீவிரவாதிகளை கொல்வதாக படம் எடுக்க கூடாதா
 

அண்மையில் வந்த டாம் குருசின் படத்தில் தீவர வாதிகளாக தலிபான் களை காட்டினார்கள் என்பதற்காக அந்த படம் தடை செய்யப்படவில்லை

ஆனால் திரை உலகம் இவ்வாறு வாய் மூடி கிடந்தால் நாளை கமல் அவர்களுக்கு வந்தது போல் அனைவருக்கும் வரும்

குழந்தை பிரசவம் ஆக குறித்த நேரம் தாண்டினால் எவ்வளவு கஷ்டப் படுவோமோ அதை விட அதிக கஷ்டம்   படம் வெளி இடா விட்டால்

தனி ஒரு மனிதனக்கு உணவு இல்லை என்றால் ஜகத்தினை அளிப்போம் என்றார் பாரதி

தனி ஒரு மனிதனுக்கு உரிமை மறுக்கப்பட்டால்  பாரதி நீங்கள் வந்து சொல்லுங்கள்

கமல் அவர்களே கலங்காதிர்கள் காலம் நிச்சயம் ஒரு நாள் பதில் சொல்லும்


விஸ்வரூபம் திரைக்கதை

விஸ்வரூபம் திரைக்கதை


இது விமர்சனம் அல்ல
நண்பர்கள் பார்த்து கூறியதின் படத்தின் திரைக்கதை




விசாம் அக்ரம் காஸ்மீரி என்கிற முஸ்லிம் கதா பாத்திரம் கமலுக்கு
இவர் ஒரு உளவுத்துறை அதிகாரி
இவர் அமெரிக்கா அமைதிக்காக வேலை செய்கிறார் (??????)
அப்புறம் தலிபான் இயக்கதில் சேர்கிறார் (???????)

ஒசாமா பின்லேடனை காட்டி கொடுக்கிறார்

இவர் இந்த வேலை செய்வதற்கு பின் புலம் கதக் நடன கலைகர்
இவரை திருமணம் செய்ய வரும் பூஜாவுக்கு கமலை பிடிக்காமல் போக (வில்லனை விரும்ப)
அவரை வேண்டாம் என்று சொல்வதற்கு
துப்பறியும் போது கமல் யார் என வில்லனுக்கும் தெரிய

கமலை கொல்ல புறப்பட
 கமல் என்ன செய்கிறார் என்பதுதான் கதை


இதற்கு எதற்கு இஸ்லாம் எதிர்க்கிறது என்பது புரியவில்லை

படத்தில் 40 நிமிடம் அரபு மொழியில் உள்ளது
தலிபான் பற்றி தெரிந்து கொண்டு படம் பார்க்க வேண்டும்

சமர் திரைவிமர்சனம்

சமர் திரைவிமர்சனம்
thumbs Samaran Movie Stills01 Samar Movie Photo Stills


ஒரு நல்ல திரைக்கதை ரொம்ப நாளைக்கு பிறகு

புளித்துப்போன டான் கதை இல்லாவிட்டால்

கெக்கே பிக்கே என ஒன்றும்

இல்லாத கதையை வைத்துகொண்டு ஜல்லி அடிக்காமால்

பார்ப்பவரை சிந்திக்க வைக்கும் கதை

இயக்குனர் திருவுக்கு வாழ்த்துக்கள்

இரண்டு பணக்காரர்கள் வாழ்க்கை போர் அடித்து போக
மனிதர்களை வைத்து கேம் விளயாட ஆரம்பிக்கிறார்கள்

அந்த விளையாட்டில் விசால் த்ரிஷா மாட்டிக் கொள்ள
அதில் இருந்து எப்படி விசால் தப்பித்து வருகிறார் என்பதுதான் கதை




கதை நிகழும் இடம் பாங்காக் அற்புதமான இடம்
அந்த மொட்டை மாடி ஹோட்டல் அபாரமான இடம்

கொஞ்சம் எடிட் செய்து இருந்தால் இன்னும் விறுவிறுப்பு இருந்து இருக்கும்
த்ரிஷா அழகு தேவதையாக வருகிறார்

அழகு அழகு பாடல் இரண்டு கதாநாயகிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என திரு அழகாய் காட்டி உள்ளார்

விசால் சார் அந்த தீம் சாங் ஆசை உங்களையும் விடவில்லையா
அந்த பாடலை கட் செய்து இருந்தால் படம் இன்னும் தரம் கூடி இருக்கும்

இந்த பட விமர்சனத்தை படித்து விட்டு ஒரு முறை இந்த படத்தை பாருங்கள்  கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்

திரு இந்த மாதிரி கதைகள்தான் இப்பொழுது தேவை

ஒரு பெரிய வலம் வர வாழ்த்துக்கள்

Samar
 

சனி, 19 ஜனவரி, 2013

கண்ணா லட்டு திங்க ஆசையா விமர்சனம்

கண்ணா லட்டு திங்க ஆசையா விமர்சனம்











முதல் காட்சியில் அலெக்ஸ்பாண்டியன் என்று வரவும் தியேட்டர் மாறி வந்து விட்டோமோ என சின்ன குழப்பம் வர சேது சட்டையை கழட்டும் போது நம் குழப்பம் தீருகிறது







பாக்யராஜ் அவர்களின் இன்று போய் நாளை வா படத்தின் மறுபதிப்பு என்பதால் கதை பற்றி சொல்ல வேண்டியது இல்லை

மூன்று இளைகர்கள்ஒரு பெண்ணை காதலிக்க அவர்களில் ஒருவரை கை பிடிப்பதே  கதை

முதலில் ராமநாரயணனுக்கு நன்றி கூற வேண்டும்

குறைந்த முதலீட்டில் மீண்டும் தமிழ் சினிமா வெற்றி பெரும் என்று நிரூபணம் செய்ததற்கு

சந்தானம் அவர்கள் படத்தின் தயாரிப்பாளராய் இருந்தும் படம் முழுக்க நான்தான் வருவேன் என்று அடம் பிடிக்காமல் பவர் ஸ்டாரை முக்கியப்படுத் தியதற்கு

இன்று போய் நாளை வாவில் பாக்யராஜ் மட்டுமே பட்டையை கிளப்புவார்
ஆனால் இந்த பதிப்பில் பவரும் சந்தானமும் அதை நிவர்த்தி செய்கிறார்கள்

சிலரை பாக்க பாக்க பிடிக்கும் என்னை பாக்காமலே பிடிக்கும் என பவர் சொல்லும்போது அரங்கம் குலுங்க பவருக்கு இனி ஏறு முகம்தான்

அதுவும் சலங்கை ஒலி  கமல் போல் ஆட அவர்க்கு ஜால்ராக்கள் அடிக்கும் லூட்டி நல்ல கலகலப்பு
Srinivasan

பவரை என்ன கலாய்ப்பு கலாய்த்தாலும்  சிரித்த முகத்துடன் இருப்பது அவர் மட்டும்தான் வாழ்க பவர்

டேய் நானாவது காமடியன்னு தெரிஞ்சு வாழ்ந்துகிட்டு இருக்கேன்
நீ அது கூட தெரியாம இருக்கியே என பவரை வாரும் சந்தானம்

சந்தானத்தின் நண்பர் சிம்பு என்பதால் அவரும் வந்து போகிறார்
லாஜிக் பார்க்காமல் இருந்தால் சிரிக்க வைக்கும் படம்


பவர் வரும் அனைத்து காட்சிகளும் ரசிக்க வைக்கிறார்






செவ்வாய், 15 ஜனவரி, 2013

மார்கழி கோலங்கள் அனைத்தும்

மார்கழி கோலங்கள் அனைத்தும்

சென்ற மாதம் எனது மனைவி அவர்கள் கோலம் இடுவதற்காக
கூகுள்  தலைவர் உதவியுடன் தேடு தேடு என்று தேடியதில் நிறைய லிங்க் கிடைத்தது
 என் மனைவி போல் கோலம் மேல் காதல் உள்ளவர்கள்
இந்த லிங்கை பயன் படுத்தி
கோலம் போட்டு பாருங்கள்

இந்த லிங்கைப் பார்த்த பொழுது எவ்வளவு கஷ்டப் பட்டு
சகோதரிகள் கோலம் இட்டு உள்ளார்கள் என்பது தெரிந்தது

பயன் அடைய வாழ்த்துக்கள்

1.http://kolangal.kamalascorner.com

KALAS  KOLANGAL



2.http://kalaskolangal.blogspot.in


 3.http://www.penmai.com


  4.http://mykolam.blogspot.in
 இந்த மை  கோலங்கள்  ப்ளாக் மிக சிறந்த கோலங்களை கொண்டு உள்ளது




http://www.bharatmoms.com


கோலம் தேடும் சகோதரிகள் அனைவரும் இதை பயன் படுத்தி பார்க்கவும்







அலெக்ஸ் பாண்டியன் திரை விமர்சனம்

அலெக்ஸ் பாண்டியன் திரை விமர்சனம்




சந்தானம் இருக்கிறார்
அனுஷ்ஹா இருக்கிறார்
கார்த்தி இருக்கிறார்
சுராஜ் இருக்கிறார்

ஆனால் கதை அதுதான் இல்லை

சார் பர்ஸ்ட் நாலு ரீல் சந்தானம் இருக்கிறார்
அடுத்த  நாலு ரீல் காட்டுக்குள்ள த்ரில்லிங்
கடைசி நாலு ரீல் கிளைமாக்ஸ்
படம் பிச்சுக்கும் என்று டைரக்டர் சொன்னதை  கேட்ட

கார்த்தியும் தயாரிப்பாளரும் நம்பி கேட்ட கெட்ட கதை அலெக்ஸ் பாண்டியன்



பட முன்னோட்டம்


Alex Pandian Posters

  முதல் காட்சியில் அனைத்து பைட்டையும்முடித்து வரும் வரை
ட்ரைன் மெதுவாக செல்லும்போதே சின்னதாய் டவுட் வந்தது

சுராஜ் அப்படியெல்லாம் விட மாட்டார் என்று நினைத்தேன்

ஏற்கனவே வந்து நொந்து போன கதை

பணத்திற்க்காக எதுவும் செய்யும் ஹீரோ முதல் அமைச்சரின் மகளை கடத்துகிறார்

பின்பு எதற்காக கடத்தப்படுகிறோம் என தெரிந்தவுடன்

கதாநாயகியை  காப்பாற்றி  தமிழ்நாட்டையும் காப்பாற்றுகிறார்



படத்தின் சிறப்பான விஷயம்

சண்டைக்காட்சிகள்; அற்புதமாக காட்சி படுத்தி இருக்கிறார்கள்

பேட் பாய்ஸ் சாங் பாடல் அற்புதம் புது முயற்சி


சரவணனும் கார்த்தியும் சந்திக்கும் போது சித்தப்பு என்று சொல்லும் காட்சி

சந்தானம் உங்களுக்கு என்ன ஆயிற்று
இவ்வளவு கேவலமான காமெடி வேண்டாம்

எஸ்.வி .சேகர்    கிரேஸி மோகன் போன்ற ரைட்டர்களை வைத்து கொண்டு
கிளப்ப வேண்டாமா

அனுஷ்ஹா எவ்வளவு அழகான தேவதை படம் முழுக்க வர வேண்டாமா
கொடுக்கிற காசுக்கு வேலை வாங்குங்கள் சுராஜ் சார்

கார்த்தி அவர்கள் இது மாதிரி தொடர்ந்தால் சற்று கஷ்டம்தான்








புதன், 9 ஜனவரி, 2013

விஸ்வரூபம் ஒரு வழியாய்

விஸ்வரூபம்  ஒரு வழியாய்




அப்பாடா என்று இருக்கும்‌ நம் கமல் ஹாசன் அவர்களுக்கு
டிசம்பர் 25 அன்றுபடம் வெளி ஆகும்

படம் வெளியாகி ஒரு வாரத்திற்கு பின் டி.டி.எச் இல் வரும் என்று கூறி உள்ளார்

தமிழ் நாட்டை பொருத்த வரையில் இன்னுமும் மின் தட்டுப்பாடு உள்ளது
படம் பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுது மின் தடை ஏற்பட்டால் 1000 ரூபாய் அம்போ என்பதால்

அவ்வளவாய் கூட்டம் சேரவில்லை

திரு கமல் அவர்களுக்கு நீங்கள் மிக பெரும் பல் சுவை நாயகன்
நீங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தி உங்களை கஷ்டப்படுத்தி கொள்ளாதீர்கள்


நம்ம கே.எஸ் .ரவிகுமார் காத்து இருக்கிறார்
வாருங்கள் மீண்டும் இன்னொரு தசாவதாரம் செய்ய



ஞாயிறு, 6 ஜனவரி, 2013

சனி, 5 ஜனவரி, 2013

இவன் நினைத்ததை முடிப்பவன் cz12 விமர்சனம்

ஜாக்கி சானின் CZ12


தமிழில்

 இவன் நினைத்ததை முடிப்பவன்

ரொம்ப நாளைக்கு பிறகு பட்டையை கிளப்ப வந்து இருக்கும் படம் இது

ஜாக்கி டைரக்சன் என்றாலே
படம் தீயாய் இருக்கும் அதே போல்தான்  இந்த படமும்

முதல் காட்சியிலேயே  கிளப்பி விடுகிறார்
தான் ஒரு சிறந்த ஆக்சன் டைரக்டர் என்பதை நிரூபித்து விட்டார்

நம்ம உதவி டைரக்டர் எல்லாம் இத பாருங்கப்பா

அந்த ஸ்கேட்டிங்க் மோட்டாரில் அவர் செய்யும் சாகசம்
 சொல்லும்  இவன் நினைத்ததை முடிப்பவன்  என்று




பட முன்னோட்டம்

அந்த நாய் வைத்து ஜாக்கி பண்ணும் அலும்பு தாங்க முடியவில்லை


இன்னும் என்ன வேகம் அப்பாடி
60 வயது நம்பவே முடியவில்லை


12 ராசி சிலைகளை கண்டுபிடிப்பதுதான் கதை என்றாலும்
திரைக்கதை படு இயல்பாக இருக்கிறது

Jackie Chan CZ12 Movie First Look Posters Photos,Stills,Pictures

அந்த கடைசி காட்சியில்  ஜாக்கி செய்வது அசத்தல்

நவீன தொழில் நுட்பம் படத்தை கிளப்ப வைக்கிறது

படத்தை சொல்ல முடியாது பார்த்தால்தான் இதனை
உணர முடியும்
தமிழில் பார்க்கும்பொழுது நகைச்சுவை மிளிர்கிறது

குறிப்பாய் படம் எப்படி எடுத்தார்கள் என்று கடைசி காட்சியில்
காட்டுவதை மறக்காமல் பாருங்கள்






விஸ்வரூபம் வெற்றி அடையும்


விஸ்வரூபம் வெற்றி அடையும் 

விஸ்வரூபம்  டி .டி .எச்  இல்  வருகிறது என்பதற்காக தமிழ் திரை உலகம் 
தனது போர் வாள்களை காட்டிக் கொண் டு  இருக்கிறது 
இது சரியா
 ஆனால் வெளி நாடுகளில் படம் வந்த உடனே ஆன்லைனில் இன்டர்நெட் தளங்களில் 
காசு கட்டி பார்க்கலாம் 
இது அங்கு சர்வ சாதாரணம் 
 
 டி .டி .எச்  இல்  எதற்காக படம் திரை இடப் படுகிறது 
திரை அரங்கிற்கு வராமல் இருக்கும் ஒரு கூட்டம் இருக்கிறது 
வயதானவர்கள் திரை அரங்கில் உட்கார்ந்து பார்க்க முடியாதவர்கள் 
துணை இல்லாமல் திரை அரங்கத்திற்கு வரமுடியாதவர்கள் 
வீட்டு வேலை அதிகம் இருக்கும் பெண்கள்  இவர்களை சென்று அடைய போகிறது 

இது ஒரு வகை வியாபாரம் 
ஆன்லைனில் பொருள் விற்பனை செய்வது போல் 
சினிமா விற்பனை செய்ய படுகிறது 

இது சினிமாவிற்கு கிடைத்த வரம் 
ஆனால் ஒரு சின்ன தவறு உள்ளது 
படம் வெளி ஆகும் அன்று வெளி இடுவது நல்லது 

இல்லாவிட்டால் திரை அரங்கிற்கு வருவதற்கு முன்பு அனைத்து  இணய பைரசி தளங்களில்  படம் வெளி இடப்படும்
இன்னொன்று படம் பற்றிய கருத்துக்கள் ஓன்று படத்தை உயரத்திற்கு கொண்டு போகும் 
அல்லது அதல பாதளத்திற்க்கு கொண்டு போகும் 
எது எப்படியோ படத்தின் தயாரிப்பாளர் கமல் அவரே இதை பத்தி கவலை 
கொள்ளவில்லை என்பதால் 

நாம் கவலை கொள்ள தேவை இல்லை