
தமிழில்
இவன் நினைத்ததை முடிப்பவன்
ரொம்ப நாளைக்கு பிறகு பட்டையை கிளப்ப வந்து இருக்கும் படம் இது
ஜாக்கி டைரக்சன் என்றாலே
படம் தீயாய் இருக்கும் அதே போல்தான் இந்த படமும்
முதல் காட்சியிலேயே கிளப்பி விடுகிறார்
தான் ஒரு சிறந்த ஆக்சன் டைரக்டர் என்பதை நிரூபித்து விட்டார்
நம்ம உதவி டைரக்டர் எல்லாம் இத பாருங்கப்பா
அந்த ஸ்கேட்டிங்க் மோட்டாரில் அவர் செய்யும் சாகசம்
சொல்லும் இவன் நினைத்ததை முடிப்பவன் என்று

பட முன்னோட்டம்
இன்னும் என்ன வேகம் அப்பாடி
60 வயது நம்பவே முடியவில்லை
12 ராசி சிலைகளை கண்டுபிடிப்பதுதான் கதை என்றாலும்
திரைக்கதை படு இயல்பாக இருக்கிறது

அந்த கடைசி காட்சியில் ஜாக்கி செய்வது அசத்தல்
நவீன தொழில் நுட்பம் படத்தை கிளப்ப வைக்கிறது
படத்தை சொல்ல முடியாது பார்த்தால்தான் இதனை
உணர முடியும்
தமிழில் பார்க்கும்பொழுது நகைச்சுவை மிளிர்கிறது
குறிப்பாய் படம் எப்படி எடுத்தார்கள் என்று கடைசி காட்சியில்
காட்டுவதை மறக்காமல் பாருங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக