
ஒரு நல்ல திரைக்கதை ரொம்ப நாளைக்கு பிறகு
புளித்துப்போன டான் கதை இல்லாவிட்டால்
கெக்கே பிக்கே என ஒன்றும்
இல்லாத கதையை வைத்துகொண்டு ஜல்லி அடிக்காமால்
பார்ப்பவரை சிந்திக்க வைக்கும் கதை
இயக்குனர் திருவுக்கு வாழ்த்துக்கள்
இரண்டு பணக்காரர்கள் வாழ்க்கை போர் அடித்து போக
மனிதர்களை வைத்து கேம் விளயாட ஆரம்பிக்கிறார்கள்
அந்த விளையாட்டில் விசால் த்ரிஷா மாட்டிக் கொள்ள
அதில் இருந்து எப்படி விசால் தப்பித்து வருகிறார் என்பதுதான் கதை
கதை நிகழும் இடம் பாங்காக் அற்புதமான இடம்
அந்த மொட்டை மாடி ஹோட்டல் அபாரமான இடம்
கொஞ்சம் எடிட் செய்து இருந்தால் இன்னும் விறுவிறுப்பு இருந்து இருக்கும்
த்ரிஷா அழகு தேவதையாக வருகிறார்
அழகு அழகு பாடல் இரண்டு கதாநாயகிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என திரு அழகாய் காட்டி உள்ளார்
விசால் சார் அந்த தீம் சாங் ஆசை உங்களையும் விடவில்லையா
அந்த பாடலை கட் செய்து இருந்தால் படம் இன்னும் தரம் கூடி இருக்கும்
இந்த பட விமர்சனத்தை படித்து விட்டு ஒரு முறை இந்த படத்தை பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்
திரு இந்த மாதிரி கதைகள்தான் இப்பொழுது தேவை
ஒரு பெரிய வலம் வர வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக