
முதல் காட்சியில் அலெக்ஸ்பாண்டியன் என்று வரவும் தியேட்டர் மாறி வந்து விட்டோமோ என சின்ன குழப்பம் வர சேது சட்டையை கழட்டும் போது நம் குழப்பம் தீருகிறது

பாக்யராஜ் அவர்களின் இன்று போய் நாளை வா படத்தின் மறுபதிப்பு என்பதால் கதை பற்றி சொல்ல வேண்டியது இல்லை
மூன்று இளைகர்கள்ஒரு பெண்ணை காதலிக்க அவர்களில் ஒருவரை கை பிடிப்பதே கதை
முதலில் ராமநாரயணனுக்கு நன்றி கூற வேண்டும்
குறைந்த முதலீட்டில் மீண்டும் தமிழ் சினிமா வெற்றி பெரும் என்று நிரூபணம் செய்ததற்கு
சந்தானம் அவர்கள் படத்தின் தயாரிப்பாளராய் இருந்தும் படம் முழுக்க நான்தான் வருவேன் என்று அடம் பிடிக்காமல் பவர் ஸ்டாரை முக்கியப்படுத் தியதற்கு
இன்று போய் நாளை வாவில் பாக்யராஜ் மட்டுமே பட்டையை கிளப்புவார்
ஆனால் இந்த பதிப்பில் பவரும் சந்தானமும் அதை நிவர்த்தி செய்கிறார்கள்
சிலரை பாக்க பாக்க பிடிக்கும் என்னை பாக்காமலே பிடிக்கும் என பவர் சொல்லும்போது அரங்கம் குலுங்க பவருக்கு இனி ஏறு முகம்தான்
அதுவும் சலங்கை ஒலி கமல் போல் ஆட அவர்க்கு ஜால்ராக்கள் அடிக்கும் லூட்டி நல்ல கலகலப்பு

பவரை என்ன கலாய்ப்பு கலாய்த்தாலும் சிரித்த முகத்துடன் இருப்பது அவர் மட்டும்தான் வாழ்க பவர்
டேய் நானாவது காமடியன்னு தெரிஞ்சு வாழ்ந்துகிட்டு இருக்கேன்
நீ அது கூட தெரியாம இருக்கியே என பவரை வாரும் சந்தானம்
சந்தானத்தின் நண்பர் சிம்பு என்பதால் அவரும் வந்து போகிறார்
லாஜிக் பார்க்காமல் இருந்தால் சிரிக்க வைக்கும் படம்
பவர் வரும் அனைத்து காட்சிகளும் ரசிக்க வைக்கிறார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக