
சந்தானம் இருக்கிறார்
அனுஷ்ஹா இருக்கிறார்
கார்த்தி இருக்கிறார்
சுராஜ் இருக்கிறார்
ஆனால் கதை அதுதான் இல்லை
சார் பர்ஸ்ட் நாலு ரீல் சந்தானம் இருக்கிறார்
அடுத்த நாலு ரீல் காட்டுக்குள்ள த்ரில்லிங்
கடைசி நாலு ரீல் கிளைமாக்ஸ்
படம் பிச்சுக்கும் என்று டைரக்டர் சொன்னதை கேட்ட
கார்த்தியும் தயாரிப்பாளரும் நம்பி கேட்ட கெட்ட கதை அலெக்ஸ் பாண்டியன்
பட முன்னோட்டம்

முதல் காட்சியில் அனைத்து பைட்டையும்முடித்து வரும் வரை
ட்ரைன் மெதுவாக செல்லும்போதே சின்னதாய் டவுட் வந்தது
சுராஜ் அப்படியெல்லாம் விட மாட்டார் என்று நினைத்தேன்
ஏற்கனவே வந்து நொந்து போன கதை
பணத்திற்க்காக எதுவும் செய்யும் ஹீரோ முதல் அமைச்சரின் மகளை கடத்துகிறார்
பின்பு எதற்காக கடத்தப்படுகிறோம் என தெரிந்தவுடன்
கதாநாயகியை காப்பாற்றி தமிழ்நாட்டையும் காப்பாற்றுகிறார்

படத்தின் சிறப்பான விஷயம்
சண்டைக்காட்சிகள்; அற்புதமாக காட்சி படுத்தி இருக்கிறார்கள்
பேட் பாய்ஸ் சாங் பாடல் அற்புதம் புது முயற்சி
சரவணனும் கார்த்தியும் சந்திக்கும் போது சித்தப்பு என்று சொல்லும் காட்சி
சந்தானம் உங்களுக்கு என்ன ஆயிற்று
இவ்வளவு கேவலமான காமெடி வேண்டாம்
எஸ்.வி .சேகர் கிரேஸி மோகன் போன்ற ரைட்டர்களை வைத்து கொண்டு
கிளப்ப வேண்டாமா
அனுஷ்ஹா எவ்வளவு அழகான தேவதை படம் முழுக்க வர வேண்டாமா
கொடுக்கிற காசுக்கு வேலை வாங்குங்கள் சுராஜ் சார்
கார்த்தி அவர்கள் இது மாதிரி தொடர்ந்தால் சற்று கஷ்டம்தான்
Good review.
பதிலளிநீக்கு