வியாழன், 31 ஜனவரி, 2013

விஸ்வரூபம் விமர்சனம் viswaroopam kamal

விஸ்வரூபம் விமர்சனம் viswaroopam kamal



கமல் மனைவி பூஜா பேசுவது போல் படம் ஆரம்பிக்கிறது
எனக்கு அவர பிடிக்கல அவரு பொம்பள போல இருக்காரு
ஆமா உங்களுக்குள்ள ஒன்னும் இல்லையா
எனக்கு படுத்துகிட்டே படிக்க பிடிக்காதுன்னு சொல்லிட்டேன் அவரும் ஒத்துக்கிட்டார்
அவர் எப்படி இருப்பார்என  சொல்ல

கமல் தக தக என ஆடுகிறார் என்ன ஒரு அபிநயம்
பெண் போல அவ்வளவு அழாகாய்  ஆடுகிறார்

 கமல் மனைவி கமலை எப்படியாவது கலட்டி விட்டு விட்டு அவளுடைய பாஸ் இளைகன் ஒருவனை மடக்காலாம் என நினைக்க


கமலை பற்றி உண்மைகளை அறிய ஆள் வைத்து துப்பறிய 
கமல் ஒரு முஸ்லிம் என தெரியவருகிறது ஆனால் துப்பறிய வரும் நபரை வில்லன்கள் சந்தேகப்பட்டு கொல்ல
வில்லன்கள் கூட்டம் கமலையும் கமல் மனைவியையும் கடத்த கதை சூடுபிடிக்கிறது

கமலை பார்க்கும் ஓமருக்கு (கமல் பற்றி அனைத்து ரகசியம் தெரிந்த முஸ்லிம் குழு தலைவர்)
அதற்குள் கமல் நமாஸ் பண்ண வேண்டும் என அனுமதி கேட்டு 
அங்கு இருந்து தப்பிக்க கமல் மனைவி நீங்கள் யார் என கேட்க
கதை சொல்ல ஆரம்பிக்கிறார்

ஒசாமா பின்லேடனை அழிக்க இந்திய உளவுத் துறை மூலமாக  அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க கமல் ஆப்கானிஸ்தான் செல்ல
அங்கு இருக்கும் முஸ்லிம் அமைப்பிற்கு பயிற்சி கொடுக்கிறார் பின்பு ஒசாமா பின்லேடனை கொல்ல உதவி செய்து (கமல் உதவி செய்வது யார்க்கும் தெரியாது )அங்கு இருந்து கிளம்பும் பொழுது அமெரிக்காவை நியுக்கிளியர் பாம் மூலம் ஓமர் கொள்ள சதி  செய்வது தெரிந்து அதை தடுக்க
  
விஸ்வாநாதன் எனும் நாட்டிய கலைகனாக நியூயார்க் வந்த கதை சொல்கிறார்
முடிவில் ஓமரின் சதியை முறியடிக்கிறார்

அழகாய் ஆரம்பிக்கும் திரைக்கதை தலிபான் கதை களம் செல்லும்பொழுது சற்று நொண்டிஅடிக்கிறது 
பின்பு நியூ யார்க் வரவும் கதை சூடு பிடிக்கிறது
சிறப்புகள்
தக தக என கமல் ஆட நாமும் ஆடுகிறோம் 
என்ன ஒரு அழகான நடனம்
அந்த ஆப்கானிஸ்தான் செட்டிங்குகள் ஹெலிகாப்டர் சண்டை காட்சிகள் படத்தை ஹாலிவுட் தரத்திற்கு கமல் கொண்டு சென்று உள்ளார்

வசனம் பல இடங்களில் சுஜாதாவை நினைவு படுத்துகிறார்
அரச கட்டளை வேலை பார்த்தாகணும்
என்னால படுத்துகிட்டு படிக்க முடியாது
அல்லா நம்மளை மன்னிக்க மாட்டார் என கமல் தன் உதவியாளரிடம் சொல்ல  
என்னைய இல்ல ஏன்னா நான் முஸ்லிம் இல்ல என சொல்லும் பொழுது வசனம் அற்புதம்

ஓமர்  நீ என்ன ஆகப் போற என மகனிடம் கேட்க டாக்டர் என பதில் சொல்ல டுஷ் என நெத்தியில் கை வைக்க 
எல்லாரும் டுஸ் என சொல்ல
அற்புதமான காட்சி
குறைகள்
கமல் எதற்காக ஆப்கானிஸ்தான் செல்லுகிறார் யார் அவரை அனுப்புகிறது
தமிழ் ஜிகாதி என சொல்லும் கமல் எங்கு இருந்தார் என சின்ன பிளாஸ் பேக் கூட இல்லாதது
சீசியம் பற்றி எத்தனை பேர் தெரிந்து வைத்து இருப்பார்கள் அதனை பற்றி இன்னும் விவரித்து இருக்க வேண்டும்
தசாவதாரம் படத்தில் அந்த குரங்கு சாகும் காட்சி போல் ஏதாவது செய்து இருக்கலாம்


தீவிரவாதம் அழிய வேண்டும் என சொல்லும் கதை  ஒரு முறை பார்க்கலாம்
கமல் அவர்களுக்காக கண்டிப்பாகபார்க்க வேண்டும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக