புதன், 31 அக்டோபர், 2012

ஜேம்ஸ்பாண்ட் ஒரு பார்வை

ஜேம்ஸ்பாண்ட் ஒரு பார்வை

ஜேம்ஸ்பாண்ட் படம் என்றாலே களை கட்டும்

சில நேரங்களில் எம்.ஜி.ஆர் படம் என்றால் கிக் இருக்கும்

சில நேரங்களில் ரஜினி  படம் என்றால் கிக் இருக்கும்


சில நேரங்களில்விஜய்   படம் என்றால் கிக் இருக்கும்

சில நேரங்களில்அஜீத்படம் என்றால் கிக் இருக்கும்

ஆனால் எப்பொழுதும் கிக் இருக்கும் ஒரே படம் நம்ம ஜேம்ஸ்பாண்ட் படம் தான்

இதுவரை ஆறு பேர்கள் ஜேம்ஸ்பாண்ட்டாக பட்டையை கிளப்பி இருக்கிறார்கள்

இவர்தான் முதல் ஜேம்ஸ்பாண்ட்

1.சீன்கானரி








ஏழு படங்கள் 1962  முதல்    1983 பட்டையை கிளப்பியவர்



அடுத்தவர் 

ஒரே படம் 1969இல் ஒரே படம் பண்ணியுள்ளார் 

2.ஜார்ஜ் லேசன் 




















3.ரோஜர் மூர் 
இவரு ஏழு முறை பட்டையை கிளப்பியவர் 



1973 முதல் 1985 வரை



4.டிமாதி டால்டன் 


1987 முதல்   1989 வரை இரு படங்கள் 


5.பியர்ஸ் பிரான்சன் 
அதிக ரசிகர்களை பெற்ற ஒரே ஜேம்ஸ்பாண்ட்

1995 முதல் 2002 வரை 4 படங்கள் 



6.டேனியல் கிராக் 


தற்போது பட்டை லவங்கம் என கிளப்பி கொண்டு உள்ளவர் 

இது வரை மூன்று படங்கள் 

நாளை வெளி ஆகும் ஸ்கை பால் 50 வருடஜேம்ஸ்பாண்ட் சகாப்தத்தை  தொடுகிறது 

செவ்வாய், 30 அக்டோபர், 2012

புரோட்டா பிரியரா நீங்கள் உஷார்

புரோட்டா பிரியரா நீங்கள் உஷார்

நாம் ஹோட்டலுக்கு சென்றதும் முதலில் சாப்பிட நினைப்பது புரோட்டாவைத்தான் அதற்கு காரணம் அது மட்டும்தான் நம் வீட்டில் செய்ய முடியாத உணவுப்பொருள்

சிறுவர்கள் என்றால் சில்லி புரோட்டா என்று அடம் பிடிப்பார்கள்







புரோட்டாவில் சத்து இல்லை என்று ஜல்லி அடிக்க நான் வரவில்லை

புரோட்டா செய்யும் முறை பற்றியும் அதில் எவ்வளவு சுகாதாரம் இல்லை என்பதையும் சொல்ல போகிறேன்


குறிப்பாக புரோட்டா நன்றாக இருக்க வேண்டும் என்றால் நன்றாக கைகளால் பிசைய பிசைய தான் மெதுவாக இருக்கும்
இந்த புரோட்டா மாஸ்டர்கள் கைகளில் உள்ள நகங்களில் இருக்கும் அத்தனை அழுக்குகளும் புரோட்டாவிற்கு மாவு பிசையும் போதுபுரோட்டாவில் கலந்து விடுகிறது

புரோட்டா என்பது முழவதும் வேகும் பொருள் அல்ல மேலே கீழே மட்டும் வெந்து மற்ற இடங்களில் சூட்டில் மட்டும் இருக்கும்
எனவே ஒருவேளை நக அழுக்கு கிருமிகள் இருந்தாலும் அவை அழியாது

இந்த நக அழுக்களில் என்ன கிருமி வேண்டுமானாலும் இருக்க வாய்ப்பு உள்ளது

அண்மையில் நான் புரோட்டா சாப்பிட்டு வந்ததும் வயிறு வலி வர புரோட்டவிற்குவழங்கப்படும் சால்னாவினால் அதிக காரம் இருப்பதால் தான் என்று நினைத்து இருந்தேன்


ஆனால் ஒரு புரோட்டா மாஸ்டர் என் வயிற்று வலிக்கான காரணம்
 நக அழுக்கு கிருமிதான் என விளக்கி சொன்ன போது தான்உண்மை  தெரிந்தது

மிக பெரிய ஹோட்டல்களில் கூட புரோட்டவிற்கு மாவு பிசையும் போது
கைகளில் க்ளௌஸ்அணிவதில்லை என்று கூறுகிறார்கள்
 எனவே நண்பர்களே புரோட்டா சாப்பிடுமுன் சுவையா சுகாதாரமா என யோசித்து முடிவு செய்யுங்கள்
  




ஞாயிறு, 28 அக்டோபர், 2012

திருத்தணி விமர்சனம்

திருத்தணி விமர்சனம்




படம் பொங்கலுக்கு[2012] வர வேண்டியது


பேரரசுவின் படம் என்றாலே பஞ்ச் டயலாக் பறக்கும் இதில் கொஞ்சம் கம்மி
பேரரசுவின் ஆஸ்தான நடிகரே[விஜய் ] தனது ரூட்டை மாற்றிகொண்டாலும்

இவர் மட்டும் தனது ரூட்டை மாற்றாமல் இருப்பது ஏனோ

கதை முதல் காட்சியில் பரத்தின் தங்கையை யாரோ தொட அவர்களை துவம்சம் செய்கிறார்
இதனை பார்த்த மிலிட்டரி ராஜ்கிரண் இந்த உலகத்தை எப்படியாவது பரத்தின் மூலம் திருத்தி விடலாம் என்று நினைக்கிறார்

இன்னொரு இடத்தில் அநியாயம் நடக்க
அதனை பார்த்தும் பார்க்காதது போல் பரத்  செல்ல
ராஜ்கிரண் குழம்புகிறார்
பரத்திடம் நீ ஏன் எல்லா அநியாயத்தையும் தட்டி கேட்க மாட்டேன் என்கிறாய் என கேட்க
நான் என் குடும்பத்திற்காக மட்டும் தான் சண்டை போடுவேன்
மற்றவர்களுக்காக சண்டை போட மாட்டேன் என சொல்லி
அதற்காக ஒரு மொக்கை பிளாஷ் பேக் சொல்ல
ராஜ்கிரணுடன் நாமும் கோபம் கொள்கிறோம்

உடனே ராஜ்கிரண் மூளையை கசக்கி ஒரு திட்டம் போட்டு
பரத்தை வைத்து அநியாயத்தை தட்டி கேட்க வைக்கிறார்
ஆனால் அந்த திட்டம் பரத்துக்கு தெரிந்து
 பரத் ராஜ்கிரனை அடிக்க போக
அங்கு ஒரு மொக்கை ட்விஸ்ட் செய்ய
 பரத்  கண் கலங்குகிறார்

கடைசியில் இன்னொரு மொக்கை திட்டம் மூலம் பரத்தை காப்பாற்றி
படம் முடிய நாமும் ஒரு வழியாக  தப்பித்து வருகிறோம்

பரத்துக்கு சிக்ஸ் பேக் வந்த பிறகு படம் எடுக்கலாம் இருந்த பேரரசு
தயாரிப்பாளர் இதுக்கு மேல லேட்ஆனா யாருக்கும் சம்பளம் கிடயாது என்று சொல்ல
இருக்கும் பேக்கை வைத்து படம் எடுத்து விட்டார் என தெரிகிறது



பட முன்னோட்டம்




ராஜ்கிரணுக்கு சம்பளம் கொடுக்க வில்லை என்ற காரணத்திற்காக நம்மை பலி வாங்கி இருக்கிறார் ராஜ்கிரண்


படம் லோ பட்ஜெட் என்பதற்காக தீவரவாதிகள் தமிழ் பேசுவதும்
மிலிட்டரி ஆபரேஷன் நடக்கும் இடம்
ஏதோ கருவா காடு என்பதும்  மகா  கொடுமை
படத்தில் பாராட்டப் பட வேண்டியவைகள்


முதல் நாற்பது நிமிடம் படம் கல கல என  செல்கிறது
காட்சிகள் ரீபிட் என்றாலும்ரசிக்கும் படி உள்ளது
அப்பு குட்டியை  செந்தில் போல பயன்படுத்தி இருக்கிறார்கள்


மற்றபடி மொக்கை திரைக்கதை எப்படி பண்ணுவது என்று பேரரசுவிடம் படிக்க  விரும்புவோர் இந்த படத்தை பார்க்கலாம்

செவ்வாய், 23 அக்டோபர், 2012

பீட்சா திரை விமர்சனம்

பீட்சா திரை விமர்சனம் 






பட முன்னோட்டம்


இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு வாழ்த்துக்கள்(தம்பி நம்ம மதுரையப்பா )


முதல் படமாய் ஒரு திகில் படத்தை கொடுத்த தைரியத்திற்கு 

அமெரிக்காவா சினிமாவா என்பதிற்கு சினிமாவே வேண்டும் என வந்துள்ள இந்த இளைகருக்கு நிறைய எதிர் காலம் இருக்கு 

கதை பற்றி என் விமர்சன குரு செந்தில் குமார் அவர்களே ஒன்றும் சொல்லாததால்   நானும் சொல்லவில்லை 


ஹீரோ விஜய் சேதுபதிக்கு வாழ்த்துக்கள் நல்ல நடிப்பு

பொய்யை கூட நடிப்பால் உண்மையாக்க முடிபவனேநல்லா நடிகன் என சிவாஜி அவர்கள் சொல்வார்கள் அதை விஜய் சேதுபதி நிரூபணம் செய்து உள்ளார் 
முதல் நாற்பது நிமிடம் மிக மெதுவாக படம் நகற்வது உறுத்தல்  ஆனால் அதற்கு பிறகு படம் நாலு கால் பாய்ச்சலில் செல்கிறது 
ரொம்ப நாளைக்கு பிறகு சற்று பயமுறுத்திய படம் இது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும் 

சுஜாதா கதைகளில் கடைசி வரியில் ஒரு பாம் இருக்கும் 
அதே போல் இந்த படத்தின் கடைசி காட்சியல் ஒரு ட்விஸ்ட் உள்ளது

நல்ல திரை கதைக்கு இந்த படம் ஒரு உதாரணம்  





நான் ரசித்த வசனம்  பயங்கரமான பேய்கல்லாம் இந்த உலகத்தில இன்னும் உயிரோடதான் இருக்கு நம்மள மாதிரி  மனுசங்களா என்ன ஒரு உண்மை 
மிக சரியான விளம்பரம் கொடுக்கப்பட்டால் இந்த படம் நல்ல பலன் கொடுக்கும் 
மிக அளவான நடிப்பு முதல் படம் என்பதால் சின்ன சின்ன தவறுகள் இருந்தாலும் கதை ஓட்டத்தில் தெரியவில்லை 

நேரம்  இருந்தால் பாருங்கள் 
விடுமுறை காலத்தில் வெளியிட்டு இருந்தால் சிறுவர்களை சென்று அடைய வசதியாய் இருந்து இருக்கும் அதனால் என்ன அது வரை இந்த படம் ஓடும்  




ஞாயிறு, 21 அக்டோபர், 2012

யார் இந்த வதேரா

யார் இந்த வதேரா



இன்று நாட்டையே கலக்கி கொண்டு இருக்கும் நபர் இவர்

ஆனந்தவிகடன் அற்புதமாக இவரை பற்றி முன்னோட்டம் இட்டு விட்டது

சிவாஜி படத்தில் வரும் ரஜினி போல் வெறும் கையில் முழம் போட்டு இன்று முந்நூறு கோடி (கணக்கில் வந்தது ) சம்பாதித்திருக்கிறார்

வங்கியில் கடன் வாங்கி அந்த பணத்தில் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து

தனது மாமியாரின் செல்வாக்கை பயன்படுத்தி(சோனியா காந்தி )

சம்பாத்திக்க ஆரம்பித்த இவர் விரைவில் வதேரா காந்தி ஆனாலும் ஆகலாம்

இவர் பிரதமர் ஆனால் என்ன நடக்கும் என்பதை யூகித்து கொள்ளுங்கள்
     



அரசியல் ஞானம் இல்லாத மக்களால் தேர்ந்து எடுக்கும் தலைவர்கள்


தலைமைக்கு தகுதி ஆனவர் அல்ல என பிளாட்டோ சொன்ன வார்த்தையை
மதித்து அரசியல் கற்று கொள்ள பழகுவோம்

எனவே என் இனிய இந்தியர்களே நாம் அனைவரும் அரசியல் கற்றுக்கொள்வோம்

சனி, 20 அக்டோபர், 2012

தமிழ் நாட்டை காப்பாற்றிய இயற்கை

தமிழ் நாட்டை காப்பாற்றிய இயற்கை

படு மோசமான மின் வெட்டை தமிழ்நாடு சந்தித்த வேலையில்
 யாருமே உதவாத சூழ்நிலையில்

கைகட்டி வேடிக்கை பார்த்த மத்திய அரசு

வாயே திறக்காத பாராளுமன்ற உறுப்பினர்கள்

மத்தியில் தமிழக அமைச்சர்கள் இருந்தும்

மின் வெட்டை கண்டு கொள்ளாத  சூழ்நிலையில்

வருண பகவான் புண்ணியத்தில் தமிழ்நாடு குளிர்ச்சி அடைய

மின் விசிறிகளும் குளிரூட்டிகளும் இளைப்பாற

1000 மெகா வாட் மின்சாரம் மிச்சப்பட சற்றே நிம்மதி பெருமூச்சு
மக்களிடம்

வருண பகவானுக்கு உள்ள மனம் கூட

நம் மத்திய அரசுக்கும் அதற்கு ஒத்து ஊதும் மனிதர்களும் மனது வைப்பார்களா

ஜெராசிக் பார்க் படத்தில் ஒரு வசனம் வரும் இயற்கையை யாரும் கட்டு படுத்த முடியாது என்று ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் எழுதி இருப்பார்
அது போல் மனிதனை காப்பாற்றக் கூடிய ஒரே விஷயம் இயற்கை
]




வெள்ளி, 19 அக்டோபர், 2012

மாற்றான் விமர்சனம் [maatraan]

மாற்றான் விமர்சனம்


சுபாவின் மூன்றாவது படம் மாற்றான் சாரி k.v.ஆனந்த்

சூர்யாவிற்கு அல்வா மாதிரி வேடம் சும்மா கலக்கி இருக்கிறார் .
கதை காம்ப்ளான் மாதிரி ஒரு பொருள் இந்தியா முழுக்க நன்றாக விற்கிறது (படத் தை ஹிந்தியில் டப் பண்ணலாம் )
அதன்  உரிமையாளரின் மகன்கள் சூர்யா &சூர்யா

எனர்ஜியான் என்கிற அது பால் பவுடரா அல்லது உற்சாக பானமா என்பது சுபாவிற்கு மட்டுமே தெரியும்

கதைக்கு வருவோம் எனர்ஜியானின் புகழ் ரஷ்யாவிற்கும் தெரிய (அது எப்படிங்கோ )
அங்கிருந்து ஒருபெண்  நிருபர் சூர்யாவின் தந்தையை அதாவது    எனர்ஜியானின் உரிமையாளரை பேட்டி எடுக்க
அவருக்கு சந்தேகம் வந்து அவரை வெளியே அனுப்ப

அவர் ஒரு வழியாக சூர்யாக்களின் புண்ணியத்தில் எனர்ஜியானின் இரகசியத்தை தெரிந்து கொள்ள (நமக்கு ரகசியம் தெரிய படம் முடிந்து விடுகிறது)
இதற்கு நடுவில் கதா  நாயகி காஜல் அகர்வால் சூர்யா no .1ய் காதலிக்கிறார்.


ரஷ்யா மொழி தெரிந்த அவர் ரஷ்யா பெண் நிருபரின் நண்பி ஆக
எனர்ஜியான்ரகசியம் தெரிந்த ரஷ்யா பெண் நிருபர் கொள்ளப்பட

ஒரு சூர்யாவிற்கு விஷயம் தெரிய அவரும் கொள்ளப்பட
 (அது பற்றி யாரும் எதுவும் பெரிதாய் கண்டு கொள்ளவில்லை)
இன்னொரு சூர்யாவிற்கு சந்தேகம் வர
 காஜல் அகர்வால் துணையுடன்
அதை அறிய ரஷ்யா செல்ல
 எனர்ஜியான் ரகசியம் தெரிவதுடன்
தனது தந்தையின் சதி அறிந்து திடுக்கிட
கடைசியில் தந்தை இறக்க
படம் முடிய
 பாலகுமாரன் ஒன்று சொல்வார் சினிமாவிற்கு வேறு மாதிரி கதை எழுத வேண்டும் நாவலுக்கு வேறு மாதிரி எழுத வேண்டும் என்பார்
ஆனால் சுபா அவர்கள் நாவல் கதையை அப்படியே கொடுக்க, ஆனந்த் அவர்கள் அப்படியே படம் எடுக்க, படம் சறுக்கி விட்டது

முக்கிய தவறு, அப்பா மகனை கொள்ள நினைப்பது, மகன் அப்பாவை மாட்ட வைப்பது ,இந்தியாவை பொருத்த வரை இந்த மாதிரி நினைப்பவர்கள் குறைவு

முதலில் திரைக்கதை அனைவருக்கும் புரிய வேண்டும்
 ஸ்ட்ராயிட் மருந்துகள் இவ்வளவு எதிர் விளைவு தருமா என்பது சந்தேகமே

படத்தின் சிறப்புகள்
ஹாரிஸ் இசை அயன் அளவுக்கு இல்லை என்றாலும் பரவாயில்லை

சூரியாவின் நடிப்பு கிளப்புகிறார்
' நான் உயிரோடு இருக்கும்போது நீயும் இறுப்படா' என்று சொல்லும் காட்சிகளில் கலங்க வைக்கிறார் .
ஆனந்தின் காமெரா சொல்லி கொள்வது போல் இல்லை
'கால் முலைத்த பூவே' பாடல் கொஞ்ச நாளைக்கு வாழும் ரகம்

பட முன்னோட்டம்

' ரெட்டை கதிரே' டைட்டில் பாடலாய் போய் விட்டது

 

காமெடி என்று ஒன்று இருப்பதாக தெரியவில்லை
சூர்யா கொஞ்ச நாளைக்கு ஹரி ,கெளதம் ,k.v.ஆனந்த் என்கிற வளையத்தை விட்டு வந்து படம் கொடுத்தால் நன்றாக இருக்கும்
A சென்டர்களில்ஓடும் .
மதுரை கலைவாணியும் ,இம்பாலாவும் சொல்லி கொள்வது போல் கூட்டம் இல்லை .  
சூர்யாவிற்காக பார்க்கலாம்






திங்கள், 1 அக்டோபர், 2012

ரெசிடென்ட் எவில் 5 திரை விமர்சனம்

 ரெசிடென்ட் எவில் 5 திரை விமர்சனம்

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு  என்பார்கள் .அந்த பழமொழி இந்த படத்திற்கு பொருந்தும்

படம் நன்றாக கல்லா கட்டுகிறது என்பதற்காக பார்ட் 5  எடுத்து இருக்கிறார்கள்
கதை அதே பழைய கதைதான்

 சதைகளை சாப்பிடும் மனிதர்களை அழிக்க உருவாக்கப்படும் கதாநாயகி  தனது புதிய கூட்டாளிகளோடு சேர்ந்து கொள்கிறாள் கொள்கிறாள் கொன்று கொண்டே இருக்கிறாள்

பழைய பார்ட்களில் இருந்த விறு விருப்பு சுத்தமாக இல்லை படம் 43 நாட்களில் உருவாக்கியது நன்றாக தெரிகிறது

சயின்ஸ் பிக்சன் படம் என்றால் ஏதாவது புதிய கருவி அல்லது உயிரினம் பற்றி இருந்தால் பார்க்க ஆர்வம் வரும் இதில் அப்படி ஒன்றும் இல்லை
    பழைய பார்ட்களில் வரும் அதே காட்சிகள் ரிபிட் அடிப்பது கொடுமை
அநேகமாக இது கடைசி பார்ட் என்று நினைக்கிறேன் (அடுத்த பார்ட் எடுத்தால் ஆப்பிரேட்டர் மட்டும்தான் பார்க்க வேண்டி வரும் )

அத்தனையும் செட் என்பது தெள்ள தெரிவாக தெரிவது படு மோசம்
பட முன்னோட்டம்

      Resident Evil: Retribution