சனி, 29 செப்டம்பர், 2012

தாண்டவம் விமர்சனம்

தாண்டவம் விமர்சனம்


எல்லாரும் ஆஹா ஓஹோ என்கிறார்கள்.அதனால் நான் சொல்வது சரியாக இருக்குமா என்பதை காலம் சொல்லும்

பழிக்கு பழி  வாங்கும்    கதையை நகாசு வேலை செய்து கொடுத்து இருக்கிறார்கள்.

லண்டனில் ஒரு வெடிவிபத்தை காட்டி விட்டு
பிளாஷ் பேக் ஆகிறது கதை
விக்ரம் செல்லும் இடமெல்லாம்(அவருக்கான டாக்சி டிரைவர் சந்தானம்)  யாரவது இறக்க
கதை மெல்ல நகர
லண்டன் போலீஸ் தேட ஆரம்பிக்க
எமிஜாக்சன் விக்ரம் மேல் காதல் கொள்ள
அது தெரிந்த விக்ரம் தனது பழைய வாழ்க்கையை நினைக்க 
மெல்ல இன்னொரு பிளாஷ் பேக்
அனுஷ்கா விக்ரம் திருமணம் என காட்ட
திரும்ப கதை கண் தெரியாத விக்ரம் எப்படி பயிற்சி பெற்றார் என்பதை காட்ட

மெல்ல கதை சூடு பிடித்து ஏன் விக்ரம் கொலை செய்கிறார் என விளக்கம் கொடுக்க 
சிபிஐ ஆபிசர் விக்ரம் கண் தெரியாமல் ஏன் போனார்
அவர் மீது வெடிகுண்டு வழக்கு
அனுஷ்கா ஏன் இறந்தார்
துரோகம் என்ன நடக்கிறது என சொல்ல
கடைசியில்  விக்ரம் உண்மையானவர் என நீதிமன்றம் சொல்ல எமிஜாக்சன் விக்ரமை தொடர படம் முடிகிறது
ஒரு அழகான நாவல் கதை இது சினிமா ஆகும்போது சறுக்கியது போல் தெரிகிறது
யாரடி யாரடி  மோகினி பாடல் விக்ரமும் எமியும் பாடுவார் என பார்த்தால் எமி தனியாக பாட முதல் சொதப்பல்
டேனியல் கிஸ் எப்படி கண் தெரியாதவர்கள் வாழலாம் என்று சொன்னால் அதை வைத்து இவர்கள் எப்படி கொல்லலாம் என்று சொல்ல எங்கோ இடிக்கிறது
படத்தின் பாராட்டக்கூடிய அம்சம்
மிக இயல்பாய் நடிக்கும் விக்ரம் (அனேகமாக சங்கர் மிகசரியாய் பயன் படுத்துகிறார்)உங்களுக்கு மிக நீண்ட காலம் தமிழ் சினிமாவில் இடம் உண்டு

 அனுஷ்கா படத்தின் மிக பெரிய பலம் அவ்வளவு அழகு இந்த படம் ஓடினால் அதற்கு முழு  காரணம்  அனுஷ்கா

ஆனால் பாடல்கள் சூப்பராய் இருந்தாலும் எடுத்த விதம் சொதப்பல்

சந்தானம் இந்த படத்துக்கு சம்பந்தம் இல்லாமல் இருக்கிறார்
எது எப்படியோ யு டிவி பல்பு வாங்கி விட்டது என்று நினைக்கிறேன்




படத்தின் முன்னோட்டம்





   

புதன், 26 செப்டம்பர், 2012

சாருலதா விமர்சனம் திரை விருந்து

சாருலதா விமர்சனம் திரை விருந்து

வாவ்  ப்ரியாமணிதானா என்ன ஒரு அற்புதமான நடிப்பு
படையப்பா ரம்யா கிருஷ்ணன்
சந்திரமுகி ஜோதிகா

வரிசையில் சாருலதா ப்ரியாமணியை நீண்ட நாள்களுக்கு நினைவுகூறலாம்

முதலில் இதன் மூலக்கதை ஆங்கில படமான ALONE நன்றி சொல்வோம்

படத்தின் ஆரம்பித்தில் சற்று தொய்வு இருந்தாலும் படம் போக போக சுவாரஸ்யத்தை அள்ளுகிறது

மாற்றான் கல்லா கட்ட வேண்டும் என்பதற்காக இந்த படத்தை குறை சொல்லும் மல்டிப்லெக்ஸ் ஓனர்கள்  தவிர்க்க

உணர்வுகளை நடிப்பாய் காட்டுவதுதான் நல்ல சினிமா என்றால், இந்த படம் நல்ல சினிமாதான்.

ஒரே உருவம் உள்ள இருவர் படம் நிறய இருந்தாலும் இந்த படம் புது முயற்சி

இரட்டயர்களில் ஒருவர் காதலிக்க இன்னொருவர் பொறாமை பட இரட்டயர்களில்  ஒருவர் இறக்க கதை சூடு பிடிக்கிறது

மந்திரவாதி, சஞ்சீவி வேர், என வரும்போதே கொஞ்சம் சுவாரசியம் ஆரம்பிக்க அதன் பிறகு கதை பல்சராய் பறக்கிறது

கடைசியில் சரண்யா வந்து படத்தை சுபமாய் முடிக்கிறார்

படத்தில் ஒரு காட்சி ப்ரியாமணி கிளாமராய் நடந்து வர நான் எப்படி இருக்கிறேன் என
ரவியிடம் கேட்க
புலவராய் சொல்லவா
பொறுக்கியாய் சொல்லவா எனும் போது
ஒரு மரக் கள் என பொறுக்கியாய் சொல்லி விட்டு
அடுத்து  புலவராய்   தேனில் நனைந்த  தேவதை என்ற வசனம் வாரே வா

அரிவாள் ,துப்பாக்கி, பத்தாவது மாடியில் இருந்து குதிப்பது, என்கிற தமிழ் சினிமாவின் தகுதி இந்த படத்திற்கு இல்லை

ப்ரியாமணியை வைத்து படையப்பா 2 எடுக்கலாம் ரவிக்குமார் ஜி கவனிக்க

  Charulatha movie stills (9)



      தென்னிந்திய நடிகை ப்ரியா மணி நீண்ட நாட்களுக்கு பின்பு, கோலிவுட்டில் உருவாகும் சாருலதா படத்தில் நடிக்கின்றார்.
இப்படத்தை  சேரன், பசுபதி நடித்த ராமன் தேடிய சீதை படத்தை இணைந்து தயாரித்த குளோபல் ஒன் ஸ்டீயோஸ் தயாரிக்கின்றது.
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், கே.பாக்கியராஜ் இருவரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றிய பொன்குமரன் சாருலதாவை இயக்குகின்றார்.
இப்படத்தின் நாயகனாக ஸ்கந்தா நடிக்கின்றார். இவர் மலையாளத்தில் வெளியாகிய நோட்புக் படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
மேலும் சரண்யா பொன்வண்ணன், சீதா, வேட்டைக்காரன் படத்தில் நடித்த சாய்சசி ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். கணேஷ் என்ற புதுமுக நடிகர் நகைச்சுவை கதாப்பாத்திரத்திற்கு அறிமுகமாக அவருக்கு ஜோடியாக குண்டு ஆர்த்தி இணைகின்றார்.
இப்படத்திற்கான ஒளிப்பதிவை எம்.வி பன்னீர் செல்வம் கவனிக்க, அஞ்சாதே, சித்திரம் பேசுதடி, ஈசன், போராளி ஆகிய படங்களுக்கு இசையமைத்த சுந்தர் சி.பாபு இசையமைக்கின்றார்.
மேலும் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்: எடிட்டிங்- டான்மேக்ஸ், வசனம்-ஜி.சபரிநாதன், யோகநாத், உடைகள்-ரோஷிணி, தயாரிப்பு மேற்பார்வை-ராஜா ரவி, இவர் கார்த்திக்-சௌந்தர்யா இணைந்து நடித்த பொன்னுமணி படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
TRAILOR 

திங்கள், 17 செப்டம்பர், 2012

சில சந்தேகங்கள்

சில சந்தேகங்கள்



டீசல் விலை ஏற்றியதில் நிறைய அரசியல் இருக்கிறது

எப்பொழுதும் பெட்ரோல் விலையை கூட்டுபவர்கள்  ஏன் டீசல் விலை கூட் டினார்கள். என்பது புரியவில்லையா

பெட்ரோல் கார் விற்கவில்லையாம். அதனால் டீசல் விலை ஏற்றினார்களாம்
நமது ஓட்டுக்கு நல்ல மரியாதை

m.p க்கள் வாயை எப்போது திறப்பார்கள்   

தமிழ் வார இதழ் விரும்பியா நீங்கள்

தமிழ் வார இதழ் விரும்பியா நீங்கள் கீழே கொடுக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்யுங்கள்,
வாரஇதழ் படிக்கலாம் டிவி சீரியல் பார்க்கலாம்

http://arrkaay.blogspot.in/search/label/tamil%20magazines


adf.ly என்று வரும் அதன் மேல் கிளிக்  செய்து பாருங்கள்

ஆனால் இந்த ப்ளாக்கை அடிக்கடி லாக் செய்வார்கள்

ஏதேனும் பிரச்சனை என்றால் தெரிவியுங்கள்.
நாளை இன்னொரு லிங்க் தருகிறேன்
வார இதழ் பார்க்க   

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

sundara paandian review

tamil film sundara paandian

சுந்தர பாண்டியன் திரை விமர்சனம்


சசிகுமாரின் படம் என்றலே மதுரை ஸ்லாங் இருக்கும் .
அதிலும் கதை களம் உசிலம்பட்டி கேட்கவா வேண்டும் .பின்னி பெடல் எடுத்து இருக்கிறார்கள் .

இயக்குனர் பிரபாகரன் படம் என்பதை விட சசிகுமார் படம் என்றே சொல்லலாம் .

பிரபுதேவா அரவிந்த்சாமி நடித்து  ஒரு படம் வந்ததே  மின்சாராக் கனவு முதல் பாதி   அதை மிக கலகலப்பாக சொல்லி இருக்கிறார்கள்.

சந்தானம் ஜீவா கூட்டணி போல் சசிகுமார் சூரி மிகப்பொருத்தம்

நம்மதான் குறு குருன்னு பாத்துகிட்டே இருக்கனும் .ஏதாவது ஒரு
ஆங்கில்லே அஜித் மாதிரி தெரிவோம் என்று சூரி  சொல்லும்போது    கைதட்டலில்  படத்தின் வெற்றி தெரிகிறது.

முதல் பாதி படத்தின் வேகம்  ஜிவ் என பறக்க  இரண்டாம் பாதி சற்று நொண்டி அடிக்கிறது

பஸ்சில் சைட் அடிப்பதற்காக இவ்வளவு களேபரம் நடக்குமா என்கிற லாஜிக்
சற்று இடிக்கறது .இப்படிப்பட்ட கதையில் கதாநாயகி  கொஞ்சம் தூக்கலாய் இருக்க வேண்டும்

மின்சாரகனவில் காஜல் கிளப்புவார்.

ஜாதிகளை காட்ட கமலின்  விருமாண்டி  உத்தி இந்த படத்திலும் காட்டப்படுகிறது
 கதை      சசிகுமார் , நண்பன் காதலை வளர்க்க பாடுபட ,நண்பனின் காதலி சசிகுமாரை காதலிக்க
அதனால் ஏற்படும் குழப்பம் அதை எப்படி அவர் சமாளித்தார்
கடைசியில் விக்ரமன் பட   பாணியில் சுபம்
முதல் பாதி திரைக்கதை நல்ல காமடி
என் அத்தை மகளை நான் எப்ப வேணும்னாலும் கண் அடிப்பேன் என்கிற வசனம் சசிகுமாரை பெண்கள் மனதில் நிற்க வைக்கும்
மொத்ததில் படம் கல கல என இருக்கிறது .
அப்புக்குட்டி பிரமாதப்படுத்துகிறார்  அந்த கூலிங் கிளாஸ் காட்சி பிரமாதம்
சசிகுமாரின் படம் என்றலே மதுரை ஸ்லாங் இருக்கும் .
அதிலும் கதை களம் உசிலம்பட்டி கேட்கவா வேண்டும் .பின்னி பெடல் எடுத்து இருக்கிறார்கள் .

இயக்குனர் பிரபாகரன் படம் என்பதை விட சசிகுமார் படம் என்றே சொல்லலாம் .

பிரபுதேவா அரவிந்த்சாமி நடித்து  ஒரு படம் வந்ததே  மின்சாராக் கனவு முதல் பாதி   அதை மிக கலகலப்பாக சொல்லி இருக்கிறார்கள்.

சந்தானம் ஜீவா கூட்டணி போல் சசிகுமார் சூரி மிகப்பொருத்தம்

நம்மதான் குறு குருன்னு பாத்துகிட்டே இருக்கனும் .ஏதாவது ஒரு
ஆங்கில்லே அஜித் மாதிரி தெரிவோம் என்று சூரி  சொல்லும்போது    கைதட்டலில்  படத்தின் வெற்றி தெரிகிறது.

முதல் பாதி படத்தின் வேகம்  ஜிவ் என பறக்க  இரண்டாம் பாதி சற்று நொண்டி அடிக்கிறது

பஸ்சில் சைட் அடிப்பதற்காக இவ்வளவு களேபரம் நடக்குமா என்கிற லாஜிக்
சற்று இடிக்கறது .இப்படிப்பட்ட கதையில் கதாநாயகி  கொஞ்சம் தூக்கலாய் இருக்க வேண்டும்

மின்சாரகனவில் காஜல் கிளப்புவார்.

ஜாதிகளை காட்ட கமலின்  விருமாண்டி  உத்தி இந்த படத்திலும் காட்டப்படுகிறது
 கதை      சசிகுமார் , நண்பன் காதலை வளர்க்க பாடுபட ,நண்பனின் காதலி சசிகுமாரை காதலிக்க
அதனால் ஏற்படும் குழப்பம் அதை எப்படி அவர் சமாளித்தார்
கடைசியில் விக்ரமன் பட   பாணியில் சுபம்
முதல் பாதி திரைக்கதை நல்ல காமடி
என் அத்தை மகளை நான் எப்ப வேணும்னாலும் கண் அடிப்பேன் என்கிற வசனம் சசிகுமாரை பெண்கள் மனதில் நிற்க வைக்கும்
மொத்ததில் படம் கல கல என இருக்கிறது .
அப்புக்குட்டி பிரமாதப்படுத்துகிறார்  அந்த கூலிங் கிளாஸ் காட்சி பிரமாதம்