சனி, 29 செப்டம்பர், 2012

தாண்டவம் விமர்சனம்

தாண்டவம் விமர்சனம்


எல்லாரும் ஆஹா ஓஹோ என்கிறார்கள்.அதனால் நான் சொல்வது சரியாக இருக்குமா என்பதை காலம் சொல்லும்

பழிக்கு பழி  வாங்கும்    கதையை நகாசு வேலை செய்து கொடுத்து இருக்கிறார்கள்.

லண்டனில் ஒரு வெடிவிபத்தை காட்டி விட்டு
பிளாஷ் பேக் ஆகிறது கதை
விக்ரம் செல்லும் இடமெல்லாம்(அவருக்கான டாக்சி டிரைவர் சந்தானம்)  யாரவது இறக்க
கதை மெல்ல நகர
லண்டன் போலீஸ் தேட ஆரம்பிக்க
எமிஜாக்சன் விக்ரம் மேல் காதல் கொள்ள
அது தெரிந்த விக்ரம் தனது பழைய வாழ்க்கையை நினைக்க 
மெல்ல இன்னொரு பிளாஷ் பேக்
அனுஷ்கா விக்ரம் திருமணம் என காட்ட
திரும்ப கதை கண் தெரியாத விக்ரம் எப்படி பயிற்சி பெற்றார் என்பதை காட்ட

மெல்ல கதை சூடு பிடித்து ஏன் விக்ரம் கொலை செய்கிறார் என விளக்கம் கொடுக்க 
சிபிஐ ஆபிசர் விக்ரம் கண் தெரியாமல் ஏன் போனார்
அவர் மீது வெடிகுண்டு வழக்கு
அனுஷ்கா ஏன் இறந்தார்
துரோகம் என்ன நடக்கிறது என சொல்ல
கடைசியில்  விக்ரம் உண்மையானவர் என நீதிமன்றம் சொல்ல எமிஜாக்சன் விக்ரமை தொடர படம் முடிகிறது
ஒரு அழகான நாவல் கதை இது சினிமா ஆகும்போது சறுக்கியது போல் தெரிகிறது
யாரடி யாரடி  மோகினி பாடல் விக்ரமும் எமியும் பாடுவார் என பார்த்தால் எமி தனியாக பாட முதல் சொதப்பல்
டேனியல் கிஸ் எப்படி கண் தெரியாதவர்கள் வாழலாம் என்று சொன்னால் அதை வைத்து இவர்கள் எப்படி கொல்லலாம் என்று சொல்ல எங்கோ இடிக்கிறது
படத்தின் பாராட்டக்கூடிய அம்சம்
மிக இயல்பாய் நடிக்கும் விக்ரம் (அனேகமாக சங்கர் மிகசரியாய் பயன் படுத்துகிறார்)உங்களுக்கு மிக நீண்ட காலம் தமிழ் சினிமாவில் இடம் உண்டு

 அனுஷ்கா படத்தின் மிக பெரிய பலம் அவ்வளவு அழகு இந்த படம் ஓடினால் அதற்கு முழு  காரணம்  அனுஷ்கா

ஆனால் பாடல்கள் சூப்பராய் இருந்தாலும் எடுத்த விதம் சொதப்பல்

சந்தானம் இந்த படத்துக்கு சம்பந்தம் இல்லாமல் இருக்கிறார்
எது எப்படியோ யு டிவி பல்பு வாங்கி விட்டது என்று நினைக்கிறேன்




படத்தின் முன்னோட்டம்





   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக