உத்தம வில்லன் திரை பார்வை
சினிமா என்பது பலகோடி வர்த்தகம் புரளும் இடம்
ஒரு படம் எடுப்பது என்பது லேசுப் பட்ட காரியம் அல்ல
சுஜாதா சொல்வார் ஷூட்டிங் பார்க்க போகும்பொழுது அந்த ஆள் உயர டிபன் பாக்ஸ் பார்த்தால் நிச்சயம் படம் தயாரிக்கும் எண்ணம் ஓடி போய் விடும்
அவ்வளவு செலவு, நேர,ம் உழைப்பு ஆகிய கொண்ட திரைப்படத்தை
விமர்சனம் செய்துதான் ஆக வேண்டி உள்ளது
அவர்கள் உழைப்பை குறை சொல்ல முடியாது மிக பெரிய தேர் இழுக்கும் வேலை இது
ரொம்ம்ப ஜல்லி அடிக்க விருப்பம் இல்லை கதைக்கு வருவோம்
மனோரஞ்சன் என்கிற நடிகருக்கு ஏற்படும் ஒரு நோய் அவரை மரணத்தில்
கொண்டு போய் விடும் சூழ்நிலை
எனவே மரணம் ஏற்படுவதற்குள் தான் வாழ்க்கையில் செய்த தவறுகளை சரி செய்ய முயற்சி எடுக்கிறார்
முதல் தவறு தன் குருவை விட்டு விலகி இருக்கிறார் எனவே அவருடன் ஒரு படம் பண்ண நினைக்கிறார்
அடுத்து மனோரஞ்சன் இளமை காலத்தில் ஒரு பெண்ணுடன் காதல் செய்து கர்ப்பம் ஆக்கி விட அந்த பெண்ணின் மகளை தன் மகளாக அறிவிக்கிறார்
எல்லாம் சரி ஆனால் அவர் செய்த பெரிய தவறு அந்த கூத்து கலைஞன் பகுதியை மொக்கையாய் ஆக்கியது
அவருக்கான நல்ல திரைக்கதை யாரும் செய்யவில்லை எனஅவரே செய்த திரைக்கதை
தசாவதாரம் ,வெற்றி விழா என அற்புதமாக திரைக்கதை பண்ணிய கமலா என கேள்வி கேட்க வைக்கிறார்
மனோரஞ்சன் என்கிற நடிகர் பற்றிய பகுதிகள் பட்டையை கிளப்பினாலும்
அந்த கூத்து கலைஞன் பகுதி பொறுமையை சோதிக்கிறது
எந்த வித திருப்பமும் இல்லாத அந்த மொக்கை கதை எதற்கு என தெரியவில்லை
அந்த புலி ,எலி ,முதலை என cg செய்து இருக்கிறார்கள் ஆனால் படு மட்டமான CG அது
ஆனால் நடிகர்கள் அனைவரும் வெளுத்து வாங்குகிறார்கள்
ஒரு நடிகனின் இன்னொரு பக்கத்தை அருமையாய் பண்ணி இருக்கிறார்கள்
பாஸ்கர் அப்புறம் கமலின் டிரைவர் என உருக வைக்கிறார்கள்
தன் மரண செய்தியை மகனிடம் சொல்லும்பொழுது அந்த நடிகனை பார்க்க ரசிகர்கள் வந்து கூவ இது வேற எங்கள விடுங்க என சொல்லும்போது ஒரு நடிகரின் அவஸ்தை புரிகிறது
வசனம் பல இடங்களில் பலே
ஊர்வசி சொல்லும் இந்த தீனி என்னைய தின்னுருச்சு என்ற வசனம்
மறக்க முடியாத வசனம்
அதே போல் கமலுக்கு யாரும் இன்னும் நல்ல திரைக்கதை கொடுக்க வில்லை என அந்த மகன் கதா பாத்திரம் மூலம் சொல்ல வைக்கிறார்
நாசர் நடிப்பு அபாரம் இந்த படம் படபிடிப்பில் இருந்தபொழுது தான் அவரின் மகன் விபத்து நடந்து நிறைய மனஅழுத்ததில் இருந்தாலும் அதை பற்றிய எந்த உணர்வும் தெரியாமல் நடித்த அந்த நடிகனை என்ன சொல்ல
கமல் கொஞ்சம் தனது பாணியை புது இயக்குனர்கள் பக்கம் திருப்பினால் நன்றாக இருக்கும்
நிறைய இயக்குனர்கள் காத்து கிடக்கிறார்கள்
பாலச்சந்தர் அற்புதமான நடிகர் அப்படியே அவரின் உடல் அசைவுகள் நாகேஷை நினைவு படுத்துகிறது அந்த வசன உச்சரிப்பு கூட
கமல் சொல்வார் நாகேஷ் தான் பாலச்சந்தர் பாலச்சந்தர் தான் நாகேஷ் என்று உண்மைதான்
அதனால்தான் நாகேஷ் இருக்கும் வரை கமல் ரஜினி படங்களில் நடித்த ரகசியம் தெரிகிறது
நல்ல நடிகர்கள் நல்ல நடிப்பு ஆனால் திரைக்கதை ரசிகர்களை நெளிய வைக்கிறது
அந்த கூத்து கலைஞன் பகுதியை வெட்டி எடுத்தால் படம் அற்புதம்தான்
விருதுகள் நிச்சயம் உண்டுமீடியாதலையில்தூக்கிவைத்துகொண்டாடும்
சென்னை மதுரை inox களில் வசூல் வரலாம்
பி அண்ட் சி சென்டர் கஷ்டம்தான்
மதுரை அருகே உள்ள திருமங்கலத்தில் ஒருவர் படம் பார்த்து விட்டு என்னிடம் முழு கதையை விளக்கி சொல்லுங்கள் என்றார் அவர் கமலின் ரசிகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக