வழக்கம் போல் டவுன்லோட் லிங்க் செய்து skip add கொடுத்து
டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
மேலும் சமையல் புத்தகம் இந்த லிங்கில் உள்ளது
டவுன்லோட் செய்யாமல் நேரடியாக பார்க்கலாம்
இந்த தளத்தின் இறுதி வரிகளில் இது உள்ளது
லிங்க் கிளிக் செய்து பார்க்கவும்
வணக்கம் இன்று நான் தரப் போகும் புத்தகம்
சேகுவாரா என்கிற புரட்சியாளரின் வாழ்க்கை வரலாறு
உலகின் மிக சிறந்த சிந்தனையாளர்
இவரின் கதையை படித்து பாருங்கள்
சே என்ற அன்புடன் அழைக்கப்படும் எர்னாஸ்டோ சேகுவாரா. வீரசாகசவாதி என்றும் ஆயுதந்தாங்கியபுரட்சிக்காரர் என்றும் ஆயுதப் புரட்சியையே தொழிலாகக் கொண்டவர் என்றும் பொதுவாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறார்.ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் புரட்சிகர சக்திகளுடன் எந்தளவிற்கு ஈடுபாடு கொண்டு அவற்றிற்கு நேரடியாக தலைமை தாங்கி வழிகாட்டுவதில் அக்கறை காட்டினாரோ அந்தளவிற்கு மார்க்சிய சிந்தனையாளராகவும் இருந்தார். இந்தக் காலங்களில், புரட்சி, கெரில்லாயுத்தம்,சோசலின் கட்டுமானம். சோசலிச ஜனநாயகம் உட்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து நுணுக்கமாக ஆராய்கிறார். இந்தக் கண்ணோட்டத்தில், அவர் அப்போதைய சோவியத் யூனியன் உள்ளிட்ட கிழக்கு ஐரோப்பிய சோசலிஸ முகாம் நாடுகளை கடுமையாக விமர்சித்தார். கெரில்லா யுத்தம் சம்பந்தமாக வியட்னாமின் கெரில்லாப் படைத்தலைவர் கியாப். சீனத்தலைவர் மாவோ ஆகியோரின் நூல்களை படித்தசே. ஒரு நாட்டில் புரட்சிகர கெரில்லா யுத்தம் வெற்றிபெற வேண்டுமானால் கிராம்ப்புற விவசாயிகள், நகர்புற தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம், பொது வேலை நிறுத்தம் போன்ற போராட்டங்கள் வலுவாக நடைபெற வேண்டும் என்றும் இந்த நிலைமை தொழிலாளி விவசாயி கூட்டணியை ஏற்படுத்துவதுடன் கெரில்லா யுத்தத்திற்கு விரிவான, வலுவான தளம் அமையும் என்று கூறுகிறார்.
வெற்றிமாறன் இன்னொரு வெற்றி தயாரிப்பாளர் வாழ்த்துக்கள்
கதை ஒன்றும் புதிது அல்ல
ஆனால் ட்விஸ்ட் மலை
ஆம் எப்படி ஒரு முடிச்சு போட்டு
அதை அழகாய் விடுவிக்கிறார்கள்
அங்குதான் திரைக்கதை சும்மா டான்ஸ் ஆடுகிறது
ஒரு காதலன் காதலியை கூட்டி கொண்டு ஓடுகிறான்
அந்த பெண்ணுக்கு பதினெட்டு வயது இரவுக்குள் ஆகிவிடும் அதற்க்குள்
அவளை பிடிக்க வேண்டும் அரச கட்டளை அது
அழகாய் உட்கார்ந்து யோசித்த கதை
பட முன்னோட்டம்
இந்த மாதிரி எல்லா இயக்குனுரும் யோசித்தால்
தமிழ் சினிமா வீறு நடை போடும்
காதல் இளவரசன் கமல் என்று சொல்வோம்
அது போல் இளமை இளவரசன் என்றால் சித்தார்த்
சந்தேகம் இல்லை
போலீசில் மாட்டாமல் இருக்க வேண்டும் என்றால் செல் போன்
உபயோகிக்க வேண்டாம் என்று சொல்கிறார்கள் நிறைய கிரிமினல்கள் செல் போன் உபயோகிப்பது இல்லை
அடுத்து எல்லா பாத்திரங்களும் வித விதமாய் மொழி பேசுகிறார்கள்
தேர்ந்து எடுத்த நடிகர்கள் அதற்காக கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும்
ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம்
அப்புறம் மற்ற பத்திரிக்கை என்ன சொல்கிறது
"பொல்லாதவன்", "ஆடுகளம்" உள்ளிட்ட வெற்றி படைப்புகளை தந்த இயக்குநர் வெற்றிமாறனின் எழுத்து-படைப்பு வடிவமைப்பில், அவரது உதவியாளர் மணிமாறன் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம் தான் "உதயம் என்.ஹெச்-4".
பெங்களூரூக்கு படிக்கப்போகும் சென்னை மாணவர் சித்தார்த், உடன் படிக்கும் பெங்களூரூ பெரும்புள்ளி அவினாஷின் மகள் அஷ்ரிதா ஷெட்டியை காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் சென்னைக்கு அம்மணியை கல்யாணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் நண்பர்கள் உதவியுடன் கடத்துகிறார். விடுவாரா அவினாஷ்? தன் பண பலத்தையும், படை பலத்தையும் துஷ்பிரயோகம் செய்து சித்தார்த் - அஷ்ரிதா ஜோடியை துரத்துகிறார் பெங்களூரூ என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் மனோஜ் மேனன் எனும் கே.கே.மேனன். சட்டத்திற்கு அப்பால் சில விஷயங்களில் தனக்கு பெரும் உதவி செய்த அவினாஷூக்கு இவ்விஷயத்தில் சட்டத்திற்கு அப்பாற்பட்டு உதவ முன் வருகிறார். அப்புறம்? அப்புறமென்ன? அன்று இரவு 12 மணிக்கு மேல் 18வயது பூர்த்தியாகும் அஷ்ரிதா ஷெட்டியை, அதற்குள் சித்தகர்த் கையில் இருந்து மீட்டு விட வேண்டுமென்ற கட்டளைக்கு கட்டுப்பட்டு என்.ஹெச் 4 எனப்படும் பெங்களூரூ - சென்னை நேஷனல் ஹைவேஸில் அந்த ஜோடியை துரத்து துரத்தென்று துப்பாக்கியும் கையுமாக துரத்துகிறார். இறுதியில் வென்றது சித்தார்த்தா? கே.கே.மேனனின் துப்பாக்கியா...? என்பது வித்தியாசமும் விறுவிறுப்புமான க்ளைமாக்ஸில், திகில்-சஸ்பென்ஸ் சரிவிகிதத்தில் கலந்து கலக்கலாக சொல்லப்பட்டிருக்கிறது.
"பாய்ஸ் சித்தார்த் தனக்கு இதுநாள் வரை இருந்த சாக்லெட் பாய் இமேஜை தகர்த்தெறிய "உதயம் என்.ஹெச்-4" படத்தை சரியான சந்தர்ப்பமாக்கிக் கொண்டிருக்கிறார். புத்திசாலித்தனமாக பேலீஸின் மூவ்களை முன்கூட்டியே கணித்து அவர் செய்யும் மூவ்மெண்ட்டுகள் பிரமாதம். பிரமாண்டம்! ஆக்ஷ்ன் அதிரடிகளும் சூப்பர்ப்!!
ரித்திகாவாகவே வாழ்ந்திருக்கும் அறிமுக நாயகி அஷ்ரிதா ஷெட்டியின் நடை, உடை, பாவனைகள், நிச்சயித்து திருமணம் செய்தவர்களையும் காதலிக்க வைக்கும்! அம்மணி அத்தனை ஹோம்லி குல்கந்து! பெங்களூரூ பெரும்புள்ளி அவினாஷ், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் கே.கே.மேனன், சித்தார்த்தின் நண்பர்களாக வரும் அஜெய், கலை, கார்த்தி, தீபக் மற்றும் சித்தார்த்தின் உறவினர்களாக வரும் வக்கீல் பாத்திரத்தில் வரும் ஆடுகளம் நரேன், ரம்யா உள்ளிட்டோரும் உதயத்தின் உருப்படியான உத்தரங்கள்! அதாங்க தூக்கி நிறுத்தும் தூண்கள்!!
ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் "யாரோ இவன்..., "ஓரக்கண்ணாலே... உள்ளிட்ட பாடல்களும், வேல்ராஜின் ஒளிப்பதிவும், நடிப்பும்(ஒரு சில சீன்களில் மப்டி போலீஸ் கான்ஸ்டபிளாக மனிதர் கிடைத்த கேப்பில் புகுந்து விளையாடி இருக்கிறார் பலே... பலே!) சூப்பர்ப்!
ஹீரோவின் நண்பர், ஹீரோ சித்தார்த், ஹீரோயின் அஷ்ரிதா என ஆளாளுக்கு அவரவர் பாயிண்ட் ஆப் வியூவில் கதை சொல்வது ஓ.கே, சூப்பர்ப்! அதற்காக அஷ்ரிதா, சித்தார்த்தை துரத்தி அடித்துவிட்டு, தன்னை தூக்கி செல்லும் என்கவுன்டர் மேனனிடம் கதை சொல்வதும், அதற்கு காதலித்து திருமணம் செய்த அவர், அப்பா-அம்மா தான் முக்கியம் என அட்வைஸ் பண்ணுவதும் ரொம்ப ஓவர்! இதுமாதிரி ஒருசில குறைகள், க்ளைமாக்ஸ் நெருக்கும் போது ஹைவேஸில் நடைபெறும் இழுவையான ஆக்ஷ்ன் காட்சிகள் ஆகியவற்றை தவிர்த்துவிட்டுப்பார்த்தால், வெற்றிமாறனின் எழுத்திலும், தயாரிப்பிலும், மணிமாறனின் இயக்கத்திலும் "உதயம் என்.ஹெச்.4" அவர்களது விளம்பர வாசகங்களில் இடம் பெறும் டயலாக் மாதிரியே "செம ஸ்பீடு, ஹைஸ்பீடு" எனலாம்!
ஆகமொத்தத்தில், "உதயம்", தமிழ் சினிமாவுக்கு "புதிய உதயம்!"
இன்று கொஞ்சம் வளர்ந்தாலே தான் ஏதோ மைசூர் மகாராஜா போல் நடக்கிறார்கள்
ஆனால் இந்த நடிகர் எவ்வாறு தன் கடந்த காலத்தை பின்நோக்கி
பார்த்து மதிக்கிறார் என்பதை பார்க்கும் பொழுது
இவர் மட்டும்தான் சூப்பர் ஸ்டார் என்பதை சொல்லவும் வேண்டுமா
இது டவுன்லோட் லிங்க் அல்ல
தாங்கள் நேரடியாக படித்து மகிழுங்கள்
வழக்கம் போல் skip add கொடுத்து
தளத்திற்கு செல்லுங்கள்