வியாழன், 14 பிப்ரவரி, 2013

VIRTUAL KEY BOARD விர்சுவல் கீ போர்டு தொழில்நுட்பம் 1

வணக்கம் நாம் இப்பொழுது பார்க்க இருப்பது

VIRTUAL KEY BOARD விர்சுவல் கீ போர்டு தொழில்நுட்பம் 1







பொது இடங்களில்

நாம் கணினியை உபயோகிக்கும்போது

பாஸ்வோர்ட்களை அழுத்த

எவ்வாறு ஹாக் செய்ய முடியாதவாறு

பாஸ்வோர்ட்களை

எதன் மூலம் அழுத்தலாம் என பார்ப்போம்

எடுத்துக்காட்டாக நமது நிறுவனம் ஒன்றிற்க்கு

ஆன்லைனில் பணம் கட்ட வேண்டி உள்ளது

என்றால் OS

இல் உள்ள VIRTUAL KEY BOARDய் எவ்வாறு உபயோகிக்கலாம் என பார்ப்போம்


 


WINDOWS XP எனில் Start - All Programs- Accessories-Accessibility -On-Screen Keyboard


 START சென்று மேல் உள்ள முறையில் அழுத்தினால்

 osk

என ஒரு கீ போர்டு வரும்

அதன் மூலம் என்ட்டர் செய்தால்

 நீங்கள் அழுத்தும் எண்களை


எளிதில் யாரும் ஹாக் செய்ய இயலாது

WINDOWS7 எனில்


Windows 7 On-Screen Keyboard



START சென்று கிளிக் செய்தால்

search bar வரும்

அதன் மீது osk என டைப் செய்தால்

PROGRAMS 1

OSK
என வரும்

அதனை கிளிக் செய்தால்

virtual key board வரும்

அதில் எது அழுத்தினாலும்

ஹாக் செய்ய இயலாது



WINDOWS8 எனில்






 Settings--Control Panel--Ease of Access--Ease of Access Center.---Start On-Screen Keyboard.

OSK  என வரும் 




ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

கடல் விமர்சனம்

கடல் விமர்சனம் திரை விமர்சனம்


மணிரத்தினம் என்னதான் சொல்கிறார் என்பதற்காக படம் பார்த்தேன்


ஏற்கனவே அர்னால்ட் END OF DAYS படத்தில் நடித்த கதை

சாத்தானுக்கும் கடவுளுக்கு நடக்கும் போராட்டம்
ஆனால் அர்னால்ட் படம் சும்மா பட்டையை கிளப்பியது

அது ஓர் ACTION &THRILLER
அப்படி கூட படம் எடுத்து இருக்கலாம்


அர்ஜுனும் அரவிந்த்சாமியும் பாதிரியாராக படிக்க வருகிறார்கள்
அர்ஜுன் தகாத செயலில் இறங்க
அதை பார்த்துவிட்ட அரவிந்த்சாமி அர்ஜுனை பாதிரியார் படிப்பில் இருந்து வெளியே அனுப்புகிறார்
கிராமத்திற்கு பாதிரியாராக சேவை செய்ய வருகிறார்
இது ஒரு கதை

கவுதம் அம்மா இறந்து விட
கவுதம் ரௌடியாய் வளர்கிறார்
அவரை பார்த்த அரவிந்தசாமி
அவரை திருத்தி நல்லவனாக ஆக்க முயற்சி செய்கிறார்

இன்னொரு கதை

துளசி சிறு வயதில் ஏற்பட்ட
பாதிப்பால் மனமுதிர்ச்சி இல்லாமல் சிறு வயது பெண்ணாக ஆனால்
மருத்துவம் தெரிந்த பெண்ணாக இருக்கிறார் அவரை கவுதம் லவ்வுகிறார்

இன்னொரு கதை
பாதி படிப்பில் வெளியே போன அர்ஜுன் அரவிந்த்சாமியை பழி  வாங்க வருகிறார்  


அரவிந்த்சாமியை கெட்டவன் ஆக்கி
ஊரை விட்டு வெளியேற்றி
ஜெயிலுக்கு அனுப்புகிறார் அர்ஜுன்

கவுதம் அர்ஜுனிடம் அடியாள் ஆகிறார்

துளசி கொஞ்சம் கொஞ்சமாக கவுதம் மனதை மாற்றுகிறார்
துளசி அர்ஜுன் மகள் என்பது தெரிய
அர்ஜுன் மகளை கொள்ள பார்கிறார் (?)
கடைசியில் அரவிந்த்சாமி
அர்ஜுனை கொல்ல முயல
கவுதம் காப்பாற்றி கடவுள் தன்மை உணர வைக்கிறார்
கடைசி காட்சியில் துளசி கவுதமை பார்த்து சிரிக்க படம் முடிகிறது

அழகாய் பண்ணவேண்டிய கதை
சாத்தானுக்கும் கடவுள் தன்மைக்கும் நடை பெரும்  போராட்டம்
END OF DAYSஇல் சாத்தான் போராட்டம் ACTION காட்சிகளாக  கலக்கும்

நன்றாக சொதப்பி விட்டார்
உதவி இயக்குனர்கள் சொல்லி இருக்க வேண்டும்
 சூப்பர்சார் என்கிற ஜால்ராவை விட்டு விட்டு
திரைக்கதை வேகம் கூட்ட என்ன செய்ய வேண்டும் என முயற்சித்து  இருக்க வேண்டும்

END OF DAYSஇல் சாத்தனுக்கும் கடவுள் தன்மைக்கும் இடையே ஒரு இருபது நிமிச வசனம் சிந்திக்க வைக்கும்

கடவுள் யார் சாத்தான் யார் என ஒரு நீண்ட விளக்கம் இருக்கும் ஜெயமோகன் சார் கோட்டை விட்டு விட்டீர்களே
 

கவுதம் அழகான சின்ன பையன் ஒரு நீண்ட வலம் வர வாழ்த்துக்கள்

ஒளிப்பதிவு விருது கிடைக்கலாம்


நெஞ்சுக்குள்ளே பாடல் ரொம்ப நாளைக்கு  FMஇல் ஒலிக்கும்
வைரமுத்து கவிதைகள் அழகு

துளசி அக்கா அளவுக்கு இல்லை


மணிரத்தினம் சார் ரசிகர்கள் பார்க்கலாம்



வியாழன், 7 பிப்ரவரி, 2013

விஸ்வரூபம் பாடல் விமர்சனம்

விஸ்வரூபம் பாடல் விமர்சனம்

 


விஸ்வரூபம் அந்த முதல் பாடல் நிச்சயம் பல ஆண்டுகள் வாழும்
இனி நடக்கும் பள்ளி கல்லூரி விழாக்களில் இந்த பாடல் கண்டிப்பாக இடம்பெறும்


என்ன ஒரு நளினம்

என்ன ஒரு நாட்டியம்
 

கமல் நீங்கள் மட்டுமே ஒரு தன்னிகர் இல்லாத ஒரு நடிகன்
 

களவாடிய சிந்தை திரும்ப தா
என்னும்போது என்ன ஒரு அபிநயம்
அடடா கமல் நீர் நடிகன்
 (திருவிளையாடல் படத்தில் நீர் புலவன் என தருமி சொல்வரே அது போல் )

ஆயர் தம் மாயா நீ வா
என்னும்போது ஒரு கண் ஜாடை இருக்கிறதே
அது நடிப்பு
சிவாஜி அவர்கள் எதிரிகளை ஒரு பார்வை பார்ப்பார் அந்த பார்வை தெரிகிறது
சிவாஜி இருந்தால் சொல்லி இருப்பார்
 பாவி கொன்னுட்டடா

உன்னை கானாது நான் இங்கு நான் இல்லையே
 என்னும்போது விரல் வைத்து ஒரு ஜாடை ஆஹா

உன்னை காணாமல்
என்னும்போது கைகளில் ஒரு தட்டு தட்டுவார் அது நாட்டியம்
நாட்டியம் இடையில் ஒரு concept அற்புதம் கமல்

கோழி மைக்ரோ ஓவனில் வெந்து சப்தம் வர
எல்லோரும் ஓடி பக் பக் என கோரஸ் உடன்
கோழியை வெளியேஎடுத்து
அங்கே வசனம் கிளப்பி இருப்பார்

பாப்பாத்தி அம்மா நீ சாப்டு சொல்லு உப்பு காரம் போதுமான்னு

அது எப்படி குருஜி பிடிக்காத விசயத்தை இவ்வளவு ரசிச்சுசமைக்றேல்
அதஏன் கேக்றேல்
என்ஓய்ப்புக்கு சிக்கன் பிடிக்கும்
எனக்கு அவள பிடிக்கும்
மணவாட்டியே மணாளனின் பாக்கியம்
அதற்கு பிறகு ஆடும் நடனம் அற்புதம் கமல்

ஆணாக இருந்தாலும் நீர் அழகன்

பெண்ணாக இருந்தாலும் நீர் அழகி

தசவாதாரம் நாராயணன் புகழ் பாடியது
விஸ்வரூபம் கிருஷ்ணா மற்றும் அல்லா புகழ் பாடும்
இந்த ஒரு பாடல் போதும்  யு ஆர் கிரேட்



சனி, 2 பிப்ரவரி, 2013

கடல் மற்றும் டேவிட் விமர்சனம் மாதிரி

கடல் மற்றும் டேவிட் விமர்சனம் மாதிரி


ரெண்டு படத்தையும் பார்க்கலாம்னு இருந்தேன்
ஆனா வர முடிவுகளா பாத்தா ஒழுங்கு மரியாதையா
அந்த படங்களை பாக்காம இருக்கலாம்
 Kadal New Poster

இல்ல சார் நான் பாக்கனும்னு சொன்னா அது  உங்க இஷ்டம்

மணிரத்னம் சார் படம்னா எனக்கும் உசுருதான் என்ன செய்ய


David

அடுத்து ஜீவா நல்ல நடிகர் ஆனா அவர் நேரமா நம்ம நேரமான்னு தெரியலஒரே மொக்கை படமா வருது

அப்புறம் நம்ம விக்ரம் சார் சூப்பர் நடிகர் அவருக்கும் டைம் செட் ஆகல
நம்ம கமல் சார் படம் வரலைன்னுதான் இது எல்லாம் நடக்குது போல

அடுத்து நம்ம சூப்பர் ஸ்டார் படம் மட்டும்தான் ஓடும் போல பாப்போம்