மணிரத்தினம் என்னதான் சொல்கிறார் என்பதற்காக படம் பார்த்தேன்
ஏற்கனவே அர்னால்ட் END OF DAYS படத்தில் நடித்த கதை
சாத்தானுக்கும் கடவுளுக்கு நடக்கும் போராட்டம்
ஆனால் அர்னால்ட் படம் சும்மா பட்டையை கிளப்பியது
அது ஓர் ACTION &THRILLER
அப்படி கூட படம் எடுத்து இருக்கலாம்
அர்ஜுனும் அரவிந்த்சாமியும் பாதிரியாராக படிக்க வருகிறார்கள்
அர்ஜுன் தகாத செயலில் இறங்க
அதை பார்த்துவிட்ட அரவிந்த்சாமி அர்ஜுனை பாதிரியார் படிப்பில் இருந்து வெளியே அனுப்புகிறார்
கிராமத்திற்கு பாதிரியாராக சேவை செய்ய வருகிறார்
இது ஒரு கதை
கவுதம் அம்மா இறந்து விட
கவுதம் ரௌடியாய் வளர்கிறார்
அவரை பார்த்த அரவிந்தசாமி
அவரை திருத்தி நல்லவனாக ஆக்க முயற்சி செய்கிறார்
இன்னொரு கதை
துளசி சிறு வயதில் ஏற்பட்ட
பாதிப்பால் மனமுதிர்ச்சி இல்லாமல் சிறு வயது பெண்ணாக ஆனால்
மருத்துவம் தெரிந்த பெண்ணாக இருக்கிறார் அவரை கவுதம் லவ்வுகிறார்
இன்னொரு கதை
பாதி படிப்பில் வெளியே போன அர்ஜுன் அரவிந்த்சாமியை பழி வாங்க வருகிறார்
அரவிந்த்சாமியை கெட்டவன் ஆக்கி
ஊரை விட்டு வெளியேற்றி
ஜெயிலுக்கு அனுப்புகிறார் அர்ஜுன்
கவுதம் அர்ஜுனிடம் அடியாள் ஆகிறார்
துளசி கொஞ்சம் கொஞ்சமாக கவுதம் மனதை மாற்றுகிறார்
துளசி அர்ஜுன் மகள் என்பது தெரிய
அர்ஜுன் மகளை கொள்ள பார்கிறார் (?)
கடைசியில் அரவிந்த்சாமி
அர்ஜுனை கொல்ல முயல
கவுதம் காப்பாற்றி கடவுள் தன்மை உணர வைக்கிறார்
கடைசி காட்சியில் துளசி கவுதமை பார்த்து சிரிக்க படம் முடிகிறது
அழகாய் பண்ணவேண்டிய கதை
சாத்தானுக்கும் கடவுள் தன்மைக்கும் நடை பெரும் போராட்டம்
END OF DAYSஇல் சாத்தான் போராட்டம் ACTION காட்சிகளாக கலக்கும்
நன்றாக சொதப்பி விட்டார்
உதவி இயக்குனர்கள் சொல்லி இருக்க வேண்டும்
சூப்பர்சார் என்கிற ஜால்ராவை விட்டு விட்டு
திரைக்கதை வேகம் கூட்ட என்ன செய்ய வேண்டும் என முயற்சித்து இருக்க வேண்டும்
END OF DAYSஇல் சாத்தனுக்கும் கடவுள் தன்மைக்கும் இடையே ஒரு இருபது நிமிச வசனம் சிந்திக்க வைக்கும்
கடவுள் யார் சாத்தான் யார் என ஒரு நீண்ட விளக்கம் இருக்கும் ஜெயமோகன் சார் கோட்டை விட்டு விட்டீர்களே
கவுதம் அழகான சின்ன பையன் ஒரு நீண்ட வலம் வர வாழ்த்துக்கள்
ஒளிப்பதிவு விருது கிடைக்கலாம்
நெஞ்சுக்குள்ளே பாடல் ரொம்ப நாளைக்கு FMஇல் ஒலிக்கும்
வைரமுத்து கவிதைகள் அழகு
துளசி அக்கா அளவுக்கு இல்லை
மணிரத்தினம் சார் ரசிகர்கள் பார்க்கலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக