விஸ்வரூபம் அந்த முதல் பாடல் நிச்சயம் பல ஆண்டுகள் வாழும்
இனி நடக்கும் பள்ளி கல்லூரி விழாக்களில் இந்த பாடல் கண்டிப்பாக இடம்பெறும்
என்ன ஒரு நளினம்
என்ன ஒரு நாட்டியம்
கமல் நீங்கள் மட்டுமே ஒரு தன்னிகர் இல்லாத ஒரு நடிகன்
களவாடிய சிந்தை திரும்ப தா
என்னும்போது என்ன ஒரு அபிநயம்
அடடா கமல் நீர் நடிகன்
(திருவிளையாடல் படத்தில் நீர் புலவன் என தருமி சொல்வரே அது போல் )
ஆயர் தம் மாயா நீ வா
என்னும்போது ஒரு கண் ஜாடை இருக்கிறதே
அது நடிப்பு
சிவாஜி அவர்கள் எதிரிகளை ஒரு பார்வை பார்ப்பார் அந்த பார்வை தெரிகிறது
சிவாஜி இருந்தால் சொல்லி இருப்பார்
பாவி கொன்னுட்டடா
உன்னை கானாது நான் இங்கு நான் இல்லையே
என்னும்போது விரல் வைத்து ஒரு ஜாடை ஆஹா
உன்னை காணாமல்
என்னும்போது கைகளில் ஒரு தட்டு தட்டுவார் அது நாட்டியம்
நாட்டியம் இடையில் ஒரு concept அற்புதம் கமல்
கோழி மைக்ரோ ஓவனில் வெந்து சப்தம் வர
எல்லோரும் ஓடி பக் பக் என கோரஸ் உடன்
கோழியை வெளியேஎடுத்து
அங்கே வசனம் கிளப்பி இருப்பார்
பாப்பாத்தி அம்மா நீ சாப்டு சொல்லு உப்பு காரம் போதுமான்னு
அது எப்படி குருஜி பிடிக்காத விசயத்தை இவ்வளவு ரசிச்சுசமைக்றேல்
அதஏன் கேக்றேல்
என்ஓய்ப்புக்கு சிக்கன் பிடிக்கும்
எனக்கு அவள பிடிக்கும்
மணவாட்டியே மணாளனின் பாக்கியம்
அதற்கு பிறகு ஆடும் நடனம் அற்புதம் கமல்
ஆணாக இருந்தாலும் நீர் அழகன்
பெண்ணாக இருந்தாலும் நீர் அழகி
தசவாதாரம் நாராயணன் புகழ் பாடியது
விஸ்வரூபம் கிருஷ்ணா மற்றும் அல்லா புகழ் பாடும்
இந்த ஒரு பாடல் போதும் யு ஆர் கிரேட்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக