சூது கவ்வும் மற்றும் நாகராஜா சோழன் ஒரு பார்வை
இது விமர்சனம் அல்ல காரணம் பார்வையாளர்களை விட விமர்சகர்கள் இணையத்தில் இருப்பதால்
சூது கவ்வும்
படத்தின் முதல் பத்து நிமிடங்களில் அனைத்து கதா பாத்திரங்களையும் காட்டி விடுவது தனி சிறப்பு
முதல் இருபது நிமிடம் ஜல்லி அடித்தாலும் அதற்கு பின்பு அருமையாய் நகர்கிறது
ஆனால் விஜய் சேதுபதி மடியில் மட்டும் அமரும் ஹீரோயின் கொஞ்சம் அதிகமாய் தெரிகிறது
அழகான காமெடி ரசிக்க வைக்கும் காட்சிகள்
பணத்திற்கு பதில் நியூஸ் பேப்பர்
ஹெலிகாப்டர் மூலம் பணம் எடுப்பது
இன்ஸ்பெக்டர் பிரம்மாவின் பரிதாபமான முடிவு
கொஞ்சம் லாஜிக் மீறல் இருந்தாலும் ரசிக்கலாம்
(அது என்ன லாஜிக் மீறல் என்கிறீர்களா பணம் வைக்கும் பைக்குள் சின்ன சிப்பை வைத்து விட்டால் அது வரலாறு சொல்லும் )
மகனே கம்ப்யூட்டர்ல ஒக்காந்து நீ ஈஸியா சொல்வ
படம் எடுத்து பாருடி
என யாரோ சொல்வது கேட்பதால் நிறுத்தி விட்டு
படம் பற்றி
தமிழ் சினிமா அழகாய் முன்னேறுகிறது
ஒரு கடத்தல் அதில் சிக்கும் மனிதர்கள் அவர்களுக்குள் நடக்கும்
சின்ன சின்ன தவறுகள்
புதிய கதை பார்க்கலாம்
அப்புறம் நாகராஜ சோழன்
எல்லாரையும் சகட்டுமேனிக்கு வார சத்யராஜ் அசரவே இல்லை
விஜயகாந்த் மற்றும் அனைத்து அரசியல் வாதிககளையும் நன்றாக வாருகிறார்
நல்ல கான்செப்ட் ஆனால் திரைக்கதை கொஞ்சம் மெதுவாக நகருவதுதான் குறை
இருந்தாலும் அரசியல் எவ்வளவு பெரிய சாக்கடை என்பதை தைரியமாக சொல்கிறார்கள்
அரசியல் விரும்பிகள் பார்க்கலாம்