புதன், 30 ஜூலை, 2014

Dawn of the planet of the Apes தமிழில் குரங்கு ராஜா திரை பார்வை



Dawn of the planet of the Apes
தமிழில்
குரங்கு ராஜா 

 



ரொம்ப நாளைக்கு பிறகு வந்து இருக்கும் ஒரு செம படம்
கதை சீசர் என்கிற குரங்கு  தலைவன் குரங்கு கூட்டத்தை அற்புதமாக வழி  நடத்துகிறான்

அவனுக்கு தளபதி கோபா

மனிதர்கள் அனைவரும் அழிந்து விட்டார்கள் என நிம்மதியாக இருக்கும் நேரத்தில் ஒரு மனிதன் ஏப்ஸ்(குரங்கு இனப் பெயர் ) பகுதிக்கு வருகிறான்

அதை பார்த்த ஏப்ஸ் அவனை விரட்ட நினைக்க கூட வரும் சில மனிதர்கள் சேர்ந்து சின்ன சண்டை போட ஒரு ஏப்ஸ் இறக்கிறது

மனிதர்களை ஏப்ஸ் தலைவன் சீசர் சந்திக்கிறான் 
மனிதர்களுக்கு மின்சாரம் தேவை பட அந்த மின்சாரம் உற்பத்தி செய்ய இருக்கும் அணைக்கட்டு ஏப்ஸ் பகுதியில் இருக்கிறது
எனவே மின்சாரம் தயார் செய்தால் விளக்கு கிடைக்கும் என ஏப்ஸ் தலைவன் சீசரிடம் சொல்ல
சீசர் தன் இன மக்களுக்கு வெளிச்சம் கிடைக்கும் என்பதால் மனிதர்களை நம்புகிறான்
துப்பாக்கி இல்லாமல் வரலாம் என்ற நிபந்தனையோடு 

 


அது தளபதி கோபாவுக்கு பிடிக்கவில்லை

சீசர் கோபாவை மனிதர் இருக்கும் பகுதிக்கு சென்று வேவு பார்க்க அனுப்புகிறார்

மனிதர்கள் தமது வேலை ஆரம்பித்து அணைக்கட்டு சரி செய்யப்படும் நேரத்தில் மனிதர்கள் வைத்து இருக்கும் துப்பாக்கி பார்த்த சீசர் அவர்களை வெளி ஏற சொல்கிறார்

பின்பு ஏப்ஸ் இன மக்களுக்கு மருந்து தருவதால்
அவர்களை திரும்ப வேலை செய்ய அனுமதிக்கிறார்

மனிதர்களை வேவு பார்க்க சென்ற கோபா மனிதர்களை கொல்ல துவங்குகிறார்
மனிதர்கள் குரங்குகளை கொள்ள துவங்க
இதற்கு காரணமான கோபாவை சீசர்  கொன்று விட்டு
போருக்கு தயார் ஆகிறார்
இந்த  கதை யின் அற்புதம் ஆளுமை பற்றிய விசயம்தான்
ஒரு தலைவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்று அழகாய் கற்று தருகிறார்கள்
தலைவன் என்பவன் நம்ப வேண்டும்
சீசர் மனிதர்களையும் நம்புகிறார் கோபாவையும் நம்புகிறார்
மனிதர்கள் மிக சரியாய் நடக்க
கோபா தவறுகிறான்
அதே போல் முடிவு எடுப்பது
நல்லது நடக்க வேண்டும் என்றால் எதிரியிடம் கூட விட்டு கொடு
அதே எதிரி தவறு செய்தால் தண்டனை கொடு
அவர்கள் மீண்டும் உதவி செய்ய மன்னிக்கிறார்
தலைவன் என்பவன் மன்னிக்க வேண்டும்
அதே போல் தவறு நடந்தால் அதை பொறுப்பு ஏற்று மரணமே வந்தாலும் தலைமை ஏற்க வேண்டும்

 




 



 


கோச்சடையான்  தொழில்நுட்ப ரீதியாய் எவ்வளவு மட்டம் என்பது 
இந்த காட்சி பார்த்தாலே புரியும் 

படத்தின்  அற்புதம் மோசன் காப்சர்  வாவ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக