ஞாயிறு, 13 ஜூலை, 2014

அரிமா நம்பி பார்வை



அரிமா நம்பி பார்வை 
 

கொஞ்ச நாளாய் எந்த படமும் பார்க்கவில்லை இன்று கொஞ்சம் மனம் அழுத்த ஒரு படம் பார்க்கலாம் என்று எண்ணி விஷால் மன்னிக்க
டோரென்ட் அண்ணன் புண்ணியத்தில் அரிமா நம்பி பார்த்தேன்

ராஜேஷ்குமார் பாக்கெட் நாவல் போல் இருந்தது நல்ல விறுவிறுப்பு
சின்னகதை ஒரு நாள் காதலித்த காதலி கடத்தப்பட  அவளை மீட்பது கதை 
 
ஆனால் திரைக்கதை செம ஸ்பீட்
முதல் இரண்டு ரீல் மொக்கை என நினைப்பதற்குள் படம் டாப் கியர் சென்று விடுகிறது
முதல் காட்சி நல்ல ரொமான்ஸ் காதலியை மடக்குவது எப்படி கொஞ்சம் சுவாரஸ்யம் 

 

ஒரு மந்திரி தன் கள்ளக்காதலை மறைக்க தன் காதலியை கொலை செய்ய
அது வீடியோவாக பதிய அதை பதிந்த பார்த்த அனைவரயும் கொலை செய்து தப்பிக்க நினைக்கும் மந்திரியை எவ்வாறு மக்கள் முன்பு நிறுத்துகின்றனர் என்பதுதான் திரைக்கதை
விக்ரம் பிரபு பட படவென இருக்கிறார் நல்ல வேகம்
கதாநாயகி வந்து போகிறார்
பாஸ்கர் நேர்மையான காவல் அதிகாரியாக அற்புதம் மிக சிறந்த குணச்சித்திர நடிகர்
சின்ன சின்ன  ட்விஸ்ட் அசத்துகிறது பார்க்கலாம்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக