சனி, 21 செப்டம்பர், 2013

புரட்டாசி சனிக்கிழமையும் நானும்

புரட்டாசி சனிக்கிழமையும் நானும்

பெருமாளின் தீவிர பக்தன் நான்
சனிக்கிழமை தோரும் சைவம் சாப்பிட்டு வருகிறேன்
(நண்பர்கள் யாரவது திருமணம் கறி  சாப்பாடு போட்டால் அன்று மட்டும்
விலக்கு )
வாரம் தோரும் தவறாது பெருமாள் கோவில் செல்வேன்
இலவச தரிசனம் மட்டும்
(கடவுள் நமக்குதான் கொடுக்கணும் நாம கடவுளுக்க கொடுக்க கூடாது  என்கிற சூப்பர் ஸ்டார் பொல்லாதவன் படத்தில் சொன்னது )
நான் மதுரை என்பதால் இந்த வாரம் கூடல் அழகர் பெருமாளை பார்த்தேன்



இன்று புரட்டாசி சனிகிழமை தலைவரை (பெருமாளை) பார்த்து வரலாம் என்று சென்றேன்
கொஞ்சம் வரிசையில் வாருங்கள் என்று சொன்னார்கள் சரி வரிசை எங்கே என்று பார்த்தால் கோவிலை சுற்றி ஒரு கிலோமீட்டர் தள்ளி இருக்க பெருமாளை நினைத்து வரிசையில் நின்றேன்

வழியில் மத சார்பின்றி எல்லா மதமும்வியாபாரம்செய்தது
பாய் கடலை வண்டி
ரோஸ் அக்கா பூக்கடை
 


ஒரு வழியாய் உள்ளே நுழைய
தாயார் சந்நிதியில் ஒரு வரிசை போட்டு இருந்தார்கள்

N S Sகுழுஒழுங்காய்வா
வரிசையாய்வா
எனமரியாதையோடு
பக்தர்களைவழி நடத்த

ஆண்டாளையும் நவகிரகங்களையும் வழிபட்டு
பெருமாளையும் தரிசிக்கலாம்  என
வர பெருமாளை பார்க்க
தனிவழி ரூபாய்  5
சிறப்பு வழி ரூபாய் 20
அப்புறம்
இலவசமாய் பார்க்க ஒரு வழி இருக்க அதுவும் ஒரு கிலோமீட்டர் சுற்று இருக்க

பெருமாளை மனதிற்குள் சேவித்து விட்டு வர வழியில் ஒரு சாமியானா பந்தல் போட்டு இருக்க
ஏதோ இலவசம் கொடுக்கிறார்கள்
என்று பார்க்க வரிசை இல்லாமல் இருக்க சின்ன சந்தேகம் வந்தது

அது பிரசாத ஸ்டால் இடம் மாற்றி இருந்தது

ஒரு வழியாய் பெருமாளை பார்த்து வர

 


ஒரு 7 ௦ வயது மூதாட்டி எல்லா வரிசைகளிலும்  ஒழுங்காய் சென்று தரிசனம்
செய்து ஓம் நமோ நாராயணா என்று சொல்லி  செல்ல

இறைவன் இருக்கிறான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக