சனி, 17 ஆகஸ்ட், 2013

பிரதோஷ மகிமை விளக்கம் மற்றும் சுகிசிவம் வழங்கிய உரை mp 3 வடிவில்

பிரதோஷ மகிமை 

 


நண்பர் ஒருவர்
பிரதோஷம் அன்று பூஜை வைப்பார்
அவரிடம் பிரதோஷம் பற்றி தெரியுமா
என்று கேட்டேன்

கொஞ்சம் தெரியும் என்றார்
நான் ஒன்றும் ஆன்மீக பழம் அல்ல
ஆனால் சில புத்தகம் படித்த பொழுது படித்தது
அவருக்கு சொன்னது
தெரியாதவர்கள் படிக்கலாம்



அமுதம் கடைந்த பொழுது முதலில்
விஷம் வந்தது
அந்த விசத்தை சிவபெருமானிடம் கொடுக்க
அதை விழுங்கி விட்டார்

பார்வதி பார்க்க சிவனை காப்பாற்ற சிவனின்  தொண்டையை அடைத்து விட்டார்
அதனால் பாதிக்கப்பட்டு மயக்கம் அடைந்து பின்பு எழுந்தார்
எழுந்து ஆனந்த நடனம் ஆடினார்

 

இந்த காலம் பிரதோஷ காலம்
அப்பொழுது அனைத்து தேவர்களும் சிவன் கோவில் முன்பு வருவார்கள் என்பது ஐதீகம்
இதன் தத்துவம்
மனிதன் சோர்வு அடையலாம் 
ஆனால் மீண்டும் எழ  வேண்டும் 
 


இந்த நேரத்தில் சொல்ல வேண்டிய மந்திரம்

ஓம் சிவாய  நமஹ
ஓம் சிவலிங்காய நமஹ

ஓம் பவாய நமஹ
ஓம்  பவலிங்காய நமஹ

ஓம் ஆத்மாய  நமஹ
 ஓம் ஆத்ம லிங்காய நமஹ

ஓம் சர்வாய நமஹ
ஓம் சர்வலிங்காய நமஹ
 

 

சுகி சிவம் அவர்களின் உரை நேரடியாக கேட்க இங்கு அழுத்தவும்

குட்டி பிளேயர் இருக்கும் அழுத்தி கேட்கவும் 
இந்த உரையை
டவுன்லோட் செய்ய இங்கு அழுத்தவும்







பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்.

ஸித்தயோகீ மஹர்ஷிச்ச ஸித்தார்த்தஹ் ஸித்த ஸாதக|
பிக்ஷூச்ச பிக்ஷூரூபச்ச விபனோம்ருது ரவ்யய||
இன்னும் தெளிவாய் படிக்க 




தேவர்கள் ஆலகால விஷத்திற்கு அஞ்சி, கைலாய மலையை இங்கும் அங்கும் ஓடி, இறைவனைச் சரணடைந்து நற்கதியைப் பெற்ற வழிமுறைதான் - ஸோம ஸூக்த பிரதக்ஷிணம் என்று கூறப்படுகின்றது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடம் - ஸோம ஸூக்த பிரதக்ஷிண முறையைக் காட்டுகின்றது.
நிலையாக இருக்கும் சிவனை, நாம் வழிபடும் வலம் வரும் முறை, செயல் சக்தியாகச் செய்யும் போது, சக்தி தேவிக்குரிய திரிசூல வடிவம் வருவதைக் காணலாம். சிவனையும், சக்தியையும் ஒருங்கே வழிபட்ட பலன் கிடைக்கக் கூடிய அற்புதமான வழிபாட்டு முறை ஸோம ஸூக்த பிரதக்ஷிணம்.
பிரதோஷ வேளையில் ஸோம ஸூக்த பிரதக்ஷிணம் அளவற்ற பலனைத் தரும். ஸத்புத்ர சந்தானம் எனும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்வு வளமாகும்.
ஸோமஸூக்த பிரதக்ஷிணம் என்பதை மிக எளிய வகையில் செய்ய ஒரு உபாயம் உண்டு.
கோ
கோ
மேற்கண்ட குறியீடுகளை ஞாபகம் கொண்டு எளிதில் வலம் வரலாம்.
ந - நந்தி
ச - சண்டிகேஸ்வரர்
கோ - கோமுகி எனும் ஆலயக் கருவறையிலிருந்து அபிஷேகத்
தீர்த்தம் விழும் இடம்.

பிரதோஷ காலத்தில் நந்தியை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் :
1. செல்வங்கள் பெருகும்.
2. கடன் தொல்லைகள் நீங்கும்,
3. நோய்கள் அகலும்
4. எதிரிகளால் ஏற்படும் அனைத்து தீய செயல்களும் செயலற்றுப் போகும்.
5. குழந்தைகளின் கல்வி மேம்படும்.
6. வேண்டிய வரம் கிட்டும்.
7. குழந்தைகள் எவ்விதமான கஷ்டமும் இன்றி உணவு எடுத்துக்கொள்ளும்.
8. நீடித்த ஆயுள் கிட்டும்.
9. சிவ சக்தியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.

ஒவ்வொரு நாளும் மாலை 4.30 - 6.00 நேரம் நித்திய பிரதோஷம் எனவும்,
ஒவ்வொரு அமாவசைக்கு முன்னரும், பெளர்ணமிக்கு முன்னரும் வரும் திரயோதசி திதி பட்ச பிரதோஷம் எனவும்,
சனிக் கிழமையில், திரயோதசி சேர்ந்தால் - அது சனி மஹா பிரதோஷம் எனவும்,
திங்கட் கிழமையில், திரயோதசி சேர்ந்தால் - அது ஸோம பிரதோஷம் எனவும் போற்றப்பட்டு, சிறப்பான வகையில் வழிபாடு செய்யப்படும்.

நந்தியம்பெருமானுக்கேயுரிய சில சிறப்பு தலங்கள் :
நந்தி கொம்பு ஒடிந்த ஸ்தலம் - திருவெண்பாக்கம்
ஈசனோடு நந்தி இணைந்த உருவ ஸ்தலம் - திருக்கூடலையாத்தூர், பவானி
நந்தி விலகிய ஸ்தலம் - திருப்புங்கூர், பட்டீஸ்வரம், திருப்பூவனம், திருப்பூந்துருத்தி
நந்தி நின்ற ஸ்தலம் - திருமால்பேரு
நந்தி திருமண ஸ்தலம் - திருமழபாடி
நந்தி பிரதோஷ ஸ்தலம் - திருஅரிசிலி
நந்தி சிவனைப் பார்க்க இல்லாமல், திரும்பியவாறு கோபுரம் நோக்கிய ஸ்தலம் - திருவோத்தூர், திருமுல்லைவாயில், பெண்ணாடம் மற்றும் சில தலங்கள்.
பிரதோஷ காலத்தில், பூஜைகள் நடைபெறும் சமயத்தில், பன்னிரு திருமுறைகளில் உள்ள, அமிர்தம் கடைதல் தொடர்பான, பதிகங்களை படித்தலும் கேட்டலும் பற்பல பலன்களை வாரி வழங்கக்கூடியது. குறிப்பாக, சிவபுராணத்தினை (நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க ..) வாசிப்பதும், கேட்பதும் நற்பலன்களை அளிக்கக் கூடியது.
பிரதோஷ காலத்தில் பாராயணம் செய்ய பிரதோஷ ஸ்தோத்திரம் மற்றும் பிரதோஷ அஷ்டகம் எனும் மிக அரிய - மிகப் பழமையான நூலாகிய ஸ்காந்த புராணத்திலிருந்து எடுக்கப்பட்ட - சிறப்பு வாய்ந்த இரு ஸ்லோகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
கீழ்க்கண்ட ஸ்லோகங்கள், பிரதோஷ காலத்தில் படிக்க அல்லது கேட்கப்பெறுவது, மேலே கூறியுள்ள அனைத்து பலன்களையும் வாரி வழங்க வல்லது.
பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானை வணங்கி நலங்களை நாளும் பெறுவோம் !
******
ஸ்ரீ பிரதோஷ ஸ்தோத்திரம்
ஸ்ரீ கணேசாய நம:
ஜய தேவ ஜகன்னாத ஜய சங்கர சாச்வத |
ஜய ஸர்வ ஸுராத்யக்ஷ ஜய ஸர்வ ஸுரார்ச்சித ||
ஜய ஸர்வ குணாதீத ஜய ஸர்வ வரப்ரத |
ஜய நித்ய நிராதார ஜய விச்வம்பராக்ய ||
ஜய விச்வ ஏக வந்த்யேச ஜய நாகேந்த்ர பூஷண |
ஜய கெளரிபதே சம்போ ஜய சந்த்ர அர்த்த சேகர ||
ஜய கோட்யர்க ஸங்காச ஜய ஆனந்த குணாச்ரய |
ஜய பத்ர விரூபாக்ஷ ஜயாசிந்த்ய நிரஞ்சன ||
ஜய நாத க்ருபாஸிந்தோ ஜய பக்தார்த்தி பஞ்சன |
ஜய துஸ்தர ஸம்ஸார ஸாகர உத்தாரண ப்ரபோ ||
ப்ரஸீத மே மஹாதேவ ஸம்ஸாரார்தஸ்ய ஸ்வித்யத: |
ஸர்வ பாப க்ஷயம் க்ருத்வா ரக்ஷ மாம் பரமேஸ்வர ||
மஹா தாரித்ர்யமக்நஸ்ய மஹாபாப ஹதஸ்ய ச |
மஹா சோக நிவிஷ்டஸ்ய மஹா ரோகாதுரஸ்ய ச ||
ருணபாரபரிதஸ்ய தஹ்ய மாநஸ்ய கர்மபி : |
க்ரஹை: ப்ரபீஜமாநஸ்ய ப்ரஸீத மம சங்கர ||
தரித்ர: ப்ரார்த்தயேத்தவம் ப்ரதோஷே கிரிஜாபதிம் |
அர்த்தாடோ வாத ராஜா வா ப்ரார்த்தயேத்தேவம் ஈச்வரம் ||
தீர்க்கமாயு: ஸதாரோக்யம் கோசவ்ருத்திர் பலோன்னதி : |
மமாஸ்து நித்யம் ஆனந்த: ப்ரஸாதாத்தவ சங்கரம் ||
சத்ரவ: ஸம்க்ஷயம் யாந்து ப்ரஸீதந்து மம ப்ரஜாபத : |
துர்பிக்ஷமரி ஸந்தாபா: சமம் யாந்து மஹீதலே ||
ஸர்வ ஸஸ்ய ஸம்ருத்திஸ்ச பூயாத்ஸுகமயா திச: |
ஏவம் ஆராதயேத்தவம் பூஜாந்தே கிரிஜாபதிம் ||
ப்ராஹ்மணான் போஜயேத் பஸ்சாத் தக்ஷிணாபிஸ்ச பூஜயேத் |
ஸர்வ பாப க்ஷயகரி ஸர்வ ரோக நிவாரணி ||
சிவபூஜா மயாக்யாதா ஸர்வாபீஷ்ட பலப்ரதா ||
********************************************
ஸ்ரீ பிரதோஷ ஸ்தோத்ர அஷ்டகம்
ஸ்ரீ கணேசாய நம: |
ஸத்யம் ப்3ரவீமி பரலோக ஹிதம் ப்3ரவீமி
ஸாரம் ப்3ரவீம் உபநிஷத் த்4ருத3யம் ப்ரவீமி |
ஸம்ஸார முல்ப3ணம ஸாரமவாப்1ய ஜந்தோ:
ஸாரோSயம் ஈச்வர பதாம் ப்ருஹஸ்ய ஸேவா || 1 ||
யே நார்ச்சயந்தி கிரீசம் ஸமயே ப்ரதோஷே
யே நார்ச்சிதம் சிவமபி1 ப்ரணமந்தி சா1ன்யே |
ஏதத்கதா2ம் ச்ருதிபுடைர்ந பிப3ந்தி மூடா4ஸ்தே1
ஜன்மஜன்மஸ¤ ப4வந்தி நரா தரித்ரா : || 2 ||
யே வை ப்ரதோஷ ஸமயே பரமேஸ்வரஸ்ய
கர்விந்த்ய நந்ய மனஸோSங்கி4ரி ஸரோஜ பூஜாம் |
நித்யம் ப்ரவிருத்த4 தனதான்ய கலத்ரபுத்ர ஸெளபாக்ய
ஸம்பத3தி4 காஸ்த இஹைவ லோகே || 3 ||
கைலாஸசைல புவனே த்ரி ஜகஜ்ஜனித்ரிம் கௌரீம்
நிவேச்ய கனகா சிதரத்ன பீடே |
ந்ருத்யம் விதா4துமபி4 வாஞ்ச2தி சூலபாணௌ
தேவா: ப்ரதோஷ ஸமயே நு பஜந்தி ஸர்வே || 4 ||
வாக்3தேவீ த்4ருத வல்லகீ சதமகோ2 வேணும் த3த4த் பத்மஜ
ஸ்தாலோன்னித்3 கரோ ரமா ப4கவதீ கேய ப்ரயோகாந்விதா |
விஷ்ணு: ஸாந்த்ர ம்ருத3ங்க வாத3நபடுர்தே3வா: ஸமந்தாத்ஸ்தி2தா :
ஸேவந்தே தமநு ப்ரதோஷ ஸமயே தேவம் ம்ருடா3நிபதிம் || 5 ||
கந்தர்வ யக்ஷ பதகோரக ஸித்த3 ஸாத்4ய வித்யாதரா ரவராப்ஸரஸாம் க3ணாஞ்ச |
யேsன்யே த்ரிலோக நிலயா ஸஹபூ4தவர்கா: ப்ராப்தே பரதோஷ ஸமயே ஹரபார்ச்வ ஸம்ஸ்தா2 : || 6 ||
அத: ப்ரதோஷே சிவ ஏக ஏவ பூஜ்யோsத2 நான்யே ஹரி பத்மஜாத்தா4: |
தஸ்மிந் மஹேசே விதி4நேஜ்யமாநே ஸர்வே பரஸீதந்தி ஸ¤ராதி4நாதா2: || 7 ||
ஏஷ தே தநய: பூர்வஜன்மநி ப்ராஹ்மணோத்தம: |
ப்ரதி க்ரஹைர்வயோ நிந்யே ந தாநாத்தை: ஸ¤கர்மபி : || 8 ||
அதோ தாரித்3ரய மாபந்ந: புத்ரஸ்தே த்3விஜபா4மிநி |
தத்தோஷ பரிஹாரார்த்தம் சரணாம் யாது சங்கரம் ||
|| இதி ஸ்ரீ ஸ்காந்தோக்தம் ப்ரதோஷ ஸ்தோத்ராஷ்டகம் ஸம்பூர்ணம் ||
- நி.த. நடராஜ தீக்ஷிதர்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை
செல் : 94434 79572
mail : yanthralaya@yahoo.co.in
yanthralaya@gmail.com
www.facebook.com/deekshidhar





2 கருத்துகள்:

  1. please give password
    when i press download option its ask password

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் நண்பரே
    நீங்கள் 4 share.com ஒரு account
    create செய்து கொள்ளுங்கள்
    அப்புறம் டவுன்லோட் செய்யுங்கள்

    பதிலளிநீக்கு