செவ்வாய், 9 ஜூலை, 2013

இளவரசனின் உருக்கமான கடிதம் கல் மனதையும் கலங்க வைக்கும்

என் அன்பு காதலி திவ்யாவுக்கு, நீ என்னுடன் இருந்த நாட்களை என்னால் மறக்க முடியாது. நீ என்னை விட்டு பிரிந்த நாளில் இருந்து, என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. காரணம் எனக்கு, உன்னை ரொம்ப பிடிக்கும். ஜூலை, 1ம் தேதி, நீ மீண்டும் வருவாய், நாம் சேர்ந்து வாழ்வோம் என, நம்பிக்கையுடன் காத்திருந்தேன். ஒரு வேளை நீ என்னுடன் வரவில்லை என்றால், கண்டிப்பாக நான் இந்த உலகத்தில் இருக்க மாட்டேன். நீ ஏற்கனவே, உன் அப்பா இறந்ததற்கு காரணம், நீ தான் என்று நினைத்து கஷ்டப்படுகிறாய். நீ அடிக்கடி என்னிடம் சொல்வாய், என் அப்பா உண்மையாகவே என் மீது பாசம் வைத்திருந்தால், என் மீது கொலை பழியை போட்டு விட்டு, என் வாழ்க்கையை இப்படி செய்திருக்க மாட்டார்.


வாழ முடியவில்லை:


அது போலவே, நீ என்னிடம் கேட்பாய் என்பது எனக்கு தெரியும். ஆனால், உண்மையாகவே என்னால், உன்னை விட்டு வாழ முடியவில்லை. எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். நான் உனக்கு என்ன துரோகம் செய்தேன். என் கூட ஏன் வாழ வரமாட்டேங்கிற, கண்டிப்பா எனக்கு தெரியல. நாம இரண்டு பேரும், எவ்வளவு கஷ்டத்துக்கு மேல ஒன்று சேர்ந்தோம்னு உனக்கு நல்லா தெரியும். எனக்கு ரெம்ப ஆசை திவ்யா, நாம இரண்டு பேரும் நல்லா வாழ வேண்டும்னு. நம்மள கேவலமா பார்த்தவங்க முன்னாடி, பொறமைப்படும் அளவுக்கு உன்ன அழகா கண் கலங்காம வச்சுக்கனும்னு எனக்கு ரெம்ப ஆசை. உனக்கு ஒன்று தெரியுமா, நீ என்னோட எல்லா விஷயங்களிலும் சேர்ந்திருக்க. ஆனா, இப்போ எதிலும் எங்கூட இல்ல. ரொம்ப கஷ்டமா இருக்குடா. ப்ளீஸ் திவ்யா என்ன வெறுக்காத... எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். தயவு செய்து என்னை மன்னித்து விடு. நீ என்னிடம் கேட்கலாம்; உண்மையாகவே நீ என் மேல் பாசம் வைத்தவனாக இருந்தால், ஏன் நீ என்னை விட்டு போகனும்னு... கண்டிப்பா சொல்றேன் நான் உன்ன விட்டு போகனும்னு நெனக்கல. எனக்கு உன்னோட சேர்ந்து வாழனும்னு ரொம்ப ஆசை. ஆனால், என்னால உன்னை பிரிந்து வாழ முடியல திவ்யா. என்னை மன்னிச்சுடு. நான் இந்த உலகத்தை விட்டு போறேன். இன்னொரு ஜென்மம் இருந்தா நீயும், நானும், ஒரே ஜாதியில் பொறந்து பெத்தவங்க சம்மதத்தோடு கல்யாணம் பண்ணிக்கனும்னு எனக்கு ஆசையா இருக்குடா திவ்யா. ஐ லவ்யூ சோ மச் பேபி... ஐ லவ் சோ மச்...! இவ்வாறு, எழுதப்பட்டுள்ளது.


தந்தைக்கு எழுதிய கடிதத்தில் உள்ளதாவது: என் பாசத்துக்குரிய அப்பாவிற்கு, என்னை மன்னிச்சுடுங்க அப்பா. அம்மாவையும், பாலாஜி, அக்கா எல்லோரையும் பார்த்துகோங்க, தயவு செஞ்சி அம்மாவை கஷ்டப்படுத்தாதீங்கப்பா. என் நேசமிகு அம்மாவுக்கு, அம்மா என்னை மன்னிச்சுடு; உன்னை நல்லா வச்சு பார்க்கனும்னு ஆசை. நீயும், அப்பாவும் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீங்க என்னை வளர்த்து படிக்க வைக்க. ஆனால், என்னால் உங்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. அடுத்த ஜென்மம் என ஒன்று இருந்தா, நீயும் அப்பாவும் எனக்கு குழந்தையா பிறக்கணும். இந்த ஜென்மத்துல பட்ட கடனை நான் உங்களுக்கு அடுத்த ஜென்மத்தில் தீர்க்கணும்.
என்னோட பெஸ்ட் பிரண்ட் என் அண்ணன் பாலாஜிக்கு... என்னை மன்னிச்சுடு பாலா... நீ எனக்கு எவ்வளவோ சொன்ன, தப்பான முடிவு எடுக்காதன்னு. ஆனால், என்னால முடியல பாலா. "ஐ யாம் ரியலி ஷோ சாரி' பாலா. என்னோட இறப்புக்கு யாரும் காரணமில்லை. இது, என் சுயமான முடிவாகும். என்னுடைய கடைசி ஆசை. நான் இறந்த பின், என்னை பார்க்க திவ்யா வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது; அப்படி ஒரு வேளை திவ்யா வந்தால், யாரும் அவளை திட்ட வேண்டாம்; அவளை அனுமதிக்க வேண்டும். ப்ளீஸ், அவளை யாரும் கோபமாக பேச வேண்டாம். திவ்யா ரொம்ப நல்ல பொண்ணு. எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும். என்னால் அவ கஷ்டப்படறது எனக்கு பிடிக்கல, அவளாவது வாழ்க்கைல சந்தோஷமா இருக்கட்டும். இவ்வாறு, எழுதப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக