வியாழன், 4 ஜூலை, 2013

இளவரசனுக்கு ஒரு அஞ்சலி

இரண்டு தற்கொலைகள்
இது நடக்க யார் காரணம்

கட்சிகளா
கட்சிகள் பேச்சை கேட்கும் சமூகமா

எந்த மதம் சொல்லி குடுத்தது
DNA மூலம் ஜாதி கண்டு பிடிக்க முடியுமா
நம் ரத்த வகை வைத்து ஜாதி பார்க்க முடியுமா

எப்படி ஜாதியை கண்டு பிடிப்பாய்

லஞ்சம் வாங்கும்போது ஜாதி தேவை இல்லை
டாஸ்மாக் செல்லும்போது ஜாதி தேவை இல்லை
விபச்சாரம் பண்ணுபவள் என்ன ஜாதி தேவை இல்லை

ஆனால் அந்த ஜாதி காதல் செய்தால் வந்து விடுகிறது
அதுவும் ஏழையின் ஜாதி மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ள
படுகிறது   என்பதுதான் வருத்தம் அளிக்கிறது

திவ்யாவின் தந்தை உயிரை அவர் குடும்பத்திற்கு யார் தருவார்
இளவரசன் உயிரை அவர் குடும்பத்திற்கு யார் தருவார்




இங்கு தோற்றது காதலா இல்லை

மனிதமா

இன்னும் மனிதர்கள் அரக்கர்களாக இருக்கிறோம்
என்பதை இந்த தற்கொலை பறை சாற்றுகிறது

எமக்கு  தேவை  ஓட்டு
எமக்கு தேவை trp  ரேட்டிங்
எமக்கு தேவை பரபரப்பு செய்தி

இளவரசா இனி நிம்மதியாக தூங்கு
தோற்றுப் போனது உன் காதல் இல்லை

அப்பா அம்மாவை தூக்கி போடப் பட்டாலும்
இந்த சமூகத்தை தூக்கி போடா முடியவில்லை

மனிதா காதல் கொள் அதற்கு முன்
கல்வி கொள் அப்புறம் காசு கொள்

இளவரசா நீ மட்டும் அமெரிக்கா போய்
கிரீன் கார்ட் வாங்கி விட்டு காதல் கொண்டு இருந்தால்
உன் காதல் ஊர் மெச்சி
தெரு முழுக்க ப்ளெக்ஸ் நின்று இருக்கும்

தெரியாமல் போய் விட்டதடா
உனக்கு யாரும் சொல்லி கொடுக்கவில்லையா
சுடு காட்டில் பிணம் எரிக்க கூட பணம் தேவை படும்பொழுது
காதல் கொள்ளவும் பணம் வேண்டும் என் தோழா

இனியாவது இலக்கியம் கிழிக்கும் என் இலக்கியர்களே

காதல் கொள்வதற்கு ஆண்மை மட்டும் போதாது

டப்பு ம் வேண்டும் என்று சொல்லி குடுங்கள்
காதலுக்காக ஏர் பின் முடி ஜடை மாட்டி சேகரிக்காமல்

காசு சேகரிக்க வேண்டும் என்று கற்று கொடுங்கள்
சினிமா கவிதை கதை எல்லாவற்றிலும் சொல்லி கொடுங்கள்


இங்கு ஏழைகளுக்கு மட்டும் ஜாதி பார்க்கப் படுகிறது என்பது ஏன் உனக்கு புரியவில்லை


இனி நீ எங்கள் காதலர் உலகின்
காதல் இளவரசன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக