ஞாயிறு, 21 ஜூலை, 2013

மரியான் ஒரு பார்வை

மரியான் ஒரு பார்வை

9 ௦ களில் வரவேண்டிய படம்
இப்பொழுது வந்து இருக்கிறது



ஒரு காதலன் காதலி
பிரிந்து சேரும் கதை
கடல் கரை ஓரத்தில் வாழும் இளைஞன் ஒரு பெண்ணை காதலிக்கிறார்இல்லை அந்த பெண் இவரை உயிருக்கு உயிராய் காதலிக்கிறார்
ஏன் அவர்களுக்குள் அப்படி ஒரு காதல் வந்தது 

பரத் பாலாவுக்கு  மட்டுமே தெரியும்

வில்லன் வேண்டும் அல்லவா வருகிறார் காதலியின் அப்பாவுக்கு ரெண்டு லட்சம்  பணம் கடன் கொடுத்து இருப்பதால்
காதலியை கல்யாணம் பண்ணி கொள்வேன் என் அடம் பிடிக்க
அந்த பணத்தை நான் தருகிறேன் என சொல்லி ஹீரோ தருகிறார் அதற்கு  பதிலாக சூடான் வேலைக்கு செல்கிறார்
அங்கே பிணயக்கைதியாய் பிடிக்கப்படுகிறார்

கப்பலில் வேலை செய்யும் அவர் ஏன் தீவிரவாதிகளிடம் மாட்டுகிறார் பரத் பாலாவுக்குதான் தெரியும்

ஒரு வழியாய் அங்கிருந்து A.R .ரஹ்மான் அவர்களின் நெஞ்சே எழு பாடல் மூலம் தப்பித்து வருகிறார்
 



2 1 நாட்கள் கைதியாய்  7 நாட்கள் உணவு உண்ணாமல் காதலியின் நினைவாக தப்பித்து வருகிறார்
பார்வதி ஹீரோயின் கொள்ளை அழகு

நிச்சயமாய் ஒரு ரௌண்டு வருவார் 
 

கொஞ்ச நேரம் இருந்தாதான் என்னபாடல்
அற்புதமாய் படம் பண்ணி இருக்கிறார்கள் 

 
சன் மியூசிக்கில் நிறைய நாளைக்கு பார்க்கலாம்

ஆஸ்கார் பிலிம் எப்படி இந்த  மாதிரி திரைக்கதையை ஒத்து கொண்டது புரியவில்லை

அற்புதமான குழு அருமையான வாய்ப்பை தவற விட்டு விட்டார்கள்
தனுஷ் அற்புதமாய் நடிக்கிறார் 
 

ஆனால் திரைக்கதை பிம்பிளிக்கி பிளாக்கி என்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக