வியாழன், 18 ஜூலை, 2013

கவிஞர் வாலி அவர்களுக்கு நினைவஞ்சலி

கவிஞர் வாலி அவர்களுக்கு நினைவஞ்சலி



திருச்சி வாழ்கையில் விரக்தி அடைந்த ஒரு வாலிபர் தற்கொலை செய்ய போக

அப்பொழுது ஒரு பாடல் ஒலிக்கிறது

மயக்கமா தயக்கமா மனதிலே குழப்பமா
உனக்கும் கீழே வாழ்பவர்  கோடி

என்ற பாடல் அந்த வாலிபர் மனதை மாற்ற
தற்கொலை முடிவை தூக்கி எரிந்து விட்டு வாழ்கையை வாழ கிளம்பினார்
அந்த வாலிபர் பெயர் ரங்கராஜன் என்கிற வாலி அவர்கள்

ஓவியம் வரைந்து மாலி அவர்கள் போல் பெரிய ஓவியர் ஆகவேண்டும் என ஓவியம் படித்து விட்டு வர

tms அவர்களின் உதவியால் பாடல் எழுத வந்தார்



வாலி அவர்கள் எழுதிய முதல் பாடல்
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்
போஸ்ட் கார்டில் TMS அவர்களுக்கு எழுதி அனுப்பினாராம் வாலி அவர்கள்



புரட்சி தலைவர் என்ன ஆண்டவரே என்று அழைப்பாராம்

சிவாஜி அவர்கள் என்ன வாத்யாரே என்பாராம்

இவரின் சக கால பிரபலம் மற்றும் நண்பர் திரு சுஜாதா அவர்கள்

மாதவி பொன் மயிலாள் தோகை விரித்தாள் என்ற பாடல் எழுதியவுடன் நிறைய பேர் கண்ணதாசனை பாராட்ட

இல்லை இது வாலி என்கிற கவிஞர் வாலி பாடல் என்றாராம்


MSV சொன்ன ஒரு விஷயம்

வாலி mgr அவர்களுக்கும்
கண்ணதாசன் சிவாஜி அவர்களுக்கும் பாட்டு எழுத இருவருக்கும் எளிதாக இசை அமைக்க முடிந்தது என்றார்





கவிஞர் வாலி ஏவிஎம் நிறுவனத்திற்காக எழுதிய முதல் பாடல் “சர்வர் சுந்தரம்” திரைப்படத்தில் இடம்பெற்ற “அவளுக்கென்ன அழகியமுகம்” என்ற பாடலாகும்.
பாடலின் காட்சியமைப்பில் நடித்துள்ள எம்.எஸ்.வி, டி.எம்.எஸ்.-ஐ பலரும் கவனித்திருப்பீர்கள். வாலிபனாக அரைக்கை சட்டை, பேண்ட் அணிந்து ஸ்டைலாக டி.எம்.எஸ்க்கு முன்பாக அமர்ந்து பாடல் வரிகளை சரிபார்க்கும் கவிஞர் வாலியை பலரும் கவனிக்க மறந்திருப்பீர்கள்.
ஒர் மாலை நேரத்தில் நிதானமில்லால் இருந்த வாலி, ஏவிஎம்.செட்டியார் முன்பாக வாய் நிறைய வெற்றிலை குதப்பியபடி எப்படியோ சமாளித்து அரைமணி நேரத்தில், எழுதிய பாடல்தான் இது. அதன் பின்னர் ஏவிஎம்மின் ஆஸ்தான கவிஞராக தொடர்ந்து 15 படங்களுக்கு பாடல்கள் எழுதினார் கவிஞர் வாலி.

Product Details


கவிஞர் வாலி பற்றிய விக்கி பீடியா


கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கவிஞர் வாலி
பிறப்புடி. எஸ். ரங்கராஜன்
அக்டோபர் 29, 1931 (1931-10-29) (அகவை 81)
இந்தியாவின் கொடி திருவரங்கம், திருச்சி, தமிழ்நாடு, இந்தியா
இறப்புசூலை 18 2013 (அகவை 81)
சென்னை
பணிகவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர்
கவிஞர் வாலி (இயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன், 29 அக்டோபர், 1931 - 18 சூலை 2013) தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார். இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் போன்ற கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை. வாலி திரைப்படங்களுக்கு 10,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அவர் நடித்த திரைப்படங்களுள் ஹேராம், பார்த்தாலே பரவசம் மற்றும் பொய்க்கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
2007-ம் ஆண்டு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.

பொருளடக்கம்

 [மறை

பிறப்பும் வளர்ப்பும்[தொகு]

ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட[1] வாலி பிறந்து, வளர்ந்தது திருவரங்கத்தில். தன் நண்பர்களின் துணையுடன் ‘நேதாஜி” என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி. அன்று திருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததால் வானொலிக்கு கதைகள் நாடகங்கள் எழுதிக் கொடுக்கும் வாய்ப்பு வாலிக்குக் கிடைத்தது.
திருவரங்கத்தில் வாலி நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிக்கையில் பல இளைஞர்கள் பங்கேற்றுக் கொண்டனர். அப்படிப் பங்கேற்று கொண்டவர்களில் ஒருவர் பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா .

வாலி பெயர்க்காரணம்[தொகு]

தமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு ஒவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவரிடம் அவருடைய பள்ளித் தோழன் பாபு, ‘மாலி'யைப் போல சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினார்.

எழுதிய நூல்கள்[தொகு]

சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தங்கள் எழுதியுள்ளார்[1] . அவற்றுள் குறிப்பிடத்தக்கவை: அம்மா, பொய்க்கால் குதிரைகள், நிஜ கோவிந்தம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் மற்றும் அவதார புருஷன்.

வாலி எழுதிய சில பாடல்கள்[தொகு]

பாடல்படம்வருடம்
" ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை... "ஆயிரத்தில் ஒருவன்1968
" மல்லிகை என் மன்னன் மயங்கும்... "தீர்க்க சுமங்கலி1974
" மாதவிப்பொன் மயிலாள் தோகைவிரித்தாள்... "இரு மலர்கள்1967
நான் ஆணையிட்டால்எங்க வீட்டு பிள்ளை(1965)
காற்று வாங்க போனேன் -கலங்கரை விளக்கம்(1965)
சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ-சந்திரோதயம்(1966)
வெற்றி வேண்டுமா போட்டு பாரடா -எதிர்நீச்சல்(1968)
இறைவா உன் மாளிகையில்-ஒளிவிளக்கு(1968)
அந்த நாள் ஞாபகம் -உயர்ந்த மனிதன்(1968)
புன்னகை மன்னன் பூவிழிகண்ணன்-இருகோடுகள்(1969)
ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி-சுபதினம்(1969)
மதுரையில் பறந்த மீன்கொடியை-பூவா தலையா(1969)

விருதுகள்[தொகு]

  • பத்மஸ்ரீ விருது-2007
வாலி ஐந்துமுறை சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருது பெற்றவர்[2].

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக