சிங்கம் முன்னோட்டம் படிக்க இங்கு அழுத்தவும்
சிங்கம் 2 ஒரு பார்வை படிக்க இங்கு அழுத்தவும்
சிங்கம் பாடல்கள் டவுன்லோட் செய்ய இங்கு அழுத்தவும்
ஹரி தனது வெற்றி பாதையை தொடர்ந்து கொண்டு இருக்கிறார்
அஞ்சலி படத்தை கிளு கிளு நடனத்தோடு ஆரம்பிக்கிறார்
ஹரி அவர்கள் திரைக்கதைக்காக மெனக்கெடுவது தெரிகிறது
ஒரு படத்தின் இரண்டாம்பாகம் எடுப்பது பெரிய வேலை அல்ல
ஆனால் கொஞ்சம் கூட continuity குறையாமல் எடுப்பது மிக கடினம்
அதுவும் வெற்றிப்படமாக பண்ணுவதில் ஹரி அவர்களின் உழைப்பு தெரிகிறது
அநேகமாக தமிழுக்கு கிடைத்த இன்னொரு s .p .முத்துராமன் இவர்
முதல் 53 நிமிடம் ஜல்லி அடித்து விட்டு
கதைக்கு வருகிறார்
மீண்டும்சூர்யா காவல் துறை பொறுப்புக்கு வரவும் கதை சூடு பிடிக்கிறது
ஜாமர் கருவி மற்றும் செல்போன் imei எண்கள் மூலமாக
எதிரிகளை கண்டு பிடித்து துவம்சம் பண்ணுகிறார்
ஹாலிவுட் வில்லன் சும்மா பார்வையாலே பட்டையை கிளப்புகிறார்
ஹன்சிகா வந்து டூயட் பாடிவிட்டு இறந்து போகிறார்
ஐயோ பாவம்
சந்தானம் காமெடி கொஞ்சம் பிசிறு தட்ட ஆரம்பித்து விட்டது
வாசிம்ஹான் ரஹ்மான் என வில்லன் கூட்டணி படத்திற்கு கை கொடுக்கிறது
அனுஷ்கா அழகு பதுமையாய் வருகிறார்
சூர்யா தனி நடிப்பால் மெருகு ஏற்றுகிறார்
சூர்யா ஒரு பேட்டியில் சொன்னது போல் ஹரி அவர்கள்
காவல் துறையில் சேர வேண்டும் என்கிற கனவு அவர் படங்கள் மூலம்
நிறைவேறுகிறது
பாடல்கள் சிங்கம் 1 போல் இல்லை என்பதை சொல்லிதான் ஆகவேண்டும்
DSP அவர்கள் பார்த்து செய்யுங்கள்
அச்சமில்லை பாடல் இன்னும் நிறைய இடங்களில் ஒலிக்கும்
படத்தின் திரைக்கதை அமைப்பு வசனம் அற்புதம்
மொத்தத்தில் விறுவிறுப்பான படம்
சிங்கம் 3 எப்போ வரும்
அதிலாவது அனுஷ்கா திருமணம் செய்து கொள்ளட்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக