புதன், 3 ஜூலை, 2013

சிங்கம் 2 முன்னோட்டம்

சிங்கம் 2 முன்னோட்டம்


தமிழ் நாடு முழுக்க aircel புண்ணியத்தில்
சிங்கம் 2 நல்ல விளம்பரம்
எடுத்துக்காட்டுக்கு
1-07-2013 முதல் முட்டைபோண்டா விலை ரூபாய்  பத்து
என்பதற்கு சிங்கம் 2 விளம்பரம் உதவியது என்றால் பாருங்கள்



ஹரி படம் என்றாலே சொல்ல தேவை இல்லை
எல்லாம் ஹிட்டு என்பதில் சந்தேகம் இல்லை
அருள் மற்றும் சேவல் ஆகிய இரண்டு படம் தவிர
எல்லாம் ஹிட் வகைதான்


இவரை ட்விஸ்ட் திலகம் என்று சொல்லலாம்
திரைகதையில் எவாறு ட்விஸ்ட் வைக்கலாம்
என்று இவரிடம் கண்டிப்பாக உதவி இயக்குனர்கள் 
பாடம் கேட்கலாம் 


 சாமி படக் கதையும் சிங்கம் பட கதையும் ஒன்றுதான் ஆனால் தன் திரைக்கதை உத்தியில்  மாற்றம் வைத்து பட்டையை கிளப்புவதில் ஹரிக்கு நிகர் ஹரிதான் 



ஆனால் பில்லா 2 போல் இல்லாமல் முனி 2 போல் ஓடினால் சந்தோசம்தான் 

ஆனால் ஓவர் பில்ட் அப் உடம்புக்கு நல்லது இல்லை என தமிழ் சினிமா ஒரு பழமொழி வைத்து உள்ளது


ஹரி அதை என்ன செய்வார்

என்று பார்ப்போம்




சரி இணையத்தை சுற்றி வந்தபோது சிங்கம் 2 பற்றி கிடைத்த சில சுவராஸ்யமான விஷயங்கள்

 ஜூலை 5: சூர்யாவின் சிங்கம் 2 Vs சஞ்சய் தத்தின் போலீஸ் கிரி!



சிறைக்கு செல்லும் முன் சஞ்சய் நடித்த கடைசி படமான போலீஸ் கிரியை தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடுகிறார் இயக்குநர் ராம நாராயணன் மகன் என் ராமசாமி. 

அதே நாளில் வெளியாகிறது இன்னொரு போலீஸ் படமான சிங்கம் 2. 

விக்ரம் தமிழில் நடித்த சாமி படம் இந்தியில் போலீஸ் கிரி என்ற பெயரில் உருவாகியுள்ளது. 
விக்ரம் வேடத்தில் சஞ்சய் தத் நடித்துள்ள இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார்.
வரும் ஜூலை 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் இப்படத்தை தமிழகம் முழுவதும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இராம.நாராயணனின் மகன் என்.ராமசாமி வெளியிடுகிறார். 
தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ள போலீஸ் கிரி, மிகப்பிரமாண்டமான முறையில் அதிரடி, ஆக்ஷன் காட்சிகளோடு உருவாகியுள்ளது. '
சூரியா நடிப்பில் வெளியாகவுள்ள சிங்கம் 2 படமும் போலீஸ் சம்மந்தப்பட்ட படம் தான், 
அதே நாளில் வெளியாகும் போலீஸ் கிரி படமும், போலீஸ் சம்மந்தப்பட்ட கதைதான். மிகப் பெரிய பொருட்செலவில் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான ஆக்ஷன் காட்சிகளோடு உருவாகியுள்ள போலீஸ் கிரி இந்திப் படமாக இருந்தாலும், 
தமிழ் ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில், கே.எஸ்.ரவிகுமார் இப்படத்தை உருவாக்கியுள்ளதாக' ராமசாமி தெரிவித்துள்ளார்.
இதில் நடித்த நடிகர்கள் விபரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக