புதன், 20 மார்ச், 2013

அறிஞர் அண்ணா அவர்கள் இருந்தால் கலைஞருக்கு எப்படி கடிதம் எழுதுவார்

அறிஞர் அண்ணா அவர்கள் இருந்தால் கலைஞருக்கு எப்படி கடிதம் எழுதுவார்







தம்பி கேட்டேன் ஒரு சேதி

தண்டவாளத்தில் படு என்றாலும் தலைமை பதவி தாங்கு
என்றாலும் ஒரே மாதிரி எடுத்து கொள்வான் என் தம்பி என்று
சொன்னேன் ஒரு நாள்





காலம் கடந்தது
காட்சிகள் மாறின






மத்தியில் ஒரு நேசக்கரம்
நம் முன்
உரிமைக்கு குரல் கொடு உறவுக்கு கை கொடு

இதுதானே நம் தாரக மந்திரம்






நேசக்கரம் நீட்டியது
ஒரு கை
அந்த கை
களங்கம் உள்ளதா
கறைகள் உள்ளதா

என கவனிக்க தவறினோம்

எண்பதுகளில் இலங்கை தமிழருக்கா
கபுரட்சி கனலாய் பொங்கினோம்
இலங்கை தமிழருக்கு
இன்னொரு சொந்த காரனாய் விளங்கினோம்

தவறு எங்கே
உறவு எங்கே கேட்பதற்குள்
இந்திய தலைவர் ஒருவரை இழந்தோம்
அதற்கு காரணம் யார்
என அறியும் முன்னரே
ஆட்சியில் இருந்து
அகற்றப்பட்டோம்

கால நேரம் மாற

கவனிக்கப் பட்டோம்




மத்திய ஆட்சியின் தூணாய் விளங்கினோம்




இலங்கையின் நம் சொந்தங்கள் துண்டாடப் பட







தூரமாய் நின்று துதி பாடுவதா
 துயரம் கொள்வதா

நெஞ்சுக்குள் துயரோடு
உலகுக்கு உயிரோடு
இருந்தோம்

ஆனால் தம்பி அது வரை உன் மேல் இருந்த நம்பிக்கை
உண்மையில் எனக்கிருந்தது

ஆனால் அதற்கு பின்
என் தம்பியா இது
இது வரை கேட்டிட்டேன்


இல்லையில்லை இப்பொழுது செய்தி கேட்டு
இவன்தானே என் தம்பி

நெஞ்சுக்குள்ளே நினைத்திட்டேன்








ஆனாலும் என் தம்பி
நீதானே



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக