வெள்ளி, 8 மார்ச், 2013

வசந்த மாளிகை ஒரு பார்வை

வசந்த மாளிகை ஒரு பார்வை








1985 களில் ஒரு டூரிங் தியேட்டரில் அப்பா பணி ஆற்ற அவருடன் சேர்ந்து
பணி ஆற்றிய பொழுது (செங்கப்படை ஜெயா திரை அரங்கம்)( என்று  k டி‌வி வந்ததோ அன்று டூரிங் திரை அரங்குகளுக்கு சங்கு ஊதப்பட்டது )

அதிகமாக திரை இடப்பட்ட படங்களில் எங்க வீட்டு பிள்ளையும் வசந்தமாளிகையும் நீங்கா இடம் பிடித்தவை





சிவாஜி அவர்களுக்குள் ஆயிரம் ரஜினி இருப்பது இந்த படம் பார்த்தால் தெரியும்

கியுப் என்று பம்மாத்து காட்டுகிறார்கள்
டூரிங் தியேட்டர்களில் பக்காவாக கார்பன் லைட் செட் செய்து
அழகாய் லைட்டிங் செய்து இருப்போம்

இப்பொழுது அந்த நேர்த்தி LCD கம்ப்யூட்டர் மானிட்டரில் மட்டுமே கிடைக்கிறது (டி வீயில் அல்ல )

அப்பா சொல்வார் கார்பனை மிஞ்ச யாராலும் முடியாது என்று உண்மைதான்







வசந்த மாளிகை ஏன் ?ஏன் ?பாடல் முடிவில் ஒரு வரி வரும் அதில் நான் சக்கரவர்த்தியடா 

அந்த வரி கண்ணதாசன் கவி சக்கரவர்தி என்றும் சிவாஜி அவர்கள் நடிப்பு சக்கரவர்தி என்று சொல்லவும் வேண்டுமா


அந்த வரி முடிய டூரிங் தியேட்டர் விசில்களால் காதை பிளக்கும் மறக்க முடியுமா











அதே பாடலை பிதாமகனில் சூரியா ஆடி இருப்பார்

அப்புறம் இன்னொரு செய்தி
சிவாஜி அவர்களின் அம்மா இந்த படம் ஆரம்பிக்கும் முன் மரணம் அடைய

மரணம் அடைந்த 5ம் நாள் படப்பிடிப்பு ஆரம்பிக்க சொன்னாராம் சிவாஜி அவர்கள்

முதல் காட்சி என்ன தெரியுமா மயக்கம் என்ன அந்த மௌனம் என்ன கொஞ்சம் கூட சோகம் தெரியாமல் இருக்கும் முக பாவம்






அந்த ஸ்டைல் அந்த நேர்த்தி சிவாஜி அவர்களால் மட்டுமே முடியும்
இதே படம் வாழ்வே மாயம் கமல் நடிக்க  வந்தது
 வாணிஸ்ரீ சும்மா கலக்கி இருப்பார்
ஒரு காட்சியில் நகை திருட்டு போகும்  சிவாஜி சந்தேகப்படுவார்

அப்பொழுது வாணிஸ்ரீ சும்மா பிச்சு இருப்பார்



நீங்கலுமா என்று சிவாஜியை பார்து கேட்பார்

அடுத்து பாலமுருகன் வசனம்

வாணிஸ்ரீ க்காக ஒரு வீட்டை கட்டி வைத்து அவரை சுற்றி காட்ட போகும்பொழுது ஒரு வசனக்காட்சி வரும்

எனக்கு மட்டும் பறக்கும் சக்தி இருந்தால் அந்த நட்சத்திரங்களை கொண்டு வந்து தோரணமாக தொங்க விட்டுருப்பேன்


மறக்க முடியாத காட்சி அது


மறக்க முடியாத படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக